டிம் குக் அவர்களுக்கு விருது வழங்கிய செரஸ் நிறுவனம்: எதற்கு தெரியுமா?

|

ஆப்பிள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கு மக்களிடையயே அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.
பின்பு சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் மாடலில் பிரச்சனை உள்ளதாக விமர்சனம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பிரச்சனையை சரிசெய்து தொடர்து முன்னேறி வருகிறது ஆப்பிள் நிறுவனம்.

விருது வழங்கப்பட்டது

விருது வழங்கப்பட்டது

இந்நிலையில் ஆப்பிள் நியூயார்க்கில் நடைபெற்ற செரஸ் நிறுவனத்தின் 30-வது ஆண்டு தொடக்க விழாவில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் கலந்துகொண்டார். அதில் ஆப்பிள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நிலைத் தன்மைக்கான முயற்சிகளை பாரட்டும் விதமாக அவருக்கு விருது வழங்கப்பட்டது.

நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும்

நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும்

மேலும் அந்த விருதைபெற்றுக்கொண்டு உரையாற்றி டிக் குக், காலநிலை மாற்றம் அதை சமநிலைத் தன்மைக்கு கொண்டுவரஎதிர்கொள்ள வேண்டிய பொறுப்பை, புதுமைகளை நோக்கி பயணிக்கும் வெற்றிகரமான நிறுவனங்கள் முன்னெடுக்கவேண்டும்.

ஜியோவில் இவர்கள் மட்டும் இலவசமாக வாய்ஸ் கால்ஸ் பேசிக்கொள்ளலாம்!ஜியோவில் இவர்கள் மட்டும் இலவசமாக வாய்ஸ் கால்ஸ் பேசிக்கொள்ளலாம்!

பொறுப்புகளிலிருந்து தவற நேரிடும்

பொறுப்புகளிலிருந்து தவற நேரிடும்

பின்பு அதன் தாக்கங்களுக்கு ஏற்ப அவர்களது திட்டங்களை அமைக்கத் தவறினால் நிர்வகிக்கும் தலைவர்கள் தங்களுடையபொறுப்புகளிலிருந்து தவற நேரிடும் என்று கூறியுள்ளார்.

 லிசா ஜாக்சன்

லிசா ஜாக்சன்

குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் அதன் முன்னெடுப்புகளுக்கான துணைத் தலைவர்
லிசா ஜாக்சனை பாரட்டி பேசிய அவர், எங்கள் நிறுவனம் இப்போது முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு லிசா ஒருபெரும் காரணியாக இருந்துவருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் லிசா ஜாக்சன் அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்துடைய தலைவராக ஓபாமாவின்கீழ் பணியாற்றினார் என்பதும் 2013-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

இன்று: மீண்டும் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ப்ரோ, நோட் 8.!இன்று: மீண்டும் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ப்ரோ, நோட் 8.!

வாய்ப்பாகவே பார்க்கிறோம்

வாய்ப்பாகவே பார்க்கிறோம்

காலநிலை மாற்றத்தை நாங்கள் ஒரு பிரச்சனையாகப் பார்க்கவில்லை. அதைத் தாக்குப்பிடிக்கும் வகையில் புதிய
ஆக்கபூர்வக் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவரக் கிடைத்த வாய்ப்பாகவே பார்க்கிறோம் என்று கூறியுள்ளார் டிம் குக்.

லாபநோக்கமற்ற நிறுவனமாகும்

லாபநோக்கமற்ற நிறுவனமாகும்

அதன்பின்பு ஆப்பிள் நிறுவனம் அதன் 100சதவிகிதம் மின்சாரத் தேவைகளை எவ்வாறு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
பூர்த்தி செய்துகொள்கிறது என்பதைப் பற்றியும் விரவாக உரையாற்றினார்.

இந்த விருதை வழங்கிய செரஸ் நிறுவனம் ற்றுப்புறச் சூழல் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு நிலைத்தன்மையுடைய (Sustainable) ஆற்றல் சக்திகளை ஊக்குவிக்கும் ஒரு லாபநோக்கமற்ற நிறுவனமாகும்.

Best Mobiles in India

English summary
Apple CEO Tim Cook says he’s taking on climate change and needs backup: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X