Home
News

தமிழக பள்ளி மாணவர்களை பாராட்டிய ஆப்பிள் சிஇஓ டிம் குக்: காரணம் இதுதான்.!

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஐபோன் 13 மினியில் புகைப்படங்களை எடுத்த தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆப்பிள் சிஇஓ டிம்குக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள்

அதாவது பள்ளி மாணவர்கள் ஐபோன் மூலம் எடுத்த புகைப்படங்கள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பின்பு A Land of Stories என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பல்வேறு கதைகளை சொல்வதாக தெரிவித்துள்ளார் டிம் குக்.

மேலும் இதுதொடர்பாக மாணவர்கள் எடுத்த புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிம் குக்,இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 40 பேர் ஐபோன் 13 மினி போன் மூலம் புகைப்படங்களை எடுத்துள்ளனர். பின்பு இந்த புகைப்படங்கள் எழும்பூர் வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்று பதிவிட்டுள்ளார்.

டிம் குக் தனது ட்விட்டர் பதிவில்

குறிப்பாக டிம் குக் தனது ட்விட்டர் பதிவில் இரண்டு படங்களை பகிர்ந்துள்ளார். ஒன்று இயற்கைக்காட்சி, மற்றொன்று கடற்கரையில் அமர்ந்திருக்கும் இரண்டு சிறுமிகளின் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எழும்பூர் அருங்காட்சியகத்தில் சென்னை போட்டோ பினாலே அறக்கட்டளை சார்பில் ‛கதைகளின் நிலம்'(A Land of Stories) என்ற பெயரில் கண்காட்சியில் இந்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு இந்த கண்காட்சி
ஏப்ரல் 17 வரை நடைபெற உள்ளது. இதில் தான் மாணவர்கள் எடுத்த படங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள

மேலும் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள அமைப்பு சார்பில் கூறும்போது இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மாநிலத்தின்
பாரம்பரியம், மாநிலம் முழுவதும் ஏராளமாக காணப்படுகிறது. பின்பு இதை ஆவணப்படுத்த தமிழக முழுவதும் உள்ள இளம் கலைஞர்களுக்கு
அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கண்காட்சியானது தமிழகத்தையும் அதன் கதைகளையும் புகைப்படங்கள் மூலம் விளக்கும் தொகுப்பாகும்.அதேபோல் இது மக்களிடம் அழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐபோன் 13 மினி சாதனம்

அதேபோல் ஐபோன் 13 மினி சாதனம் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகமானது. குறிப்பாக 5.45-இன்ச் Super Retina XDR
டிஸ்பிளே வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு ஆப்பிளின் ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இது இயக்கப்படுகிறது.

ஐபோன் 13 மினி மாடலின்

ஐபோன் 13 மினி மாடலின் பின்புறம் 12எம்பி வைடு ஆங்கிள் சென்சார்+12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான சாதனம்.

ஐபோன் 13 மினி சா

குறிப்பாக ஐபோன் 13 மினி சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.69,990-ஆக உள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பான அம்சங்களும்
உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Apple CEO Tim Cook praises Tamil Nadu school students: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X