இந்திய சிறுமியை பாராட்டிய ஆப்பிள் சிஇஓ: காரணம் இதுதான்.!

|

Apple நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் தனித்துவமான வசதிகளைக் கொண்டுள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐஓஎஸ் செயலி

ஐஓஎஸ் செயலி

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான ஐஓஎஸ் செயலியை உருவாக்கியதற்காக இந்தியாவைச் சேர்ந்த 9-வயது சிறுமிக்கு ஆப்பிள் சிஇஓ பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நடுவுல இந்த HiSense வந்தா? சுவர் ஃபுல்லா ஸ்க்ரீன் தான்.. நியாயமான விலையில் புதிய ஸ்மார்ட்டிவி!நடுவுல இந்த HiSense வந்தா? சுவர் ஃபுல்லா ஸ்க்ரீன் தான்.. நியாயமான விலையில் புதிய ஸ்மார்ட்டிவி!

ஹனா முஹம்மது  ரஃபீக்

ஹனா முஹம்மது ரஃபீக்

அதாவது இந்தியாவைச் சேர்ந்த 9 வயது சிறுமியான ஹனா முஹம்மது ரஃபீக் இப்போது துபாயில் பெற்றோருடன் வசித்து வருகிறார். குறிப்பாக ஆப்பிள் ஐபோன்களுக்கான ஐஓஎஸ் செயலியை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்ட இந்த சிறுமி, சமீபத்தில் ஹனாஸ் என்ற கதைசொல்லும் செயலியைஉருவாக்கியுள்ளார்.

Amazon Festival விற்பனை: பட்ஜெட் விலையில் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்.. பாதிக்கு பாதி விலை!Amazon Festival விற்பனை: பட்ஜெட் விலையில் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்.. பாதிக்கு பாதி விலை!

செயலியின் சிறப்பு அம்சம்

செயலியின் சிறப்பு அம்சம்

குறிப்பாக இந்த செயலியில் பெற்றோர்கள் கதைகளை பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் புதிய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஹனா உருவாக்கியுள்ளது இந்த புதிய செயலி அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் இந்த புதிய செயலி.

SBI வங்கி கணக்குடன் ஆதார் தகவலை இணைக்கணுமா? ஆன்லைன் & ஆப்லைன் முறை டிப்ஸ் இதோ.!SBI வங்கி கணக்குடன் ஆதார் தகவலை இணைக்கணுமா? ஆன்லைன் & ஆப்லைன் முறை டிப்ஸ் இதோ.!

 தலைமை செயல் அதிகாரி டிம் குக்

தலைமை செயல் அதிகாரி டிம் குக்

மேலும் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அவர்கள், சிறுமி ஹனாவுக்கு மின்னஞ்சல் மூலம் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது சிறிய வயதில் நீங்கள் செய்த சாதனைகள் அனைத்திற்கும் வாழ்த்துகள். தொடர்ந்து இதைச் செய்யுங்கள், எதிர்காலங்களில் பல அற்புதமான விஷயங்களைச் செய்வீர்கள் என்று அந்த மின்னஞ்சலில் டிம் குக் வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமி ஹனா

அதேபோல் சிறுமி ஹனா முஹம்மது ரஃபீக் கூறியது என்னவென்றால், இந்த செயலியை உருவாக்க கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடிங் எழுதியதாக தெரிவித்தார்.

6GB RAM உடன் மலிவு விலையில் வரும் ஒரே போன் itel Vision 3 Turbo மட்டுமே.! என்னென்ன அம்சங்கள்.!6GB RAM உடன் மலிவு விலையில் வரும் ஒரே போன் itel Vision 3 Turbo மட்டுமே.! என்னென்ன அம்சங்கள்.!

 25 சதவீத ஐபோன் உற்பத்தி

25 சதவீத ஐபோன் உற்பத்தி

மேலும் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி, வரும் 2025-ம் ஆண்டுக்குள் 25 சதவீத ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கும் வகையிலான இந்திய அரசின் செயல்பாடுகளே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ன சைஸ் ஸ்கிரீன் போர் அடிச்சுட்டா? அப்போ இந்த கம்மி விலை டேப்லெட் மாடல்களை வாங்கிடுங்க!சின்ன சைஸ் ஸ்கிரீன் போர் அடிச்சுட்டா? அப்போ இந்த கம்மி விலை டேப்லெட் மாடல்களை வாங்கிடுங்க!

 ஐபோன் 14

ஐபோன் 14

குறிப்பாக 2025 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிள் அதன் ஒட்டுமொத்த உற்பத்தி திறனை 25 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் அதன் ஐபோன் 14 இன் மொத்த உற்பத்தியில் 5 சதவீதத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus Nord Watch விலை இவ்வளவு கம்மியா இருக்குமா? எப்போ வாங்க கிடைக்கும் தெரியுமா?OnePlus Nord Watch விலை இவ்வளவு கம்மியா இருக்குமா? எப்போ வாங்க கிடைக்கும் தெரியுமா?

 ஆய்வாளர் ஜேபி மோர்கன்

ஆய்வாளர் ஜேபி மோர்கன்

சமீபத்தில் ஆய்வாளர் ஜேபி மோர்கன், அடுத்த ஆண்டு அறிமுகமாகும் ஐபோன் 15 இன் தயாரிப்பு விவரங்கள் குறித்த தகவலை வெளியிட்டார். அதில் இந்த ஆண்டு நிலவரப்படி ஆப்பிள் நிறுவனம் சீனாவில் அதன் உற்பத்தியை குறைத்துள்ளதாகவும் அதேநேரத்தில் சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதன் உற்பத்தியை அதிகரித்ததாகவும் குறிப்பிட்டார்.

WhatsApp ட்ரிக்ஸ்- ரிப்ளை மெசேஜ் அதுவா போகும்.. மொபைலை தொடவே வேணாம்..WhatsApp ட்ரிக்ஸ்- ரிப்ளை மெசேஜ் அதுவா போகும்.. மொபைலை தொடவே வேணாம்..

ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான்

மேலும் இதே நிலை தொடரும் எனில் இந்தியாவில் உள்ள ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் உற்பத்தி நிலையங்களில் தான் ஐபோன் 15 மாடல்கள் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடல்களை 2022 இன் நான்காம் காலாண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என கோரியுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் அதிக ஐபோன் உற்பத்தி ஒதுக்கீடுகளை நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Apple CEO Tim Cook praised the 9-year-old Indian girl who created the iOS app: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X