Home
News

காத்திருந்தது வீண் போகல.. டிம் குக் சொன்ன ஒரு வார்த்தை.. குஷியில் Apple யூசர்கள்.. ஏப்ரல் மாதம் ரெடியாகுங்க!

இந்தியாவில் இருக்கும் ஐபோன் (iPhone), ஐபாட் (iPad) மற்றும் மேக் (Mac) யூசர்கள் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருந்த ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) வெளியீட்டை அந்த நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் (Apple CEO Tim Cook) உறுதிப்படுத்தி இருக்கிறார். இவ்வளவு பில்ட்-அப் கொடுக்கும் அளவுக்கு ஆப்பிள் இன்டெலிஜென்ஸில் அப்படி என்ன இருக்கிறது? இந்தியாவில் எந்த மொழியில் கிடைக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களை பார்ப்போம்.

ஆப்பிள், சாம்சங், கூகுள் போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள் அவற்றின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் போன்ற டிவைஸ்களில் ஏஐ பீச்சர்களை கொடுக்கின்றன. இவை ஏஐ பீச்சர்களுடன் ஸ்மார்ட் டிவைஸ்களை ஒருகிணைக்கின்றன. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏஐ பீச்சர்களையும், கூகுள் நிறுவனம் கூகுள் ஏஐ பீச்சர்களையும் கொடுக்கின்றன.

காத்திருந்தது வீண் போகல! டிம் குக் சொன்ன வார்த்தை.. குஷியில் யூசர்கள்!

இதை போலவே ஆப்பின் நிறுவனமானது, ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பீச்சர்களை ஐபோன், ஐபாட் மற்றும் மேக் யூசர்களுக்கு கொடுக்கிறது. ஆனால், இது அமெரிக்காவில் இருக்கும் யூசர்களுக்கு மட்டும் எளிதாக இருக்கும்படி யுஎஸ் ஆங்கிலம் (US English) மொழியில் மட்டுமே கிடைத்தது. பிறகு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் கிடைத்தது.

ஆனால், அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப உள்ளூர்மயமாக்கப்பட்ட ஆங்கில மொழியில் வெளியானது. இதேபோல மற்ற நாடுகளிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் இந்தியாவும் அடங்கும். இப்போது, அந்த வெளியீட்டை ஆப்பிள் சிஇஓ டிம் குக் உறுதி செய்திருக்கிறார். இந்தியா உள்ளூர்மயமாக்கப்பட்ட ஆங்கில மொழியில் ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறது.

மேலும், இந்தியாவை போலவே சிங்கப்பூரிலும் உள்ளூர்மயமாக்கப்பட்ட ஆங்கில மொழியில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பயன்படுத்தி கிடைக்கும் என்பதையும் அவர் உறுதி செய்திருக்கிறார். இந்த மொழிகளில் மட்டுமல்லாமல், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஜப்பானீஸ், கொரியன் மற்றும் சைனீஸ் மொழிகளிலும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் வர இருக்கிறது.

காத்திருந்தது வீண் போகல! டிம் குக் சொன்ன வார்த்தை.. குஷியில் யூசர்கள்!

இந்த ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மூலம் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்? ரைட்டிங் டூல்ஸ் (Writing Tools), மெசேஜ்கள் (Messages), இமேஜ் ஜெனரேஷன் (Image Generation), சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் (Siri Voice Assistant), போட்டோஸ் ஆப் (Photos Apps) போன்றவற்றில் ஏஐ பீச்சர்களை (AI Features) கொடுக்கிறது. முதலில் ரைட்டிங் டூல்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஈமெயில்கள் அல்லது டெக்ஸ்ட் உருவாக்கத்தின் போது, ஏஐ மூலம் அதை ப்ரூஃப் ரீட் செய்து கொள்ளலாம். இதில் கிராமர், சென்டன்ஸ் ஸ்ட்ரக்சர், வேர்ட் சாய்ஸ் போன்ற டூல்களும் கிடைக்கின்றன. கீ-பாய்ட்களை ஹைலைட் செய்து கொள்ளலாம். புல்லட்டின் சேர்க்கலாம். இப்போது, இமேஜ் ஜெனிரேஷன் பீச்சர்களுக்கு வருவோம். ஜென்மோஜ் (Genmoj) பீச்சர் இதில் கிடைக்கிறது.

இதன் மூலம் மெசேஜ் செய்யும்போது, உங்களுக்கு பிடித்தமான எமோஜிகளை உருவாக்க முடியும். அதுவும் நீங்கள் டைப் செய்தால் போதும் ஜெனிரேட் செய்து கொள்ளலாம். அதேபோல இமேஜ் பிளேகிரவுண்ட் பீச்சர் கிடைக்கிறது. இதிலும் நீங்கள் டைப் செய்யும்படியான இமேஜ் ஜெனிரேட் செய்யப்பட்டு கிடைக்கும். இதை சாட் செய்யும்போதும் பயன்படுத்தலாம்.

அதேபோல உங்களது காண்டாக்ட் லிஸ்டில் இருக்கும் நபர்களின் புரொபைல் இமேஜ்களை ஏஐ மூலம் ரீ-ஜெனிரேட் செய்து அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடியும். சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் நேச்சுரல் மொழிக்கு ஏற்ப அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது, உள்ளூர் வட்டார வழக்கில் பேசினாலும் சிரி அதை புரிந்து கொண்டு உங்களுக்கு பதில் அளிக்கும்.

அதேபோல நீங்கள் டிரக்கிங், ஹைக்கிங் செல்ல விரும்பினால், எந்த தேதியில் வெதர் நன்றாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து அந்த தேதியில் உங்களுக்கு ஸ்கெடூல் செய்து கொடுக்கும். போட்டோஸ் ஆப்பிலும் ஏஐ பீச்சர்கள் இருக்கின்றன. உங்களது லைப்ரரியில் இருக்கும் போட்டோக்களில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வீடியோ மூவிக்களாக மாற்றி கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple CEO Tim Cook Confirmed Apple Intelligence Will be Available in India Starting April 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X