வையர்லெஸ் ஹெட்போன் காதில் இருந்து கீழே விழாதாம் : ஆப்பிள் சிஇஒ சுவாரஸ்ய பதில்.!

Written By:

புதிய கருவிகளை அறிமுகம் செய்திருக்கும் ஆப்பிள் நிறுவனம் வழக்கம் போல இம்முறையும் பல்வேறு சர்ச்சை மற்றும் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றது. ஆனாலும் நல்ல வியாபாரம் ஆவது கூடுதல் தகவல். அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வழக்கமாக வழங்கப்படும் ஹெட்போன் ஜாக் எனப்படும் 3.5 எம்எம் ஜாக் புதிய ஐபோன் கருவிளில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. ஹெட்போன் ஜாக் நீக்கம் வெளியீட்டிற்கு முன் சில காலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

எதுவானாலும் ஐபோன்களில் வெற்றிகரமாக ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு விட்டது. ஆப்பிள் கருவியில் பயனர்கள் இசையை அனுபவிக்க வையர்லெஸ் ஹெட்போன்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கருவிக்கு ஆப்பிள் ஏர்பாட்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சர்ச்சை

சர்ச்சை

ஆப்பிள் ஏர்பாட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பலரின் கேள்வி மற்றும் சந்தேகமாக இந்தக் கேள்வி இருக்கின்றது. வையர் இல்லாமல் காதில் அணிந்து கொண்டால் கீழே தவறி விழுந்திடுமோ என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது.

பதில்

பதில்

ஆப்பிள் பிரியர்கள் உட்படப் பலரின் மனதில் இருந்த கேள்விக்கு அமெரிக்க நிகழ்ச்சி வாயிலாக ஆப்பிள் சிஇஒ மூலம் நேரடியாகப் பதில் கிடைத்திருக்கின்றது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் குறித்து டிம் குக் மிகவும் எளிமையான மற்றும் அனைவரும் புரிந்து கொள்ளும் படியான பதில் அளித்துள்ளார்.

பயன்பாடு

பயன்பாடு

'வையர்லெஸ் ஹெட்போன்கள் என்பதால் அறிமுகம் செய்யப்படும் முன் நானும் இந்தக் கருவியை சில காலம் பயன்படுத்தினேன். நாள் முழுக்க பயன்படுத்திய போதும் இந்த ஹெட்போன்கள் காதில் இருந்து கீழே விழவில்லை' என டிம் குக் பதில் அளித்துள்ளார்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

'புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் வடிவமைப்பு அதனைக் காதில் இறுக்கமாக வைத்துக் கொள்வதோடு கீழே விழாமலும் பார்த்து கொள்கின்றது. இதன் காரணமாக பயனர்கள் வடிவமைப்புக்கு ஏற்ப அதனினை சரியாகக் காதில் பொருத்தினால் அது கீழே விழாது' என்றும் டிம் குக் தெரிவித்துள்ளார்.

வையர் ஹெட்போன்

வையர் ஹெட்போன்

'பழைய வகை ஹெட்போன்களில் வையர்களின் எடை தாங்காமல் சில முறை அவை காதில் இருந்து கழன்றிருக்கலாம், ஆனால் புதுவகை வையர்லெஸ் ஹெட்போன்களில் இந்த அனுபவம் இருக்காது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் பயன்படுத்தி எல்லாப் பணிகளையும் மேற்கொள்ள முடிந்ததோடு எந்தச் சமயத்திலும் அது காதில் இருந்து விழவில்லை' என டிம் குக் தெரிவ்த்தார்.

பென்ட்கேட்

பென்ட்கேட்

முன்னதாக ஐபோன் 4 கருவிகள் பாக்கெட்டில் வைக்கும் போது வளைந்ததற்கும் டிம் குக் சரியாக பொருத்தினால் கருவிக்கு எதுவும் ஆகாது எனப் பதில் அளித்திருந்தார். இம்முறையும் இதே போன்ற பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை

விற்பனை

ஆப்பிள் ஏர்பாட்ஸ் குறித்த டிம் குக் விளக்கம் ஆப்பிள் பிரியர்கள் மத்தியில் ஆறுதலாக இருந்தாலும் இவற்றின் விற்பனைக்குப் பின் இது குறித்து விரிவான தகவல்கள் கிடைக்கும். இந்தக் கருவி அக்டோபர் மாதம் விற்பனைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

ஆப்பிள் சிஇஒ பதில் அளித்த காணொளி.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Apple CEO revealss why AirPods Won’t Slip Out Of Your Ears
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்