Home
News

Ghibli கிடக்குது.. iPhones-க்கு வந்த Visual Intelligence AI அம்சம்! அடித்து நொறுக்கும் Apple iOS 18.4 அப்டேட்!

நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்தியாவில் உள்ள ஐபோன்கள் இன்னும் சக்திவாய்ந்ததாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள பல ஆப்பிள் ஐபோன்கள் ஐஓஎஸ் 18.4 அப்டேட் (iOS 18.4 Update) உடன் ஒரு பெரிய சாஃப்ட்வேர் அப்கிரேட்-ஐ பெற்றன. இந்த அப்கிரேட், ஐபோன்களுக்கு புதிய அம்சங்களை கொண்டு வந்தது மட்டுமல்லாமல், இந்தியாவில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐயும் அறிமுகப்படுத்தி உள்ளது

ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) என்பது முற்றிலும் புதியது அல்ல! ஏனெனில் இது ஏற்கனவே இந்தியாவிற்கு வெளியே உள்ள பயனர்களுக்கு அணுக கிடைத்தது. இப்போது இதன்கீழ் கிடைத்த ​​ஆப்பிள் ஏஐ அம்சங்கள் ஆனது இந்தியாவில் உள்ள ஐபோன் பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. இதன் கீழ் ரைட்டிங் டூல்கள், சாட்ஜிபிடி இன்டெக்ரேஷன், இன்னும் ஸ்மார்ட்டான சிரி, ஜென்மோஜி மற்றும் பல அணுக கிடைக்கிறது.

iPhone-களுக்கு வந்த Visual Intelligence AI அம்சம்!

இனிமேல் இது எக்ஸ்க்ளூஸிவ் அல்ல! இதோடு ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் 16 சீரீஸில் மட்டுமே அணுக கிடைத்த, மிகவும் பயனுள்ள ஒரு ஏஐ அம்சம், தற்போது ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro),ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மற்றும் ஐபோன் 16இ (iPhone 16e) ஆகிய மாடல்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன ஏஐ அம்சம்? அதை நீங்கள் தினமும் எவ்வாறு பயன்படுத்தலாம்? இதோ விவரங்கள்:

அதென்ன ஏஐ அம்சம்? ஐபோன் 16இ அறிமுகத்துடன், ஆப்பிள் நிறுவனம் அதன் மலிவு விலை ஐபோனுக்கான ஆக்‌ஷன் பட்டனை அறிமுகப்படுத்தியது. சுவாரசியமாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஆக்‌ஷன் பட்டனில் ஏஐ-பவர்டு விஷுவல் இன்டலிஜென்ஸ் (Visual Intelligence) அம்சத்தை ஒரு ஷார்ட்கட் ஆக சேர்த்தது. ​​இது ஏன் ஒரு பெரிய விஷயம் என்று நீங்கள் யோசிக்கலாம்.

iPhone-களுக்கு வந்த Visual Intelligence AI அம்சம்!

இது பெரிய விஷயம் தான்! ஏனென்றால்? இந்த விஷுவல் இன்டலிஜென்ஸ் ஆனது முதலில் ஐபோன் 16 சீரிஸ்-க்கான ஒரு பிரத்யேக அம்சமாக இருந்தது. ஏனெனில் இந்த அம்சத்தை செயல்படுத்த கேமரா கண்ட்ரோல் பட்டன் தேவைப்பட்டது. ஐபோன் 16இ மாடல் ஆனது ஒரு ஐபோன் 16 சீரிஸ் மாடலாகவும் இருந்தாலும், ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் இந்த அம்சத்தை வெளியிடுவதற்கான அதிக எதிர்பார்ப்பை இது உருவாக்கியது.

எனவே ஐஓஎஸ் 18.4 அப்டேட் உடன், ஆப்பிள் ஒரு புதிய விஷுவல் இன்டலிஜென்ஸ் ஷார்ட்கட்டை வெளியிட்டது. இது ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் மற்றும் ஐபோன் 16இ மாடலுக்கான ஆக்‌ஷன் பட்டனில் விஷுவல் இன்டலிஜென்ஸ்-ஐ சேர்த்தது. இது தினசரி அடிப்படையில் பயன்படுத்தக்கூடிய மிகவும் பயனுள்ள ஏஐ அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

iPhone-களுக்கு வந்த Visual Intelligence AI அம்சம்!

விஷுவல் இன்டலிஜென்ஸ் அம்சந்தை வைத்து என்னென்ன செய்ய முடியும்? கண்ட்ரோல் சென்ட்ரல் அல்லது ஆக்ஷன் பட்டன் வழியாக நீங்கள் விஷுவல் இன்டலிஜென்ஸ்-ஐ செயல்படுத்தினால், ஏஐ ஆதரவு உடன் டெக்ஸ்ட்-ஐ சுருக்கமாக முடியும், மொழிபெயர்க்க முடியும் அல்லது கேமராவை பயன்படுத்தி டெக்ஸ்ட்-ஐ சத்தமாக வாசிக்க வைக்க முடியும்.

மேலும் இது சேர்ச் ஆப்ஷனையும் கொண்டு வருகிறது! கூகுள் லென்ஸை பயன்படுத்துவதை போலவே பயனர்கள் விஷுவல் இன்டலிஜென்ஸ் அம்சம் மூலம் சேர்ச் செயல்பாடுகளை செய்யலாம். கேமராவின் முன் ஒரு பொருளை வைக்கும்போது, ​​உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் கிடைக்கும்: கேளுங்கள் மற்றும் தேடுங்கள். உங்களுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை கிளிக் செய்யவும்.

iPhone-களுக்கு வந்த Visual Intelligence AI அம்சம்!

ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக ஐபோன்களுக்கு வேறு என்னென்ன புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன? முன்னதாக இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்கள் - டீபால்ட் லேங்குவேஜ் ஆக யுஎஸ் இங்கிலீஷ்-ஐ செட் செய்வதன் மூலம் ஏஐ அம்சங்களை பயன்படுத்த ஆப்பிள் அனுமதித்து. தற்போது ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக உள்ளூர் மொழிகளுக்கு மாறுகிறது.

தற்போது ஆப்பிள் ஏஐ-க்கான ட்ராப்-டவுன் மெனுவிலிருந்து இந்தியன் இங்கிலீஷ் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும் சிரி உடனான புதிய உரையாடல் - இந்தி, தமிழ், மராத்தி, பங்களா, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளில், ஆங்கிலத்துடனும் கலந்து பேசலாம். இந்த மாற்றம் கால் செய்ய, ஆப்பிள் மேப்ஸ்-ல் இடங்களை கண்டறிய மற்றும் உங்களுக்குப் பிடித்த பாடல்களை பிளே செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக ஆப்பிள் நிறுவனமானது பயனர்களுக்கு முக்கியமானதாக கருதப்படும் அலெர்ட்களை வழங்கவும் ஏஐ-ஐ பயன்படுத்துகிறது. இந்த அம்சம் இயல்பாகவே முடக்கப்பட்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதியளிக்கிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபோன் மாடல்களில் இந்த புதிய ஏஐ அம்சத்தை முயற்சிக்க விரும்பும் ஐபோன் பயனர்கள் , செட்டிங்ஸ் > நோட்டிபிகேஷன்ஸ் என்கிற விருப்பத்தை அணுகலாம்.

ஆப்பிளின் ஏஐ இமேஜ் டூல் தற்போதுள்ள அனிமேஷன் மற்றும் இல்லுஸ்ட்ரேஷன் வகைகளுடன் ஸ்கெட்ச் விருப்பத்தையும் பெறுகிறது. இந்த ஸ்டைலில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து, ஐபோனில் உள்ள இமேஜ் பிளேகிரவுண்ட் ஆப்பை பயன்படுத்தி, தேவையான ப்ராம்ப்ட்-ஐ வழங்குவதன் மூலம் ஏஐ அடிப்படையிலான இமேஜை உருவாக்கலாம்.

iPhone-களுக்கு வந்த Visual Intelligence AI அம்சம்!

ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக ரைட்டிங் டூல்கள் ஆனது ஆப்பிள் ஏஐ-ஐ பயன்படுத்தி (சில மூன்றாம் தரப்பு ஆப்ளுடன் சேர்ந்து) இமெயில், மெசேஜ்கள் மற்றும் நோட்களில் உள்ள டெக்ஸ்ட்டை-ஐ ரீரைட் செய்யவோ அல்லது சம்மரைஸ் செய்யவோ உதவும். இந்த அம்சங்கள் ஐபோன்கள் மட்டுமின்றி மேக்புக் மாடல்கள் மற்றும் ஐபாட் மாடல்களிலும் வேலை செய்யும்

கடைசியாக, ஐஓஎஸ் 18.4 அப்டேட் ஆனது போட்டோஸ் ஆப்பில் உள்ள படங்களை க்ளீன் செய்ய ஆப்பிள் ஏஐ-ஐ பயன்படுத்துகிறது மற்றும் எளிய விளக்கங்களை பயன்படுத்தி படங்களைத் தேடுவதற்கான சிறந்த வழியையும் கொடுக்கிறது. மேலும் க்ளீன் அப் வழியாக போட்டோவில் உள்ள குறிப்பிட்ட பகுதியை அல்லது பொருளை அகற்றவும் செய்யலாம். சுவாரசியமாக இந்த அம்சங்கள் வீடியோக்களுக்கும் வேலை செய்யும், இது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இரண்டையும் பயன்படுத்தி மெமரிகளை உருவாக்கும் ஒரு டூலாகவும் வேலை செய்யும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க! ஆப்பிளின் 2025 ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட்வைட் டெவெலப்பர்ஸ் கான்ஃபிரென்ஸ் (Worldwide Developers Conference 2025) நிகழ்வானது ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 13 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டபுள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் 4 முக்கியமான அறிவிப்புகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக ஐஓஎஸ் 19 (iOS 19) அறிவிக்கப்படலாம். இரண்டாவதாக ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்- ன் (Apple Intelligence) புதிய ஏஐ அம்சங்கள் (New AI Features) அறிவிக்கப்படலாம். மூன்றாவதாக ஐபோன் மற்றும் ஐபேட்-க்கு வரும் இன்டர்பேஸ் அப்டேட்கள் மேக்ஓஎஸ் 16 வெளியீட்டுடன் மேக்-க்கும் நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) பற்றிய சில அதிகாரப்பூர்வ விவரங்கள் பகிரப்படலாம்.

Best Mobiles in India

English summary
Apple Brings Visual Intelligence Feature to iPhone 16e iPhone 15 Pro Models with iOS 18 4 Update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X