Home
News

என்னயா Apple கூச்சப்படாம இப்படி செஞ்சுட்ட? Nothing-ன் காப்பியா இந்த ஆப்பிள் Beats Studio Buds+ இயர்பட்ஸ்!

ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் ஸ்டூடியோ பாட்ஸ் பிளஸ் (Beats Studio Buds+) என்ற புதிய TWS இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது iOS மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ஆகிய இரண்டு தளங்களிலும் இயங்கும் ஸ்மார்ட்போன்களுடன் இணக்கமானது.

ஆப்பிளின் புதிய Beats Studio Buds+ சாதனம் இப்போது 3 வெவ்வேறு நிறங்களை கொண்ட மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பீட்ஸ் ஸ்டூடியோ பட்ஸ்+ சாதனம் வைட், பிளாக் மற்றும் டிரான்ஸ்பரென்ட் ஆகிய 3 நிறங்களில் வருகிறது. இதில் உலக ஆப்பிள் ரசிகர்களை கவர்ந்த மாடலாக டிரான்ஸ்பரென்ட் நிற மாடல் திகழ்கிறது.

என்னயா Apple கூச்சப்படாம இப்படி செஞ்சுட்ட? Nothing-ன் காப்பியா இது?

இதை பார்த்தவுடனேயே நத்திங் (Nothing) பிராண்டின் நத்திங் இயர் 2 (Nothing Ear 2) TWS இயர்பட்ஸ் சாதனம் போல காட்சியளிக்கிறது. உலக சந்தையில், டிரான்ஸ்பரென்ட் நிறத்தில், கண்ணாடி போன்ற வடிவமைப்புடன் போன் மற்றும் இயர்பட்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக நத்திங் திகழ்கிறது. இந்த வித்தியாசமான ஐடியாவை மக்கள் பெரிதும் வரவேற்றனர் என்பதனால், ஆப்பிள் நிறுவனமும் இந்த யுக்தியை கூச்சப்படாமல் காபி அடித்தது போல் தெரிகிறது.

ஆப்பிள் புதிதாக அறிமுகம் செய்துள்ள Beats Studio Buds+ சந்தானம் இப்போது அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பீட்ஸ் ஸ்டூடியோ பாட்ஸ் பிளஸ் இயர்பட்ஸ்கள் சுவாரசியமான 36 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இவை இரண்டு டைனமிக் லிசனிங் மோட்கள் உடன் வருகிறது. இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் டிரான்ஸ்பரென்சி முறையும் உள்ளது.

பீட்ஸ் ஸ்டுடியோ பட்ஸ்+ ஆனது மேம்படுத்தப்பட்ட ஆடியோ துல்லியம் மற்றும் வசதியான நாள் முழுவதும் பொருத்துவதற்கு ஏற்ற வடிவமைப்புடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ்கள் இரண்டு-அடுக்கு டிரான்ஸ்யூசருடன் வருகின்றன. அவை தெளிவான பாஸ் மற்றும் குறைந்தபட்ச சிதைவை வழங்குகிறது. இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் (ANC) முறை உள்ளது. இவை சிங்கிள் டச் பேரிங் இணைத்தல் மற்றும் 'ஹே சிரி' கட்டளைகளுக்கான ஆதரவைக் கொண்டுள்ளன.

என்னயா Apple கூச்சப்படாம இப்படி செஞ்சுட்ட? Nothing-ன் காப்பியா இது?

இது சாப்ட்வேர் அப்டேட் மற்றும் புதிய அம்சங்களை தானாகவே பெறும் ஆப்பிளின் ஃபைண்ட் மை நெட்வொர்க் அம்சத்தால் ஆதரிக்கப்படுகிறது. இவை iOS இணக்கத்தன்மையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், இது Android ஆதரவையும் பெறுகின்றது. குறிப்பாக, கூகுள் ஃபாஸ்ட் பேர் அம்சத்தை ஆதரிக்கிறது. ஒரே டச்சில் விரைவாக இணைக்கவும், உங்கள் ஜிமெயில் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஆண்ட்ராய்டு அல்லது குரோம் சாதனங்களுடனும் தானாக இணைக்கவும் இது அனுமதிக்கிறது.

ஆடியோ ஸ்விட்ச் அம்சம் - உங்கள் Android, Chromebook மற்றும் பிற இணக்கமான சாதனங்களுக்கு இடையில் ஆடியோவை தடையின்றி மாற்றவும் இது அனுமதிக்கிறது. பைண்ட் மை டிவைஸ் (Google Find My Device) மூலம் உங்கள் தொலைந்த இயர்பட்ஸ்களின் இடங்களை எளிதாகக் கண்டறியவும் அனுமதிக்கிறது. சார்ஜிங் கேஸிலிருந்து 27 மணிநேரம் மற்றும் இயர்பட்ஸிலிருந்து 9 மணிநேரம் வரை மொத்தம் 36 மணிநேர பேட்டரி ஆயுளைப் பெறுகிறார்கள்.

Apple வழங்கும் இந்த புதிய Beats Studio Buds+ ஆனது பிளாக் கோல்டு, டிரான்ஸ்பரென்ட் மற்றும் ஐவரி வைட் போன்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இதன் விலை $169.99 டாலர்களாகும். இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 14,000 மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Beats Studio Buds+ TWS Earbuds Launched With Transparent Design Like Nothing Ear 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X