நீங்க காலேஜ் போறீங்களா? ஆப்பிள் கொடுக்கும் ஸ்பெஷல் ஆஃபர்! அக்டோபர் 2 லாஸ்ட் டேட்!
இந்திய கல்லூரி மாணவர்களுக்கு ஆப்பிள் (Apple) நிறுவனம், தள்ளுபடி விலையில், ஐபாட் (iPads), மேக் (Macs), ஏர்பாட் (AirPods) வழங்குகிறது. இந்த ஆஃபர் ஜூன் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும். இதுகுறித்த விவரம் இதோ.
ஆப்பிள் நிறுவனம், பேக் டு யுனிவர்சிட்டி (Back to University) என்னும் பெயரில், ஆண்டுதோறும் மாணவர்களுக்கென பிரத்யேக ஆஃபர் நாட்களை அறிவிப்பது வழக்கம். இந்த பேக் டு யுனிவர்சிட்டி ஆஃபர் நாட்கள், இப்போது, இந்திய மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரையில் நடக்கிறது.

இந்த நாட்களில் கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர்கள் மட்டும், அசத்தலான தள்ளுபடி விலையில் ஐபாட் (iPads), மேக் (Macs), ஏர்பாட் (AirPods) ஆகியவற்றை வாங்கிக் கொள்ள முடியும். இந்த ஆஃபரை எப்படி பெறுவது, எங்கு கிடைக்கும் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் மும்பையில் உள்ள ஆப்பிள் பிகேசி (Apple BKC) மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் சாகேட் (Apple Saket) ஸ்டோர்களுக்கு நேரடியாக சென்று ஆப்பிள் பேக் டு யுனிவர்சிட்டி ஆஃபரை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோர்களிலும் (Apple Stores) ஆஃபரை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக மாணவர்களின் ஐடி கார்டுகள் மட்டுமே கேட்கப்படும். அந்த ஐடி கார்டில் உள்ள பெயரிலேயே ஆப்பிள் ப்ராடெக்டுக்கான பில் கொடுக்கப்படும். இந்த ஆஃபரில் ஆப்பிள் ப்ராடெக்ட்டுகளை வாங்கும்பட்சத்தில், அந்த மாணவர்களுக்கு ஆப்பிள்கேர் பிளஸ் (AppleCare+) தளத்தில் 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும். மூன்று மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் (Apple Music) மற்றும் ஆப்பிள் டிவி ( Apple TV) சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும்.
இப்படி பல சலுகைகள் உள்ளன. இந்த நேரத்தில் எந்தெந்த ஆப்பிள் ஐபாட், மேக் மற்றும் ஏர்பாட்களுக்கு சிறந்த தள்ளுபடி கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரூ.99,900 மதிப்புள்ள ஆப்பிள் மேக்புக் ஏர் 13 எம்1 சிப்செட் உடன் (MacBook Air 13 M1) ரூ.89,900 விலையில் கிடைக்கிறது. ரூ.1,14,900 மதிப்புள்ள ஏர் 13 (Air 13) லேப்டாப் எம்2 சிப்செட் உடன் ரூ.1,04,900 விலையில் கிடைக்கிறது.
ரூ.1,349,00 மதிப்புள்ள மேக்புக் ஏர் 15 (MacBook Air 15) லேப்டாப் எம்2 சிப்செட் உடன் ரூ. 1,24,900 விலையில் கிடைக்கிறது. மேக்புக் ப்ரோ (Macbook Pro) 13 இன்ச், 14 இன்ச், 16 இன்ச் ஆகியவகை முறையே ரூ.1,19,900, ரூ. 1,84,900, ரூ.2,29,900 விலையில் கிடைக்கிறது. இவற்றின் மார்க்கெட் விலை, ரூ.1,29,900, ரூ.1,99,900, ரூ. 2,49,900 ஆகும். இந்த மேக் மாடல்களில் சிலவற்றிக்கு கிடைக்கும் ஃப்ரீ ஏர்பாட் ஆஃபரும், இதற்கு பொருந்தும்.
இதேபோல ரூ.1,24,900 மதிப்புள்ள ஐமேக் (iMac) ரூ.49,900 விலையில் வாங்கிக்கொள்ள முடியும். இப்படி பல்வேறு ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்த முழுவிவரங்களை ஆப்பிள் தளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








