Home
News

Apple-ன் Back To School ஆபர்.. இலவச ஏர்பாட்ஸ், பென்சில்.. iPad, MacBook மாடல்கள் மீது ரூ.10,000 டிஸ்கவுண்ட்!

ஆப்பிள் (Apple) நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் ஆன்லைன் எஜுகேஷன் ஸ்டோர் (Online Education Store) வழியாக 'பேக் டு ஸ்கூல்' சலுகையை (Back to School) அறிவித்துள்ளது. ஜூன் 17 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த விற்பனை 2025 செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள், அவர்களின் கல்வியாளர்களுடன் சேர்ந்து, ஐபேட், மேக்புக், ஏர்போட்ஸ் மற்றும் பல தகுதியான ஆப்பிள் தயாரிப்புகளில் சிறப்பு தள்ளுபடியை அனுபவிக்க இது உதவுகிறது. விலைக் குறைப்புகளுக்கு கூடுதலாக, வாங்குபவர்கள் சில தயாரிப்புகளை வாங்கும்போது இலவச ஏர்போட்கள் மற்றும் ஆப்பிள் பென்சிலையும் பெறலாம். ஆப்பிள் பேக் டு ஸ்கூல் விற்பனையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

Apple-ன் Back To School ஆபர்.. இலவச ஏர்பாட்ஸ், பென்சில் அறிவிப்பு!

ஆப்பிள் ஐபேட் ஏர் (2025): இந்தியாவில் ஐபேட் ஏர் (2025) மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய 11 இன்ச் வைஃபை வேரியண்ட்டின் விலை ரூ.59,900 இல் தொடங்குகிறது. ஆப்பிளின் பேக் டு ஸ்கூல் சலுகையுடன், இதை ரூ.54,900க்கு வாங்கலாம். அதாவது ரூ.5,000 சேமிக்க முடியும்

ஆப்பிள் ஐபேட் ப்ரோ (2024): ஐபேட் ப்ரோ 2024 மாடல் ஆனது ரூ.10,000 தள்ளுபடியின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. வைஃபை இணைப்புடன் கூடிய 11-இன்ச் மாடலை ரூ.89,900 க்கு வாங்கலாம், இது இந்தியாவில் அதன் சில்லறை விலையான ரூ.99,900 இலிருந்து குறைவாகும்.

மேலும் ஆப்பிள் ஐபேட் ஏர் (2025) மற்றும் ஐபேட் ப்ரோ (2024) ஆகியவற்றின் செல்லுலார் வேரியண்ட்ளையும் தள்ளுபடியுடன் சற்று மலிவான விலையில் வாங்கலாம். இந்த இரண்டு தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆக்சஸெரீஸ் பொருளுக்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். அவர்கள் ஆப்பிள் பென்சில் ப்ரோ (Apple Pencil Pro) அல்லது ஏர்பாட்ஸ் 4 (AirPods 4) ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

ஆப்பிள் மேக்புக் ஏர் (2025): மேக்புக் ஏர் (2025) மாடலை வாங்கினால் ரூ.10,000 சேமிக்கலாம். இந்த லேப்டாப்பின் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட பேஸிக் மாடலின் விலை ரூ.99,900 ஆகும், ஆனால் ஆப்பிள் பேக் டூ ஸ்கூல் சலுகைகளின் ஒரு பகுதியாக செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ.89,900 க்கு வாங்க கிடைக்கும்.

இதேபோல மேக்புக் ப்ரோ (2024): இந்தியாவில் மேக்புக் ப்ரோ 2024 மாடலின் எம்4 சிப், 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 14-இன்ச் ஸ்க்ரீன் கொண்ட பேஸிக் வேரியண்ட்டின் விலை ரூ.1,69,999 முதல் தொடங்குகிறது. இது ரூ.10,000 தள்ளுபடியுடன் ரூ.1,59,900 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் ஆப்பிளின் 'பேக் டு ஸ்கூல்' சலுகையுடன், மேக்புக் ஏர் (2025) மற்றும் மேக்புக் ப்ரோ (2024) ஆகிய மாடல்களை வாங்கினால் ஒரு இலவச ஆக்சஸெரீஸ் பொருளும் சேர்க்கப்படலாம். இதில் மேஜிக் மவுஸ், டச் ஐடியுடன் கூடிய மேஜிக் கீபோர்டு, மேஜிக் டிராக்பேட் அல்லது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) கொண்ட ஏர்போட்ஸ் 4 ஆகியவைகள் அடங்கும்.

ஆப்பிள் ஐபேட் ஏர் 2025 முக்கிய அம்சங்கள்: ஆப்பிள் ஐபேட் ஏர் 2025 மாடல்கள் எம்3 சிப்செட் (M3 Chip) உடன் வருகின்றன. அதாவது இது கடந்த ஆண்டு எம்2 சிப்களுடன் அறிமுகமான 6த் ஜென் ஐபேட் ஏர் (6th Gen iPad Air with M2 chips) மாடல்களின் அப்கிரேடட் வெர்ஷன்களாகும்.

ஆப்பிள் நிறுவனமானது அதன் லேட்டஸ்ட் ஐபேட் ஏர் மாடல்களை 2 வகையான டிஸ்பிளே அளவுகளில் அறிமுகப்படுத்தி உள்ளது: 11 இன்ச் (2360 x 1640 பிக்சல்கள்) மற்றும் 13 இன்ச் (2732×204 பிக்சல்கள்) மாடல்கள். இரண்டுமே ரெடினா ட்ரூ டோன் டிஸ்பிளேவை கொண்டுள்ளன.

இது 8-கோர் ஆப்பிள் எம்3 சிப் (8-core Apple M3 chip) மூலம் இயங்குகிறது. இதில் 9-கோர் ஜிபியு (9-core GPU) மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் (16 core Neural Engine) அடக்கம். இந்த ப்ராசஸர் 8ஜிபி ரேம் (8GB RAM) மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் (1TB Internal Storage) உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

ஆப்பிள் ஐபேட் ஏர் 2025 மாடலில் உள்ள கேமராக்களை பொறுத்தவரை 4கே 60fps ரெக்கார்டிங் ஆதரவுடன் 12எம்பி ரியர் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 12எம்பி சென்சார் உள்ளது. ஆப்பிளின் இந்த புதிய ஐபேட் ஏர் மாடல் ஆனது ஐபேட்ஓஎஸ் 18 (iPadOS 18) கொண்டு இயங்குகிறது.

குறிப்பிடத்தக்க மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது டாப் ஐடி, யூஎஸ்பி 4, 5ஜி அல்லது வைஃபை 6இ வேரியண்ட் வகைகள், தண்டர்போல்ட் 3 ஆதரவு மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவைகளை கொண்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஐபேட் ஏர் 2025 மாடல்கள் ஆனது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple Back To School Offer 2025 Free Discounts on iPad MacBook Free accessory Until September 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X