இனி ஆப்பிள் ஐபோனை நீங்களே சர்வீஸ் செய்யலாம்.. ஆப்பிளின் இந்த புது திட்டம் பற்றி தெரியுமா?

|

ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக செல்ப் சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எதிர்பாராத அறிவிப்பின் மூலம், நீங்கள் உங்களின் சொந்த ஆப்பிள் ஐபோன் சாதனத்தைச் சரிசெய்வதற்குத் தேவைப்படும் அசல் பாகங்களை நிறுவனத்திடமிருந்து பெற்று, ஆப்பிள் செல்ப் சர்வீஸ் வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் சாதனத்தைச் சரி செய்துகொள்ளலாம். ஐபோன் தயாரிப்பாளர் "செல்ப் ப்சர்வீஸ் சேவை" என்ற பெயரில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள செல்ப் சர்வீஸ் திட்டம்

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள செல்ப் சர்வீஸ் திட்டம்

இதில் சேரும் வாடிக்கையாளர்கள் அசல் பாகங்கள் மற்றும் கருவிகளை அணுகுவதன் மூலம் தங்கள் சொந்த பழுதுபார்ப்புகளை முடிக்க முடியும். இது ஆப்பிள் நிறுவனத்திற்கு வழக்கமான நடவடிக்கை அல்ல. அதன் அசல் பாகங்கள் மற்றும் கருவிகளை யாருக்கும் கிடைக்கச் செய்வது என்பது எதிர்பார்க்கப்படாத மிகப் பெரிய விஷயம். ஆப்பிள் அடிக்கடி சர்வீஸ் செய்யப்படும் மாட்யூல்களில் இருந்து பொதுவான பழுதுபார்ப்புகளில் கவனம் செலுத்துகிறது. இதில் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 வரிசைகளுக்கான டிஸ்பிளே பழுது, பேட்டரி மாற்றுதல் மற்றும் கேமரா தொகுதிக்கான மாற்றம் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்.

M1 மேக் கணினிகளுக்கும் செல்ப் சர்வீஸ் சேவையா?

M1 மேக் கணினிகளுக்கும் செல்ப் சர்வீஸ் சேவையா?

இதற்குப் பிறகு, ஆப்பிள் அதன் M1 மேக் கணினிகளைத் தனது செல்ப் சர்வீஸ் பழுதுபார்க்கும் திட்டத்தில் சேர்க்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் உண்மையான உதிரிப்பாகங்களுக்கு ஆர்டர் செய்ய முடியும், மேலும் பயன்படுத்திய பகுதி திரும்பப் பெற்றால் அவர்கள் வாங்கியதற்கான கிரெடிட்டைப் பெறுவார்கள். ஆப்பிளின் புதிய ஸ்டோர் 200க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பாகங்கள் மற்றும் கருவிகளை நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் வழங்குகிறது.

ஆப்பிள் நிறுவனம் முதன் முதலில் வடிவமைத்த கணினி ஏலத்திற்கு வந்தது.!ஆப்பிள் நிறுவனம் முதன் முதலில் வடிவமைத்த கணினி ஏலத்திற்கு வந்தது.!

பழுதுபார்க்க பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழி

பழுதுபார்க்க பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழி

இந்தத் திட்டத்தின் அறிவிப்பு இருந்தபோதிலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இன்னும் தொழில்முறை பழுதுபார்ப்பு வழங்குநரைப் பார்க்க வேண்டும் என்றும், உண்மையான ஆப்பிள் பாகங்களைப் பயன்படுத்தும் சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் "பழுதுபார்க்க பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழி" என்றும் ஆப்பிள் இன்னும் பரிந்துரைக்கிறது. இந்த செல்ப் சர்வீஸ் சேவை 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் கிடைக்கும், மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மேலும் பல நாடுகளுக்கு விரிவடையும்.

DIY செல்ப் சர்வீஸ் திட்டம் வரவேற்கப்படுமா?

DIY செல்ப் சர்வீஸ் திட்டம் வரவேற்கப்படுமா?

DIY பழுதுபார்ப்புகளுக்கான மாற்று பாகங்களை வாங்க ஆப்பிள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப் போகிறது என்பதை அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம், மேலும் சாதனத்தை ஆப்பிள் ஸ்டோருக்கு எடுத்துச் செல்வதற்கு எதிராக அதைச் நாமே சரி செய்வது எவ்வளவு மலிவாக இருக்கும் என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களின் நெட்வொர்க்கிற்கு வெளியே ஆப்பிள் சாதனத்தைப் பழுதுபார்ப்பதை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கடினமாக்குவதாக ஆப்பிள் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது.

நீர் எதிர்ப்பு ஆதரவோடு மோட்டோ ஜி பவர் (2022): 3 கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி- விலை ரூ.14,700 மட்டுமே!நீர் எதிர்ப்பு ஆதரவோடு மோட்டோ ஜி பவர் (2022): 3 கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி- விலை ரூ.14,700 மட்டுமே!

ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதி

ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதி

இத்துடன் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால், சில குறிப்பிட்ட நிபந்தனைகளை மற்றும் சூழலில் மட்டுமே இதை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சில நேரங்களில் ஃபோன்கள் பழுதுபார்க்க சில நாட்களுக்கு மேல் ஆகலாம், மேலும் வாடிக்கையாளர்கள் தொலைப்பேசியைச் சேவை நிலையத்தில் விட்டுவிட வேண்டியிருக்கும்.

இவர்களுக்கு மட்டுமே இந்த இலவச ஆப்பிள் ஐபோன் XR சாதனம் கிடைக்கும்

இவர்களுக்கு மட்டுமே இந்த இலவச ஆப்பிள் ஐபோன் XR சாதனம் கிடைக்கும்

தற்போதைக்கு இரண்டாம் நிலை சாதனத்தைப் பயன்படுத்த முடியும் என்றாலும், பெரும்பாலான பயனர்கள் தங்களின் முதன்மைச் சாதனங்களில் பெரும்பாலான தரவைச் சேமித்து வைத்திருக்கிறார்கள். மேலும் நீண்ட காலத்திற்கு அதிலிருந்து விலகி இருப்பது கடினமாக இருக்கும். பயனர்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தைப் போக்க, ஆப்பிள் ஒரு புதிய உத்தியை வகுத்துள்ளது. சாதனத்தைப் பழுதுபார்ப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் போது, ​​அதற்கு மாற்றாக ஐபோன் XR ஐ லோனர் சாதனமாக வழங்கத் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நல்ல முன்னேற்றம்- கையில காசு இல்லனா கூகுள் பே-ல போடுப்பா: நூதன வழிப்பறி., அதிர்ந்து போன இளைஞர்!நல்ல முன்னேற்றம்- கையில காசு இல்லனா கூகுள் பே-ல போடுப்பா: நூதன வழிப்பறி., அதிர்ந்து போன இளைஞர்!

தொலைப்பேசியைச் சேவை நிலையத்தில் விட்டுச் செல்ல இனி கவலை இல்லை

தொலைப்பேசியைச் சேவை நிலையத்தில் விட்டுச் செல்ல இனி கவலை இல்லை

இந்தச் சேவை அமெரிக்காவிலும் பிற பிராந்தியங்களிலும் கிடைக்கப் போகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆப்பிள் ஐபோன் 8 ஐ கடன் வாங்கும் சாதனமாக வழங்குகிறது. ஆனால் மேக்ரூமர்ஸின் அறிக்கையின்படி, ஆப்பிள் தனது தொலைப்பேசியைச் சேவை நிலையத்தில் விட்டுச் செல்ல வேண்டிய பயனருக்கு மட்டும் வழங்கும் என்று கூறியுள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை லொனர் சாதனமாக வழங்கத் தொடங்கும்.

A12 பயோனிக் சிப்

A12 பயோனிக் சிப்

நீண்ட காலத்திற்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை இப்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. ஐபோன் 8 இன் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது என்பதனால் நிறுவனம் ஐபோன் XR அதன் மாற்றாகக் கருதப்படலாம் என்று கூறப்படுகிறது. பிந்தைய சாதனம் டூயல் சிம் ஸ்லாட்டுகள், A12 பயோனிக் சிப் மற்றும் மிகவும் அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. இருப்பினும், இந்த சேவை தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் மற்ற இடங்களுக்கும் கிடைக்கும்.

14 நாட்களுக்குள் கடன் வாங்கிய சாதனத்தைத் திருப்பித் தர வேண்டுமா?

14 நாட்களுக்குள் கடன் வாங்கிய சாதனத்தைத் திருப்பித் தர வேண்டுமா?

இருப்பினும், ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதன் FAQ பக்கத்தில் நிறுவனம் அனுமதித்துள்ளபடி லொனர் சாதனத்திற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற விபரத்தைப் பதிவிட்டுள்ளது. அதன் படி, உண்மையில் பயனர் சாதனத்தைச் சரி செய்ய நீண்ட நேரம் எடுக்கும் சாதனங்களுக்கு மட்டுமே லொனர் சாதனம் மாற்றுச் சாதனமாக வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும், நுகர்வோர் தங்கள் அசல் சாதனம் பழுதுபார்க்கப்பட்ட பிறகு 14 நாட்களுக்குள் கடன் வாங்கிய சாதனத்தைத் திருப்பித் தர வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்த சிக்கலும் எழாது

எந்த சிக்கலும் எழாது

வாடிக்கையாளர்கள் லோனர் சாதனத்தில் சேமிக்கப்பட்ட அனைத்து தரவையும் நீக்கிய பின் நிறுவனத்திடம் திரும்பத் தரவேண்டும். வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோர்ஸ் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களில் லொனர் வழங்கும் சாதனங்களைப் பெறலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பழுதுபார்க்கத் தொலைப்பேசியை வழங்கிய நபர்கள் அவர்களின் தொடர்புடன் இணைத்திருப்பதில் எந்த சிக்கலும் எழாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Announces Self Service Repair With Customer Access To Parts And Mannuals : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X