Home
News

ஐபோன்கள் அறிமுகமான வேகத்தில் அடுத்த நிகழ்ச்சியை அறிவித்த ஆப்பிள்.. இந்த முறை என்ன ஸ்பெஷல்?

கடந்த மாதம் ஐபோன் 18 சீரிஸை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம். இந்நிலையில் அக்டோபர் 13-ஆம் தேதி மற்றொரு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு 'வெல்கம் ஹோம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இந்த வெல்கம் ஹோம் நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஐபோன்கள் அறிமுகமான வேகத்தில் அடுத்த நிகழ்ச்சியை அறிவித்த ஆப்பிள்..

புதிய சாதனங்கள்
ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் மார்க் குர்மனின் தகவலின்படி, டிஸ்ப்ளே வசதியுடன் கூடிய புதிய ஹோம்பேட் ஸ்மார்ட் ஹோம் ஹப், ஹோம்பாட் மினி 2 மற்றும் புதிய ஆப்பிள் டிவி செட்-டாப் பாக்ஸ் ஆகிய சாதனங்களை ஆப்பிள் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும், எல்ஜி மற்றும் ஷ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனங்களுடன் இணைந்து ஆப்பிள் புதிய ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும் அறிமுகப்படுத்தலாம் என மார்க் குர்மன் தெரிவித்துள்ளார். இதில் ஸ்மார்ட் கதவுப் பூட்டுகள், பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் வீட்டின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் தெர்மோஸ்டாட்கள் உள்ளிட்ட சாதனங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சாதனங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், பெரும்பாலான சாதனங்கள் புதிய சிரி ஏ.ஐ. (Siri AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஹோம்பேட் (HomePad) சாதனம் பயனர்களின் முகம் மற்றும் குரலை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஏற்ற இசை, குறிப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை வழங்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்த ஹோம்பேட் சாதனம் வீட்டில் உள்ள ஸ்மார்ட் சாதனங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து கட்டுப்படுத்த உதவும் மையமாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹோம்பேட் சாதனத்தில் 7 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) தொழில்நுட்பத்தை ஆதரிப்பதுடன், ஹோம் ஓ.எஸ். (homeOS) இயங்குதளம் மற்றும் ஆப்பிளின் செயலிகளையும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாக, ஹோம்பாட் மினி 2 (HomePod mini 2) மற்றும் ஆப்பிள் டிவி 4K (Apple TV 4K) ஆகிய சாதனங்கள் மேம்படுத்தப்பட்ட வேகமான பிராசஸர்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தச் சாதனங்களில் A17 Pro சிப்செட் இடம்பெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய N1 வயர்லெஸ் சிப் மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) ஆதரவும் இந்தச் சாதனங்களில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம், சாதனங்களின் செயல்திறன் மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன்கள் அறிமுகமான வேகத்தில் அடுத்த நிகழ்ச்சியை அறிவித்த ஆப்பிள்..

ஐபோன் டுயோ விற்பனை
ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் சுமார் ரூ.3 லட்சம் விலையில் அறிமுகப்படுத்திய ஐபோன் டுயோ, வரும் அக்டோபர் 23-ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், அக்டோபர் 27-ஆம் தேதி அல்லது அதனைச் சுற்றியுள்ள நாட்களில் புதிய தொடுதிரை மேக்புக் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஐபேட் மினி ஆகிய சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே இந்த புதிய சாதனங்களில் ஏதேனும் ஒன்றை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். ஹோம்பாட் மாடலை தவிர, டோர் வெல், பாதுகாப்பு கேமராக்கள், தெர்மோஸ்டாட்கள், டெட் போல்ட் லாக், தொதுதிரை மேக்புக் மற்றும் ஒஎல்இடி ஐபேட் மினி ஆகியவை ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு வகைகளாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Apple Announces New October 13 Event After iPhone Launch Heres Whats Coming
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X