ஆப்பிளின் Cheapest ஐபேட் அறிமுகம்; விலையை சொன்னால் நம்புவீர்களா?
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் ஐபேட் சாதனத்தில் 64-பிட் ஃபியூஷன் சிப்செட் வசதி மற்றும் எம்10 செயலியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் கல்வி சார்ந்த நிகழ்ச்சியில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 9.7-இன்ச் ஐபேட் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். மேலும் இதனுடன் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆப்பிள் ஐபேட் சாதனம் கூகுள் க்ரோம்புக் சாதனங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். கல்வி சார்ந்த மிக அதிகமான செயலிகளை இந்த சாதனத்தில் எளிமையாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறங்கள்:
9.7-இன்ச் கொண்ட ஆப்பிள் ஐபேட் சாதனம் ஸ்பேஸ் கிரே, சில்வர், மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபேட் சாதனம் உடன் வரும் பென்சில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்:
குறிப்பாக இப்போது வெளிவந்துள்ள ஐபேட் சாதனத்தில் ஆசிரியர்கள் நேரடியாக பக்கங்களை மார்க் அப் செய்ய முடியும் எனத் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐபேட்களுக்கான கிரேயான் ஒன்றை லாகிடெக் உருவாக்கி வருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிக்சல்:
இக்கருவி 9.7-இன்ச் எல்இடி பேக்லைட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 2048x1536 பிக்சல் தீர்மானம் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஐபேட் சாதனம்.

ஃபியூஷன் சிப்செட்:
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் ஐபேட் சாதனத்தில் 64-பிட் ஃபியூஷன் சிப்செட் வசதி மற்றும் எம்10 செயலியைக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புளூடூத் 4.2. மற்றும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேமரா:
இந்த சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் டச் ஐடி, ஹெச்டி ஃபேஸ் டைம் கேமரா போன்ற அம்சங்களும் இதனுடன் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 10 மணி நேர பேட்டரி பேக்கப் வசதி கொண்டுள்ளது இந்த ஐபேட் சாதனம்.


விலை:
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஐபேட், மாணவர்களுக்கு 229 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.19,394), மற்ற வாடிக்கையாளர்களுக்கு 329 டாலர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பின்பு ஐபேட் உடன் வரும் பென்சில் விலை 89 டாலர்கள் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விற்பனை அடுத்த வாரம் முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications