புதிய சகாப்தம் படைக்க வரும் ஆப்பிள் ஐபேட்-3 டேப்லட்!

Posted By:

புதிய சகாப்தம் படைக்க வரும் ஆப்பிள் ஐபேட்-3 டேப்லட்!

தரமான தொழில் நுட்பங்களை வழங்குவதன் மூலம் எலக்ட்ரானிக் சாதன உலகில் வாடிக்கையாளர்களின் மனதில் தனி இடத்தினை பெற்றுள்ளது ஆப்பிள் நிறுவனம். வருகிற மார்ச் 7-ஆம் தேதி ஐபேட்-3 டோப்லட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்கள் பரிமுதல் செய்யப்பட்ட செய்தி அனைவருக்கும் தெரிந்த விஷயம். இது போன்ற சில வர்த்தக ரீதியான இடர்பாடுகளை சந்தித்தும் ஆப்பிள் நிறுவனம், தனது அடுத்த அடுத்த படைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கொண்டே தான் இருக்கிறது.

கடந்த ஆண்டு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட 9 நாட்களில், ஐபேட்-2 வெளியிடப்பட்டது. ஐபேட் தயாரிப்புகளில் புதிதான ஐபேட்-3 வாடிக்கையாளர்களின் மனதை வெகுவாக கவரும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த எதிர் பார்ப்புகளுக்கு வருகிற மார்ச் மாதம் வாடிக்கையாளர்கள் தீர்வு காணலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot