ஆப்பிள் நிறுவனம் அறிவித்த 1 மில்லியன் டாலர் பரிசு! என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் 'பக் பவுண்டி ப்ரோக்ராம்' என்ற திட்டத்தின் கீழ் தனது ஆப்பிள் ஐ-கிளவுட் சேவை மற்றும் அதன் ஆப்பிள் சாதனங்களில் உள்ள பக்- பிழைகளை கண்டறிந்து கூறினால், அந்த நபருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பக் பவுண்டி ப்ரோக்ராம் திட்டம்
சான் பிரான்சிஸ்கோ: ஐபோன் தயாரிப்பாளர் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், முன்னர் மூடிய பிழை கண்டுபிடிக்கும் பக் பவுண்டி ப்ரோக்ராம் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்படும் குறைபாட்டைப் பொறுத்து, ஆப்பிள் தயாரிப்பு நிறுவனம் பிழையை கண்டுபிடித்த ஹேக்கர் அல்லது ஆராய்ச்சியாளருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஐ-கிளவுட் சேவை மற்றும் ஆப்பிள் சாதனங்களில் உள்ள பக்
அனைத்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களும் இந்த திட்டத்தின் கீழ் பங்குபெறலாம். ஐ-கிளவுட் சேவை மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள பக்-களை கண்டறிந்து புகாரளிப்பவர்களுக்கு லாபகரமான தொகையை ஆப்பிள் நிறுவனம் வழங்கும் என்று தற்பொழுது அறிவித்துள்ளது.

எவ்வளவு பரிசு தெரியுமா?
'பக் பௌண்ட்டீஸ் ப்ரோக்ராம்' என்ற திட்டத்தின் கீழ் தனது ஆப்பிள் நிறுவனத்தின் சேவையில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டிக் கண்டுபிடித்துத் தரும் ஆராய்ச்சியாளர்களுக்கு சுமார் 100,000 அமெரிக்க டாலர் முதல் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வரை பரிசு வழங்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பவுண்டி திட்டத்தின் படி பரிசு வழங்கப்படும்
ஐ-கிளவுட்டில் உள்ள பிழைகள், இணையம் வழியான சாதனத் தாக்குதல்கள், பயனர் தொடர்புடன் நெட்வொர்க் தாக்குதல்கள் உள்ளிட்ட பல பக் வகைகளில், எந்த பக் வகை ஆப்பிள் தளத்தில் இயங்கும் சாதனங்களைப் பாதிக்கக்கூடும் என்பதைக் கண்டிருந்தது கூறுபவர்களுக்கு பவுண்டி திட்டத்தின் படி பரிசு வழங்கப்படும்.

ஹேக்கர்களுக்கு வேட்டை தான்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளர் நிறுவனம் லாஸ் வேகாஸில் நடந்த பிளாக் ஹாட் பாதுகாப்பு மாநாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களுக்காகச் சிறப்பு ஐபோன்களை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தைப் போல் கூகுள் நிறுவனமும் பக் பவுண்டி திட்டத்தை வைத்துள்ளது. இதன் மூலம் பிழையை சுட்டிக்காட்டும் ஹேக்கர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications