ஆப்பிள் எக்ஸ்டரா எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடி!

|

ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன்களுக்கு அவ்வப்போது சலுகைகளையும் தள்ளுபடியையும் அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஆப்பிள் ஐபோன்களுக்கு தனி வாடிக்கையாளர் பட்டாளமே இருக்கிறது. ஆப்பிள் சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் தற்போது ஆப்பிள் நிறுவனம் சிறந்த சலுகையை அறிவித்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வழங்கியுள்ளது. ஐபோன் வாங்குபவர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை மாற்றி ஐபோன் வாங்குபவர்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் ஒரு பகுதியாக பழைய ஸ்மார்ட்போனை மாற்று ஐபோன் வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகை ஆப்பிள் அறிவித்தாலும் அதில் கூடுதல் கவனிக்கத் அம்சம் இல்லை எனவே பெரும்பாலானோர் தங்கள் சாதனங்களை உள்ளூர் சந்தையில் விற்று பணமாக்கி அதன்மூலமே சாதனம் வாங்குவார்கள் பெரிதளவு எக்ஸ்சேஞ்ச் சலுகைக்கு விருப்பம் காட்டமாட்டார்கள் என யூகிக்கப்படுகிறது.

ஆப்பிள் எக்ஸ்ட்ரா எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி

ஆப்பிள் எக்ஸ்ட்ரா எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி

ஆப்பிள் எக்ஸ்ட்ரா எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் எக்ஸ்ட்ரா டிரேட் இன் கிரெடிட் ஆஃபர் தகுதியான ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூடுதல் டிரேட் இன் கிரெடிட் தள்ளுபடியை ஆப்பிள் கொண்டு வருகிறது. மேலும் இது குறிப்பிடத்தக்க வகையில் சாத்தியமான ஐபோன் வாங்குபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால அளவு சலுகையை வழங்குகிறது. கூடுதல் வர்த்தக கடனாக ரூ.1000 முதல் ரூ.4000 வரை பழைய ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் ரூ.3000 பழைய ஐபோன்களுக்கும் வழங்கப்படுகிறது. பழைய சாதன பரிமாற்றத்துக்கு வழங்கப்படக்கூடிய கூடுதல் தள்ளுபடியாக இது இருக்கிறது. இந்த சலுகையானது இந்தியாவில் மே 31, 2022 வரை கிடைக்கும். உங்கள் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வர்த்தகம் செய்ய திட்டமிட்டிருந்தால் அதற்கான விவரங்களை பார்க்கலாம்.

ஆப்பிள் பரிமாற்ற சலுகை

ஆப்பிள் பரிமாற்ற சலுகை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்றை பரிமாற்ற சலுகைக்கு பயன்படுத்தி புதிய ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் கூடுதல் டிரேட் இன் செலவு உட்பட எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி குறித்து பார்க்கலாம். ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் பயனர்கள் பரிமாற்றத்தில் கவர்ச்சிகரமான தள்ளுபடியை பெறலாம். குறிப்பிடத்தக்க வகையில் ஒன்பிளஸ் 8 சாதனத்தை பரிமாற்றம் செய்யும் போது ரூ.15,300 வரை பரிமாற்ற தள்ளுபடியும், ஒன்பிளஸ் 8டி சாதனத்துக்கு ரூ.16,300 வரையிலும் பரிமாற்ற தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது ரூ.16,100 பரிமாற்ற சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனுக்கு ரூ.14,200 வரை பரிமாற்ற தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கூடுதலாக பரிமாற்ற சலுகை

கூடுதலாக பரிமாற்ற சலுகை

கூடுதலாக பரிமாற்ற சலுகை குறித்து பார்க்கையில், ஒன்பிளஸ் 6 சாதனமானது ரூ.9,400 எனவும் ஒன்பிளஸ் 6டி சாதனமானது ரூ.10,600 எனவும் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனுக்கு ரூ.7,900 எனவும் அதேபோல் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனுக்கு ரூ.7300 எனவும் பரிமாற்ற தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் பயனர்களுக்கு ரூ.13,500 வரை பரிமாற்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

சாம்சங் ஸ்மார்ட்போனுக்கான டிரேட் இன் சலுகை

சாம்சங் ஸ்மார்ட்போனுக்கான டிரேட் இன் சலுகை

சாம்சங் ஸ்மார்ட்போனுக்கான டிரேட் இன் சலுகை குறித்து பார்க்கையில், சாம்சங் கேலக்ஸி எஸ்10+ ஸ்மார்ட்போனானது ரூ.12,150 வரை பரிமாற்ற சலுகை வழங்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 வரை பரிமாற்ற சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல் கேலக்ஸி நோட் 9 சாதனத்துக்கு ரூ.11,000 எனவும் கேலக்ஸி நோட் எஸ்9+ ஸ்மார்ட்போனுக்கு ரூ.6,900 எனவும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனுக்கு ரூ.3900 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை குறித்து பார்க்கையில், ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனானது ரூ.4990 எனவும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.6180 எனவும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.8400 எனவும் அதேபோல் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.3525 எனவும் பரிமாற்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு பெற்ற போக்கோ எஃப்1 ஸ்மார்ட்போனுக்கு ரூ.7165 வரை பரிமாற்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Announced Extra Exchange Offer Discounts: Right time to Buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X