Home
News

ஆப்பிளின் உறவை படிப்படியாக குறைத்து வரும் சாம்சங்

By Karthikeyan
ஆப்பிளின் உறவை படிப்படியாக குறைத்து வரும் சாம்சங்

கடந்த இரண்டு ஆண்டுகளாக சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ரனகளமான போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த இரு நிறுவனங்களுக்கிடையே உள்ள வர்த்தக உறவு படிப்படியாக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இதுவரை ஆப்பிளின் சாதனங்களுக்கான ப்ராசஸர்களை சாம்சங்தான கொடுத்த வந்தது. சமீபத்தில் இந்த ப்ராசஸர்களின் விலையை 20 சதவீதம் சாம்சங் அதிகரித்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதோடு ஆப்பிளுக்கு வழங்கி வந்த பேட்டரிகளையும் தற்போது சாம்சங் திடீரென்று நிறுத்திவிட்டது.

அதனால் தனது ஐபேட் மற்றும் மேக்புக் ஏர் பேட்டரிகளைப் பெற தற்போது ஆப்பிள் அம்பெரக்ஸ் டெக்னாலஜி லிமிடட் மற்றும் டியன்ஜின் லிஷன் பேட்டரி ஆகிய நிறுவனங்களை நாடி இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகிய இரண்டு நிறுவனங்களிடையே முட்டி மோதிக் கொள்ளும் அளவிற்கு தொழிற் போட்டி இருந்தாலும் அவை இந்த அளவிற்கு மோசமாக செல்லவில்லை. மேலும் ஆப்பிளின் தற்போதைய தலைவர் டிம் குக் தங்களுடைய முக்கிய வர்த்தக கூட்டாளியாக சாம்சங் இருக்கிறது என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சாம்சங் ஆப்பிளுக்கு வழங்கி வந்த பேட்டரி சப்ளையை நிறுத்தியது இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையில் உள்ள உறவு முற்றிலுமாக முடிந்துவிடும் என்று தெரிகிறது. ஆப்பிளிடம் இல்லாத ஒரு சில காரியங்களை சாம்சங் வைத்திருக்கிறது. அதோடு சாம்சங்கிடம் இல்லாத ஒரு சில காரியங்களை ஆப்பிள் வைத்திருக்கிறது. அதனால் இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரு ஆரோக்கியமான உறவை வைத்திருந்தால் அது உலக மொபைல் சந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X