யாருப்பா நீ! தொலைந்து போன நாய்யை கண்டுபிடித்து கொடுத்த AirTag.. கண்ணுல கண்ணீர் வந்துருச்சு.!

|

Apple AirTag தொலைந்து போன நாயை கண்டுபிடிக்க ஒரு பெண்ணுக்கு உதவி இருக்கிறது. அது எப்படி ஆப்பிள் ஏர்டேக் உதவியது? ஏர் டேக் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

கனநேரத்தில் உதவிய ஏர்டேக்

கனநேரத்தில் உதவிய ஏர்டேக்

உயிரை காப்பாற்றியது ஆப்பிள் வாட்ச், விபத்தை கண்டறிந்தது ஆப்பிள் போன் என பல முக்கிய இடங்களில் ஆப்பிள் சாதனத்தின் பங்களிப்பு குறித்து அறிந்திருப்போம். ஆனால் இங்கு பார்க்கப்போவது ஆப்பிள் ஏர்டேக் குறித்து. ஆம் இது ஒரு பெண்ணுக்கு கனநேரத்தில் உதவி தற்போது புகழ் பெற்றிருக்கிறது.

Apple அறிவுறுத்தல்

Apple அறிவுறுத்தல்

ஆப்பிள் ஏர்டேக் மக்களுக்கு மிகவும் பயனுள்ள கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நபர்களை பின்தொடர ஏர்டேக் பல முறை பயன்படுத்தப்பட்டு வந்தாலும், மக்கள் இந்த சாதனைத்தை தொலைந்து போன பொருட்களையும் செல்லப்பிராணிகளையும் கூட கண்டுபிடிக்க பயன்படுத்துகின்றனர்.

ஆனால் ஆப்பிள் இதுகுறித்து கூறுகையில், மக்கள் அல்லது செல்லப்பிராணிகளை கண்காணிக்க ஏர்டேக்கை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. முக்கியமான நேரத்தில் இதை பயன்படுத்தி அசம்பாவிதம் எதுவும் நடந்தால் அதற்கு ஆப்பிள் பொறுப்பேற்க விரும்பவில்லை என ஆப்பிள் இப்படி அறிவுறுத்தியதற்கு காரணமாக கூறப்படுகிறது.

நாய்யை தொலைத்த பெண்

நாய்யை தொலைத்த பெண்

ஆனால் இப்போது நாம் பார்க்கப்போகும் நிகழ்வில், இந்த பெண் ஆப்பிளின் ஆலோசனையை ஏற்கவில்லை. காரணம் இந்த பெண் தனது நாயான ராக்கியின் காலரில் ஏர் டேக்கை இணைத்திருக்கிறார்.

ஆப்பிள் இன்சைடரின் தகவல்படி, புளோரிடாவை சேர்ந்த டெனிஸ் என்பவர் வீட்டில் இருந்து குப்பையை கொட்ட வெளியே சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் இருந்த நாயும் வெளியேறி இருக்கிறது. சிறிது நேரத்துக்கு பிறகு தான் நாய் காணவில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்.

ஏர்டேக் உதவியோடு நாய்யை கண்டுபடித்த பெண்

ஏர்டேக் உதவியோடு நாய்யை கண்டுபடித்த பெண்

தொடர்ந்து அவருக்கு தனது நாயின் காலரில் ஏர்டேக் பொருந்திருந்தது நியாபகம் வந்திருக்கிறது. உடனே தனது போனை எடுத்து ஏர்டேக்கை பயன்படுத்தி அதன் இருப்பிடத்தை பார்த்துள்ளார். அவர் இருந்த இடத்தில் இருந்து 20 நிமிடம் தொலைவில் அந்த இடம் இருந்திருக்கிறது.

வீட்டில் இருந்து வெளியே சென்ற நாயை யாரோ ஒருவர் கண்டுபிடித்து ஆரஞ்ச் கவுண்டி அனிமல் சர்வீசஸுக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த இடத்துக்கு சென்று தனது ராக்கி நாய்யை மீட்டுள்ளார் அந்த பெண்.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், "இது உண்மையில் எங்களுக்கு முதல் முறையாகும். இந்த அளவிலான தொழில்நுட்பத்தை நாங்கள் உண்மையில் பார்த்ததில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

ஏர்டேக் இல் ஆர்வம் காட்டும் மக்கள்

ஏர்டேக் இல் ஆர்வம் காட்டும் மக்கள்

நாய்களை கண்காணிப்பதற்கு என ஜிபிஎஸ் கருவிகள் விற்பனைக்கு கிடைக்கிறது. இருப்பினும் ஜிபிஎஸ் கருவிகளை விட ஏர்டேக் மிகவும் மலிவானதாக இருக்கிறது. எனவே மக்கள் இதுபோன்ற பயன்பாடுகளுக்கு ஏர்டேக்கை பயன்படுத்துவதை விட ஜிபிஎஸ் கருவிகளை பயன்படுத்தவே கவனம் செலுத்துகின்றனர்.

ஏர்டேக் என்றால் என்ன?

ஏர்டேக் என்றால் என்ன?

ஆப்பிள் வழங்கும் ஃபைண்ட் மை என்ற அம்சத்தை பயன்படுத்தி தொலைந்து போகும் பொருட்களை கண்டறிவதற்கு எனவே ஏர்டேக் அறிமுகம் செய்யப்பட்டது. இது சிறிய வட்ட வடிவில் ஒரு பட்டன் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. இந்த ஏர்டெக் சாதனத்தை மக்கள் சாவி, பர்ஸ் போன்றவற்றில் பொதுவாக பயன்படுத்துகின்றனர். ஏணைய கார்களின் சாவிகளை பார்த்தால் அதில் கீச்செயினாக இந்த ஏர்டேக் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

எதிலும் தனித்து நிற்கும் ஆப்பிள், ஸ்மார்ட் வாட்ச் பிரிவிலும் தனித்தே நிற்கிறது. பல்வேறு மேம்பட்ட அம்சங்கள், தனித்துவ செயல்பாடுகள் என கூட்டத்தில் இருந்து தன்னை வேறுபடுத்தி காட்டுகிறது ஆப்பிள் வாட்ச்கள். ஆப்பிள் என்றால் அம்சங்களும் உயர்வு தான் விலையும் உயர்வு தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த விலையும் ஒரு உயிரின் மதிப்புக்கு இணையாகாது. அதன்படி ஆப்பிள் வாட்ச் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

பட்டியலில் இணைந்த ஏர்டேக்

பட்டியலில் இணைந்த ஏர்டேக்

ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 14 இல் கூட விபத்து கண்டறிதல் அம்சம் இடம்பெற்றிருந்தது. இது பயனர்களுக்கு பலவகையில் உதவியாக இருக்கும் என கூறப்பட்டது. ஆப்பிளின் இந்த அம்சம் பலரிடம் வரவேற்பை பெற்றது. இந்த நேரத்தில் ஆப்பிள் ஏர்டேக் சாதனமும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple AirTag helps to Finds a Lost Dog! Do You Know the Air Tag Importantace?.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X