டச் டிஸ்பிளேயுடன் புது AirPods சாதனமா? Apple-ன் அடுத்த புதுமை! ஏர்பாட்ஸ்லயே படம் பார்க்கலாமா?
புதுமைகளை சிம்ப்ளிஸிட்டியுடன் புகுத்துவதில் ஆப்பிள் நிறுவனத்திற்கு இணையாக வேற எந்த நிறுவனமும் செயல்படவில்லை என்று நாம் உறுதியாகக் கூறலாம். டச் டிஸ்பிளே முதல் துவங்கி TWS வயர்லெஸ் இயர்பட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங் என்று பல புதுமைகளை முதலில் களமிறக்கியது ஆப்பிள் மட்டுமே.
அத்தகைய நிறுவனம் மற்றொரு புதிய புதுமையை கொண்டுவரவுள்ளது. இதன் மூலம் வயர்லெஸ் இயர்பட்ஸ்களின் சாம்ராஜ்யமே முழுமையாக எதிர்காலத்தில் மாறப்போகிறது. அப்படி என்ன புதுமை என்று தானே கேட்கிறீர்கள்? வாருங்கள் சொல்கிறோம். ஆப்பிள் நிறுவனம் அதன் ஏர்பாட்ஸ் (Airpods) சாதனத்தை அறிமுகம் செய்து உலகளவில் அந்த சாதனத்தைப் பிரபலமாக்கியது. இதில் இப்போது வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் வருகிறது.

அடுத்தபடியாக, எதிர்காலத்தில் அல்லது விரைவில் Apple Airpods சாதனம் முற்றிலுமாக ஒரு புதிய தோற்றத்தைப் பெறப் போகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஏர்பாட்ஸ் சாதனத்தில் இனி டிஸ்பிளேவுடன் டச் கண்ட்ரோல் அம்சத்துடன் அவுட்புட் ஸ்பீக்கர்கள் கூட இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆம், இத்தகைய புதுமையான மாற்றத்தை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது உறுதியாகியுள்ளது.
சமீபத்தில், இணையத்தில் காணப்பட்ட ஒரு பேட்டண்ட் டிசைன் தளத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு புதிய ஏர்பாட்ஸ் டிசைன் காணப்பட்டுள்ளது. இது வழக்கமான ஏர்பாட்ஸ் சார்ஜிங் கேஸை (Airpods charging case) விட, சற்று பெரிய வடிவத்தில் காணப்படுகிறது. இதில் முக்கிய சிறப்பு என்னவென்றால், இந்த சார்ஜிங் கேஸ் வழக்கமாக அறிமுகம் செய்யப்படும் நார்மல் சார்ஜிங் கேஸாக இல்லாமல், ஒரு டச் டிஸ்பிளேவுடன் (Airpods touch display case) வருகிறது.
ஆம், டச் டிஸ்பிளேவுடன் சில நேவிகேஷன் அம்சங்களை ஆதரிக்கும் அம்சங்களுடன் இந்த பேட்டண்ட் டிசைனை ஆப்பிள் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இந்த பில்ட் இந்த டச் டிஸ்பிளே சார்ஜிங் கேஸ் உடன் வழக்கமான TWS ஏர்பாட்ஸ் சாதனம் வரும் என்பதை டிசைன் தெளிவாக காண்பிக்கிறது. இந்த இன்பில்ட் டிஸ்பிளே உதவியுடன் பயனர்களை மியூசிக் பிளேபேக்கை முழுமையாக சார்ஜிங் கேஸ் மூலம் கண்ட்ரோல் செய்ய முடியும்.

அதேபோல், இந்த சார்ஜிங் கேஸின் டிஸ்பிளே பேட்டரி அளவு, வெதர் ரிப்போர்ட் மற்றும் மேப்ஸ் போன்ற அம்சங்களையும் ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த புதுமையான இன்பில்ட் டச் டிஸ்பிளே ஏர்பாட்ஸ் சாதனம் ஸ்பேஷியலைஸ் ஹெட் மூவ்மெண்ட் ட்ராக்கிங் ஆடியோ அம்சத்துடன் வரும் என்பதையும் டிசைன் துல்லியமாகக் காண்பிக்கிறது. இந்த சிறிய டிஸ்பிளேவில் திரைப்படம் பிளே செய்யப்பட்டு, அதன் ஆடியோ இயர்பட்ஸ் வழியாகத் தரப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய ஏர்பாட்ஸ் சாதனம் ஹாப்டிக் டச் கண்ட்ரோல் உடன் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஏர்பாட்ஸ் கேஸை அழுத்தி அல்லது இறுக்கிப் பிடித்தால், ANC மற்றும் மற்ற சவுண்ட் மோட்களுக்கு தானாக இயர்பட்ஸ் மாறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதுமையான இன்பில்ட் டிஸ்பிளே ஏர்பாட்ஸ் சாதனம் இப்போது பேட்டண்ட் டிசைன் இல் மட்டுமே காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிசைன் அங்கீகரிக்கப்பட்டால், இது முழுமையடையுமென்று கூறப்படுகிறது.
இது ஒரு முதற்கட்ட வடிவமைப்பு என்பதனால், இந்த டிசைன் முழுமையடைந்து ஒரு புதுமையான தயாரிப்பாக வெளிவரும் போது, இது சில மாற்றங்களைக் கொண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. சரி, ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதுமையான இன்பில்ட் டச் டிஸ்பிளே ஏர்பாட்ஸ் சாதனத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications