நிர்வாணப் படங்களை பறக்கவிட்ட பயணிகள்: நடுவானில் கடுப்பான பைலட்.. நடந்தது என்ன?

|

தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பெருமைப்படும் அதே சமயத்தில் அதனால் ஏற்படும் ஆபத்துகள், இந்த முன்னேற்றம் தேவைதானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

முன்பெல்லாம் கையில் பணம் வைத்தால் செலவாகிவிடும் என வங்கியில் போட்டு வைப்போம், இப்போது வங்கியில் போட்டு வைத்தால் தான் எளிதாகவும் வேகமாகவும் செலவாகிறது. காரணம் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற ஆன்லைன் டிஜிட்டல் தளங்களின் முன்னேற்றம்.

தொழில்நுட்ப முன்னேற்றம்

மொபைலில் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை செயலிகள் கூட பாதுகாப்பு நோக்கம் என்ற பெயரில் பயனர்களின் குறிப்பிட்ட தகவலை சேகரித்து வருகின்றனர்.

ஆசை வார்த்தைகள் கூறி மொபைல் கால் மூலம் பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்களால் பல பாதுகாப்பு விஷயங்கள் கேள்விக்குறியாகிறது.

அதன்படி தொழில்நுட்ப முன்னேற்றத்தால் நடந்த ஒரு தவறான செயலை தான் நாம் தற்போது பார்க்கப்போகிறோம்.

ஆத்திரமடைந்த பைலட்

ஆத்திரமடைந்த பைலட்

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் பயணிகளிடம் மிகவும் காட்டமான எச்சரிக்கைகளை முன்வைத்தார். பயணிகளிடம் கணிவோடு நடந்துக் கொள்ள வேண்டிய பைலட் இவ்வளவு கோபமடைய நியாயமான காரணம் இருக்கிறது.

ஆப்பிளின் ஏர் டிராப் சேவை மூலம் பயணிகள் நிர்வாணப் படங்களை பறக்கவிட்டுள்ளனர். இதை பார்த்த பைலட், மிக கடுமையாக பயணிகளை எச்சரித்தார்.

வீடியோவாக பதிவு செய்த பயணர்

வீடியோவாக பதிவு செய்த பயணர்

நடுவானில் நடந்த இந்த நிகழ்வை தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்த Teighlor Marsalis (@teighmars) என்ற பயணி தனது டிக்டாக் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்வு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. நீங்கள் செய்யும் செயலை நிறுத்தவில்லை என்றால் விமானம் தற்போதே தரையிறங்கும் என பைலட் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்பிள் ஏர்டிராப் சேவை

ஆப்பிள் ஏர்டிராப் சேவை

இதன் அனைத்துக்கும் காரணம் ஆப்பிளின் ஏர்டிராப் சேவை தான். பல்வேறு தனித்துவ அம்சங்களை கொண்டிருக்கும் ஆப்பிளின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்தான் ஏர்டிராப்.

இந்த சேவை ஆப்பிள் பயனர்கள் உட்பட விமர்சகர்கள் தரப்பிலும் பல பாராட்டுகளை பெற்றது. இருப்பினும் இதில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. தற்போது இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடுப்பான பைலட் கடுமையான எச்சரிக்கை

கடுப்பான பைலட் கடுமையான எச்சரிக்கை

விமானம் பறந்துக் கொண்டிருக்கும் போது ஆப்பிள் ஏர் டிராப் சேவையை பயன்படுத்தி பயனர்கள் நிர்வாண படங்களை தொடர்ச்சியாக பகிர்ந்துள்ளனர்.

இந்த செயல் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதை சகித்துக் கொள்ள முடியாத பயணிகள், பைலட் இடம் இதுகுறித்து புகாரளித்துள்ளனர்.

இதுமட்டுமில்லை விமான பணிப்பெண்கள் சிலருக்கும் இந்த புகைப்படங்கள் தொடர்ந்து சென்றுள்ளது. இந்த செயலை பார்த்து கடுப்பான பைலட் கடுமையான எச்சரிக்கையை முன்வைத்தார்.

விமானம் தரையிறக்க வேண்டியிருக்கும்

விமானம் தரையிறக்க வேண்டியிருக்கும்

"சரி, இதை நீங்கள் தொடர்ந்து செய்தால் விமானத்தை தரையிறக்க வேண்டியிருக்கும். எல்லோரும் கீழே இறங்க வேண்டும். போலீஸாரிடம் அழைத்து செல்லப்படுவீர்கள். உங்கள் விடுமுறை தினங்கள் வீணாக போகும். ஏர் டிராப்பில் நிர்வாண படங்களை பகிர்வதை விட்டுவிட்டு பிற வேலைகளை கவனிப்போம்" என பைலட் இண்டர்காம் மூலம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஏர்டிராப் சேவை என்றால் என்ன?

ஏர்டிராப் சேவை என்றால் என்ன?

இதெல்லாம் சரி.. புகைப்படம் எப்படி அனைவருக்கும் சென்றது, ஏர்டிராப் சேவை என்றால் என்ன என்று பார்க்கலாம் வாங்க.

ஆப்பிளின் ஏர்டிராப் மிகவும் வசதியான அம்சமாகும், ஆனால் இதில் ஆகச்சிறந்த குறைபாடுகள் இருக்கிறது.

அதாவது வைஃபை அல்லது பிற செல்லுலார் இணைப்பு என எதுவும் இல்லாமல் iOS சாதனங்களுக்குள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அதிக அளவிலான ஃபைல்களை பகிர இந்த அம்சம் அனுமதிக்கிறது.

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

ஏர்டிராப் சேவை மூலம் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் ஃபைல்களை பகிரலாம். இதுவே மிகப் பெரிய குறை ஆகும்.

காரணம் இதன்மூலம் தான் நிர்வாணப் படங்கள் பகிரப்பட்டுள்ளது.

இந்த சேவையில் தொடர்புகளுக்கு மட்டும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டும் போன்ற ஆதரவுகள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பைலட் எடுத்த இந்த நடவடிக்கையும் எச்சரிக்கையும் சரிதான் என இணையதளங்களில் பைலட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Apple AirDropping nude picture Issue: Pilot gets Angry and threatened to Passangers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X