Home
News

பழைய ஐபோனுக்குள் புதையல்-ஆ இருக்கு? இல்லை.. ஆனால்..1 கோடியே 56 லட்சத்திற்கு ஏலம் போன பழைய ஐபோன்.. என்ன கணக்கு?

ஆப்பிள் (Apple) என்றாலே முதலில் நினைவில் வருவது ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) சாதனங்கள் தான்.. அதேபோல, ஐபோன் என்று சொன்ன உடனேயே அது விலை அதிகமேப்பா என்ற எண்ணமும் எல்லோருடைய மனதிலும் தோன்றி மறைந்திருக்கும்.

இந்த எண்ணம் புது ஐபோனாளுக்கு வந்து மறைவது இயற்கையானது தான் என்றாலும் கூட, பழைய ஐபோன்களின் விலை இப்போது எவ்வளவு என்று தெரியுமா? புதிய சமீபத்திய ஐபோன் மாடல்களான ஐபோன் 14 (iPhone 14 series) சீரிஸ் மாடல்களின் விலை என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். பழைய ஐபோன் சாதனத்தின் தற்போதைய ஏல விலையை கேட்டல் வாயடைத்து போவீர்கள்.

பழைய ஐபோனுக்குள் புதையல்-ஆ இருக்கு? இல்லை.. ஆனால்..1 கோடிக்கு ஏலம்!

ஆப்பிளின் முதல் ஐபோன், ஐபாட் மற்றும் மேக் கருவிகள் பெரும்பாலும் இப்போது விண்டேஜ் கலெக்ஷன் சாதனங்களாக பார்க்கப்படுகிறது. இப்போது இவை ஆயிரக்கணக்கான டாலர்கள் வரை ஏலம் விடப்படுகின்றன. அசல் ஐபோன் சாதனம் ஒன்று சமீபத்தில் $158,644 விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில், ரூ. 1 கோடியே 30 லச்சத்திற்கு ( ரூ.1,30,28,083- வரி இல்லாமல்) ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இந்த குறிப்பிட்ட ஐபோன் மாடல் அதன் அசல் பாக்சுடன் சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது 4ஜிபி வேரியண்ட் மாடலாகும். இது அதன் அசல் வெளியீட்டின் போது கூட அரிதாக இருந்தது, ஏனெனில் இது குறைந்த அளவிலேயே விற்பனைக்கு கிடைத்தது. இந்த அசல் iPhone 4GB மாடலின் மதிப்பிடப்பட்ட மதிப்பு ஏலத்தின் தொடக்கத்தின் போது $100,000 (தோராயமாக ரூ. 82,11,850) வரை இருந்தது.

ஐபோன் $50,000 டாலர் முதல் $100,000 டாலர் வரை ஏலத்தில் விலை அதிகரித்து விற்கப்படும் என்று LCG ஏல நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதி $10,000 உடன் ஏலம் தொடங்கியது. ஜூலை 13 ஆம் தேதி சுமார் $41,776 (தோராயமாக ரூ. 34,30,624) வரை ஏலம் சென்றது. இந்த ஏலம் நேற்று திடீரென அதிகரித்து இறுதி மணிநேரத்திற்குள் $108,356 டாலராக விலை மடமடவென உயர்ந்தது.

இறுதியாக $158,644 என்ற விலையுடன் ஏலம் நிறைவடைந்தது. அசல் iPhone 4GB மாடல் மொத்தமாக $190,372 என்ற விலைக்கு விற்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1 கோடியே 56 லட்சத்தை (ரூ.1,56,33,253) தாண்டியது. இதில் பெரும்பாலும் வரிகளும் அடங்கும். இது ஒரு சீல் செய்யப்பட்ட ஐபோன் சாதனம் என்பதனால் அசல் பெட்டியில் இந்த சாதனம் புதிதாக அப்படியே கிடைக்கிறது.

ஆப்பிள் அசல் ஐபோனின் 4GB மாறுபாட்டை 2007 இல் அறிமுகப்படுத்தியது, அதன் விலை அப்போது வெறும் $499 டாலர்கள் மட்டுமே. இது மேக்வேர்ல்ட் சான் பிரான்சிஸ்கோவில் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸால் வெளியிடப்பட்டது. ஏலம் விடப்பட்ட விலையுடன், இந்த ஐபோனின் மதிப்பு அதன் அசல் விலையை விட சுமார் 318 மடங்கு உயர்ந்துள்ளதாக LCG ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple 4GB iPhone auctioned for 318 time higher price of record breaking its original value
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X