Home
News

அடிதூள் ஆபர்.. Apple-ன் லேட்டஸ்ட் 2025 MacBook Air மாடல்.. இதுக்கு முன் இவ்ளோ சீப்-ஆ விற்கப்பட்டதே இல்ல!

ஆப்பிளின் லேட்டஸ்ட் மேக்புக் மாடலாக கடந்த 2025 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் 2025 மேக்புக் ஏர் (Apple 2025 MacBook Air) மாடல் ஆனது தற்போது "இதுவரை இல்லாத அளவுக்கு" மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் இது நேரடி தள்ளுபடி விலை அல்ல; வங்கி தள்ளுபடியை உள்ளடக்கிய ஆபர் விலையாகும்

பேங்க் டிஸ்கவுண்ட் வழியாக ரூ.12,500 வரை தள்ளுபடி கிடைக்கிறது. கூடவே கூப்பன் சேவிங்ஸ் மூலம் கூடுதலாக ரூ.2299 தள்ளுபடியும் பெறலாம். இந்த அனைத்து தள்ளுபடிகளையும் சேர்த்து, இந்தியாவில் ரூ.90,900 க்கு அறிமுகம் செய்யப்பட்ட 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜுடன் கூடிய ஆப்பிள் 2025 மேக்புக் ஏர் மாடலை ரூ.79,490 க்கு வாங்க முடியும். இது ஒரு லிமிடட் டைம் ஆபர் (Limited Time Offer) ஆகும்; ஸ்டாக் தீர்ந்ததும் காணமால் போகும்!

2025 MacBook Air மாடல்.. இதுக்கு முன் இவ்ளோ சீப்-ஆ விற்கப்பட்டதே இல்ல!

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஆப்பிளின் புதிய மேக்புக் ஏர் 2025 மாடலின் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 13-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.99,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டள்ளது. இதேபோல 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 15-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.1,24,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 முக்கிய அம்சங்கள்: மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 13-இன்ச் (2,560×1,664 பிக்சல்ஸ்) மற்றும் 15-இன்ச் (2,880×1,864 பிக்சல்ஸ்) சூப்பர் ரெடினா டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேக்கள் 224பிபி பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை கொண்டது. இந்த ஆப்பிள் லேப்டாப்கள் 6கே ரெசல்யூஷனில் 2 எக்ஸ்டர்னல் டிஸ்பிளேக்களை ஆதரிக்கும் (லேப்டாப் திறந்திருக்கும் போது) என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 ஆனது எம்4 சிப் உடன் வருகிறது. இதில் நான்கு பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் நான்கு எஃபீஷியன்சி கோர்கள் கொண்ட 10-கோர் சிபியு உள்ளது. இந்த லேப்டாப்பில் 16-கோர் நியூரல் எஞ்சின், 8-கோர் ஜிபியு மற்றும் ஹார்டுவேர் ஆக்சிலரேட்டட் ரே டிரேசிங்கிற்கான ஆதரவும் உள்ளது.

மேக்புக் ஏர் 2025 மாடலை 24ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடன் கட்டமைக்க முடியும. மேலும் இது ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் த்ரீ-மைக் செரீஸ் உடன் கூடிய குவாட் ஸ்பீக்கர் செட்டப்பையும் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது வைஃபை 6இ மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவைகளை கொண்டுள்ளது.

மேலும் இது இரண்டு தண்டர்போல்ட் 4/ யூஎஸ்பி 4 போர்ட்கள், ஒரு மேக்சேப் 3 சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் இந்த புதிய மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது டச் ஐடி பட்டனையும் கொண்டுள்ளது, இது லேப்டாப்பை அன்லாக் செய்ய பயன்படுகிறது. இது ஃபோர்ஸ் க்ளிக்குகள் மற்றும் மல்டி-டச் சைகைகளுக்கான ஆதரவுடன் ஃபோர்ஸ் டச் டிராக்பேடையும் கொண்டுள்ளது. சென்டர் ஸ்டேஜ் மற்றும் டெஸ்க் வியூவுக்கான ஆதரவுடன் 1080பி ஃபேஸ்டைம் கேமராவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை 13-இன்ச் மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 53.8Wh லித்தியம்-பாலிமர் பேட்டரியை 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கொண்டுள்ளது. ஆனால் இது 30W யூஎஸ்பி டைப்-சி பவர் அடாப்டருடன் அனுப்பப்படுகிறது. மறுகையில் உள்ள 15-இன்ச் மாடல் சற்று பெரிய 66.5Wh பேட்டரியை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி இது 15 மணிநேர இண்டர்நெட் ப்ரவுஸிங் மற்றும் ஆப்பிள் டிவி ஆப் மூலம் 18 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple 2025 MacBook Air with M4 Chip Selling At All time Low Price Check Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X