சென்னையில் முதல் முறை : ரயில் தகவல்களை மொபைலில் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம்.!!
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய ரயில் சார்ந்த முழு தகவல்களையும் மொபைல் போன் மூலம் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொபைலில் அறிந்து கொள்லும் வசதி முக்கிய ரயில் நிலையங்களில் அறிமுகாக இருக்கும் நிலையில் தெற்கு ரயில்வேயில் இந்த வசதி முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகமாகியுள்ளது.

மொபைல் போன் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள 139 என்ற உதவி மைய எண் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இதற்கு AD என டைப் செய்து இடைவெளிவிட்டு வண்டி எண் இடைவெளிவிட்டு ரயில்நிலையம் உள்ள இடத்தின் எஸ்டீடி கோடு ஆகியவற்றை டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு எம்எம்எஸ் அனுப்பினால் போதும்.

மேலும், 139 என்ற உதவி மைய எண் மூலம் முன்பதிவு பயணச்சீட்டு (பிஎன்ஆர்) எண்ணை பயன்படுத்தி முன்பதிவு நிலையை அறியும் வசதி ஏற்கனவே அமலில் இருக்கின்றது. இத்தோடு ரயில் புறப்படும், வரும் நேரங்களையும் அறியலாம். இனி சென்ட்ரலுக்கு வந்துச் செல்லும் ரயில்கள் நிற்கும் நடைமேடை எண்ணையும் 139 எண் மூலம் அறிய முடியும்.

இவ்வாறு அனுப்பும் போது, ரயில் புறப்படும் / சேரும் நேரம், நடைமேடை எண் ஆகியவற்றை எஸ்எம்எஸ் மூலம் பயணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வசதி முதல்முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகமாகி உள்ளது.
இதோடு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் NTES எனும் ஆண்ட்ராய்டு செயலி பயன்படுத்தி தகவல்களை அறிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலியை பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி பயன்படுத்தி குறிப்பிட்ட ரயில் எங்கு இருக்கின்றது, புறப்பட்டு விட்டதா என்ற தகவல் மற்றும் ரயில் வந்துச் சேரும் நடைமேடை எண் போன்றவைகளை அறிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications