ஐமேக்ஸ்-ல் வெளியாகிறது 'அப்பல்லோ 11' ஆவணப்படம்...

2019 ஆம் ஆண்டு சன்டேன்ஸ் திரைப்பட விழாவில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த ஆவணப்படம், மார்ச் 8 முதல் அனைத்து இடங்களிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

|

இதுவரை கண்டிராத 70 மிமீ காட்சிகள் மற்றும் முன் எப்போதும் கேட்டிராத வரலாற்று சிறப்புமிக்க முதன்முதலாக நிலவில் தரையிறங்கும் மிஷனின் ஆடியோ போன்றவற்றுடன் கூடிய டோட் டக்ளஸ் மில்லரின் ஆவணப்படம், மார்ச் 1 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு மட்டும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் சிறப்புகாட்சிகளாக வெளியிடப்பட்டவுள்ளது.

ஐமேக்ஸ்-ல் வெளியாகிறது 'அப்பல்லோ 11' ஆவணப்படம்...

2019 ஆம் ஆண்டு சன்டேன்ஸ் திரைப்பட விழாவில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த ஆவணப்படம், மார்ச் 8 முதல் அனைத்து இடங்களிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

"மிகவும் சிறப்பான நிகழ்வை விவரிக்கும் இந்த திரைப்படத்திற்காக நியான் மற்றும் இமாக்ஸுடன் பணிபுரிவது உற்சாகமாக இருக்கிறது," என தனது அறிக்கையில் மில்லர் கூறியுள்ளார். மேலும் "ப்லிம் ஸ்கேனர் மூலம் 65 மிமீ திரைப்பட காட்சிகளால் முதல் முறையாக பார்த்தலில் இருந்தே, இந்த 'அப்பல்லோ 11'ஐ வெள்ளித்திரையில் காணவேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டோம்" என்கிறார் மில்லர்.

"ஐமேக்ஸ் திரையரங்குகள் சினிமாவின் கதீட்ரல் மற்றும் நாம் 'அப்பல்லோ 11' -ன் சாகச அனுபவிக்க இதைத்தவிர வேறு ஒரு சரியான வழி பற்றி யோசிக்க முடியாது" என்று அவர் கூறினார்.

ஐமேக்ஸ்-ல் வெளியாகிறது 'அப்பல்லோ 11' ஆவணப்படம்...

"அப்பல்லோ 11" ஆவணப்படம், ஏராளமான சேமிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் 11,000 மணிநேரத்திற்கும் மேலான வகைபடுத்தப்படாத ஆடியோ பதிவுகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. நாசாவின் மிகவும் கொண்டாடப்பட்ட மிஷன் பற்றிய இந்த திரைப்படம்,நீல் ஆம்ஸ்ட்ராங், பஷ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கோலின்ஸ் போன்றோரை தம் வீட்டின் ஒரு அங்கமாக நினைக்கும் இரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். விண்வெளிவீரர்கள், மிஷன் கன்ட்ரோல் குழு, பூமியிலிருந்த மில்லியன் கணக்கான பார்வையாளர்கள், முதன்முதலாக மனிதர்கள் மற்றொரு கிரகத்திற்கு சென்ற ஜூலை 1969ன் அந்த நாட்களின் அனுபவங்கள் என அனைத்து கோணங்களில் இந்த ஆணவப்படம் பரந்துவிரிந்துள்ளது.

"மில்லரின் இந்த ஆவணப்படம், திரைப்படத் தயாரிப்பில் ஒரு அட்டகாசமான சாதனை" என ஐமேக்ஸ் தலைவர் மேகன் கொல்லிகன் கூறியுள்ளார். மேலும் "இந்த படம் அதிவேகமான மற்றும் தெளிவான படமாக உள்ளது. பார்வையாளர்களால் பதற்றம், பெருமை மற்றும் உச்சகட்ட மகிழ்ச்சி என அனைத்தையும் பெருமளவில் உணர முடியும். இந்த திரைப்பட குழு சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியுள்ளது. அப்பல்லோ 11 வெளியீட்டில் ஐமேக்ஸ் மற்றும் நியான் பங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என கூறியுள்ளார்.

முதன்முதலாக நிலவில் இறங்கிய அப்பல்லோ11 பற்றி ஒரு படத்தை உருவாக்க சிஎன்என் நிறுவனம் தொடங்கிய முயற்சி, இன்று ஒரு ஆவணப்படமாக வடிவெடுத்துள்ளது.

மிஷன் கண்ட்ரோல் குழுவில் இருந்த 60 உறுப்பினர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் விண்கலத்தில் நடைபெற்ற உரையாடல்கள் என 11,000 மணி நேர ஆடியோ பதிவுகளை ஆராய்ந்து இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 65மிமீ பிலிமை டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் 16மிமீ &35மிமீ படங்களை ரீ-ஸ்கேனிங் செய்தல் போன்ற பணிகள் நீயுயார்க் நகரில் உள்ள போஸ்ட் புரொடிக்ஷன் ஹவுஸில் நடைபெற்று 8kதிறனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐமேக்ஸ்-ல் வெளியாகிறது 'அப்பல்லோ 11' ஆவணப்படம்...

ஐமேக்ஸ் டிஎம்ஆர்(Digital Re-Mastering) தொழில்நுட்பம் மூலம் இமேஜ் மற்றும் ஆடியோ தரம் உயர்த்தப்பட்டு அப்பல்லோ உண்மையான ஐமேக்ஸ் அனுபவத்தை தர தயாராக உள்ளது.
Best Mobiles in India

English summary
Apollo 11 Documentary to Launch Onto IMAX Screens on March 1: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X