அம்பானியே அசந்துபோகும் 6 டெலிகாம் திட்டங்கள்: கலக்கும் ஆந்திரா.!

இந்த ஏபி பைபர் கிரிட் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, திட்டம் சார்ந்த அனைத்து வகையான விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன.? விலை நிர்ண்யம் என்ன

|

ஆந்திர மாநில முதல்-மந்திரியான சந்திரபாபு நாயுடு இன்று ஏபி பைபர் கிரிட் திட்டத்தை அறிவித்தார். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மலிவு விலையில் அதிவேக பிராட்பேண்ட் சேவையுடன் இணைக்கும் ஒரு அரசாங்க லட்சிய திட்டமாகும்.

இந்த ஏபி பைபர் கிரிட் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, திட்டம் சார்ந்த அனைத்து வகையான விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன.? விலை நிர்ண்யம் என்ன போன்ற விவரங்களை விரிவாக காண்போம்.

 ஒரு சின்ன கேள்வி, சரியாக பதில் சொன்னால் - ஹானர் 7எக்ஸ் இலவசம்.! ஒரு சின்ன கேள்வி, சரியாக பதில் சொன்னால் - ஹானர் 7எக்ஸ் இலவசம்.!

ஆல்-இன்-ஒன்

ஆல்-இன்-ஒன்

அறிவிக்கப்பட்டுள்ள ஏபி பைபர் கிரிட்மானது மூன்று சேவைகளை வழங்குமொரு வலையமைப்பு சேவையாகும். அதாவது இதன் கீழ் பிராட்பேண்ட் சேவை, தொலைக்காட்சி சேவை மற்றும் குரல் அழைப்புகளுக்கான தொலைபேசி சேவை ஆகியவைகள் கிடைக்கும்.

23,800 கிமீ ஆப்டிகல் பைபர் கேபிள்களின் வழியாக

23,800 கிமீ ஆப்டிகல் பைபர் கேபிள்களின் வழியாக

2018 ஆம் ஆண்டிற்குள் 1.3 கோடி குடும்பங்கள், 10,000 அரசாங்க அலுவலகங்கள், 50,000 பள்ளிகள் மற்றும் 5,000 பொது சுகாதார மையங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டுமென்ற நோக்கம் கொண்டுள்ள இந்த திட்டமானது 13 மாவட்டங்களில், 2,464 துணை நிலையங்களின் வழியாக சுமார் 23,800 கிமீ ஆப்டிகல் பைபர் கேபிள்களின் வழியாக ஆந்திரா முழுக்க சேவையை வழங்கவுள்ளது.

ஒரே திட்டத்தின்கீழ்

ஒரே திட்டத்தின்கீழ்

முன்னர் கூறியது போல், ஏபி பைபர் கிரிட் திட்டமானது மூன்று சேவைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால் அனைத்து மூன்று சேவைகளும்ப் ஒரே திட்டத்தின்கீழ் (பேக்) தொகுக்கப்பட்டுள்ளன.

ஆந்திரா மாநில பைபர்நெட் லிமிடெட்

ஆந்திரா மாநில பைபர்நெட் லிமிடெட்

சாதாரண மக்களுக்கு மூன்று ஏபி பைபர் கிரிட் திட்டங்களும், நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கான மூன்று திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த சேவைகளை கவனிப்பதற்காக ஆந்திரா மாநில பைபர்நெட் லிமிடெட் (ஏபிஎஸ்எஃப்எல்- Andhra Pradesh State FiberNet Limited (APSFL) உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.149/- தொடங்கி ரூ.599/- வரை

ரூ.149/- தொடங்கி ரூ.599/- வரை

குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாத வாடகை திட்டங்கள் மூன்று வகைகளாக - அடிப்படை, தரநிலை, பிரீமியம் - பிரிக்கப்படுகின்றன. வீட்டுத் திட்டங்களானது ரூ.149/- தொடங்கி ரூ.599/- வரை செல்கிறது.

15 எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்கம் வேகத்தின் கீழ்

15 எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்கம் வேகத்தின் கீழ்

பைபர் கிரிட் அடிப்படை திட்டமான ரூ.149/- ஆனது 5ஜிபி அளவிலான டேட்டாவை 15 எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்கம் வேகத்தின் கீழ் வழங்குகிறது. பைபர் கிரிட் ஸ்டாண்டர்ட் பிளான் ஆனது 25எம்பி அளவிலான டேட்டாவை 15 எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்கம் வேகத்தின் கீழ் வழங்குகிறது

டேட்டா வரம்பிற்கு பின்னர்

டேட்டா வரம்பிற்கு பின்னர்

இறுதியாக, பைபர் கிரிட் பிரீமியம் திட்டமானது 50ஜிபி அளவிலான டேட்டாவை அதே 15 எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்கம் வேகத்தின் கீழ் வழங்குகிறது. அனைத்து மூன்று திட்டங்களும் டேட்டா வரம்பிற்கு பின்னர் 1எம்பிபிஎஸ் என்கிற இணைய வேகத்தை அடையும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்டாண்டர்ட் பிளான் ரூ.399/- மற்றும் பிரீமியம் பிளான் ரூ.599/- செலவாகு

தனியார் அலுவலகங்களுக்கான திட்டங்கள்

தனியார் அலுவலகங்களுக்கான திட்டங்கள்

நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கான திட்டங்களை பொறுத்தமட்டில், 100எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்திலான இணையத்தை ரூ.999/- தொடங்கி வழங்குகிறது. ரூ.999/- என்கிற அடிப்படைத் திட்டமானது 100எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்திலான 50 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

250 ஜிபி அளவிலான டேட்டா

250 ஜிபி அளவிலான டேட்டா

மற்றொரு திட்டமான ரூ.1,499/- ஆனது 100எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்திலான 100ஜிபி டேட்டாவும், பிரீமியம் திட்டமான ரூ.2,499/- ஆனது அதே 100எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்திலான 250 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. நிறுவனங்களுக்கான அடிப்படைத் திட்டமானது டேட்டா வரம்பிற்கு பின்னர் 1 எம்பிபிஎஸ் இணைய வேகத்தையும், ஸ்டாண்டர்ட் திட்டம் 1எம்பிபிஎஸ் இணைய வேகத்தையும் மற்றும் பிரீமியம் திட்டம் 3எம்பிபிஎஸ் இணைய வேகத்தையும் வழங்கும்.

இலவசமாக 250 தொலைக்காட்சி சேனல்கள்

இலவசமாக 250 தொலைக்காட்சி சேனல்கள்

ஏபி பைபர் கிரிட் வீட்டுத் திட்டங்களுடன் இலவசமாக 250 தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வரம்பற்ற தொலைபேசி அழைப்பு நன்மைகளும் கிடைக்கும். இந்த சேவைகள் தற்போது அனந்தபூர், சித்தூர், கிழக்கு கோதாவரி, குண்டூர், கடப்பா, கிருஷ்ணா, கர்னூல், நெல்லூர், பிரகாசம், ஸ்ரீகாசுளம், விஷாகப்பட்டினம், விஜயநகரம் மற்றும் மேற்கு கோதாவரி ஆகிய இடங்களில் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
AP Fiber Grid Plans Starts at Rs 149; Provides Broadband, Television, and Telephone Services in a Single Package. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X