வளைந்த டிஸ்ப்ளே, எச்டிஆர், துல்லிய காட்சி: அட்டகாச கேமிங் மானிட்டர் அறிமுகம்- விலை என்ன தெரியுமா?

|

ஏஓசி தனது முதல் தயாரிப்பான புதிய பிராண்டிங் AGON-ன் கீழ் இந்தியாவில் ஏஓசி அறிமுகப்படுத்தியுள்ளது. மவுஸ், கீபோர்ட், ஹெட்செட்கள் மற்றும் மானிட்டர்கள் போன்ற கேமிங் சாதனங்களை ஒரே வரிசையின் கீழ் அறிமுகப்படுத்துவதை நிறுவனம் தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஓசி சி32ஜி2இ என்பது சமீபத்திய உயர்நிலை கேமிங் மானிட்டர் ஆகும். இந்த சாதனம் 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், எச்டிஆர் ஆதரவு மற்றும் பல அம்சங்களோடு வருகிறது.

வளைந்த கேமிங் மானிட்டர்

வளைந்த கேமிங் மானிட்டர்

ஏஓசி சி32ஜி2இ வளைந்த கேமிங் மானிட்டர் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இதன் பெயர் குறிப்பிடுவது போல் ஏஓசி-ன் சமீபத்திய கேமிங் மானிட்டர் 1500 ஆர் வளைவுடன் கூடிய வளைந்த கேமிங் மானிட்டராகும். இது 31.5 இன்ச் 1080 பிக்சல் தயாரிப்பு, விஐ பேனலை பயன்படுத்துகிறது. AOC C32G2E மெல்லிய உளிச்சாயுமோரம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

120 சதவீத எஸ்ஆர்ஜிபி கலர் ஸ்பேஸ் கவரேஜ்

120 சதவீத எஸ்ஆர்ஜிபி கலர் ஸ்பேஸ் கவரேஜ்

துல்லியமான வண்ண பேனல், 120 சதவீத எஸ்ஆர்ஜிபி கலர் ஸ்பேஸ் கவரேஜை வழங்குகிறது. இது எச்டிஆர் ஆதரவு மற்றும் வெசா சான்றளிக்கப்பட்ட காட்சி ஆகியவையை கொண்டுள்ளது. மானிட்டரின் உச்ச பிரகாச நிலையை நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. எச்டிஆர் சான்தறிதழை பொறுத்தவரை இது குறைந்தது 400 நிட்ஸ் பிரகாசத்தை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குறைந்த உள்ளீட்டு பின்னடைவு போன்ற அம்சங்கள்

குறைந்த உள்ளீட்டு பின்னடைவு போன்ற அம்சங்கள்

மானிட்டர் குறைந்த உள்ளீட்டு பின்னடைவு போன்ற அம்சங்களை வழங்குகிறது. இது 0.5 எம் ஆக்டிவேட் நேரத்துடன் இது வருகிறது. இது ஒரு ஏஎம்டி ஃப்ரீசிங்க் சான்றளிக்கப்பட்ட மானிட்டர் ஆகும். இது ஏஎம்டி ஜிபியூ மூலம் இயங்கும் பிசிக்களுடன் ஜோடியாக இருக்கும்போது கேமிங் அனுவத்தை மேம்படுத்துகிறது. இதன் தயாரிப்பானது அதன் உயரத்தை சரி செய்ய அனுமதிக்கிறது. பயனர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை இந்த சாதனம் வழங்குகிறது.

1080 பிக்சல் மானிட்டர்

1080 பிக்சல் மானிட்டர்

இதன் மானிட்டரில் இரட்டை எச்டிஎம்ஐ 2.0 போர்ட்கள், டிஸ்ப்ளே 1.4 போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்போன் அவுட் போர்ட் இருக்கிறது. இதன் மானிட்டரில் 1.8 மீட்டர் நீளமுள்ள எச்டிஎம்ஐ மற்றும் டிஸ்ப்ளே போர்ட் கேபிளை கொண்டிருக்கிறது. இது ஒரு 1080 பிக்சல் மானிட்டர் என்பதால் இதில் சமீபத்திய எச்டிஎம்ஐ 2.1 அம்சத்தை கொண்டுள்ளது.

வளைந்த கேமிங் மானிட்டர் விலை

வளைந்த கேமிங் மானிட்டர் விலை

ஏஓசி சி32ஜி2இ வளைந்த கேமிங் மானிட்டர் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். இந்த கேமிங் மானிட்டர் விலை ரூ.44,990 ஆக இருக்கிறது. இது ஆஃப்லைன் சில்லறை கடைகள் மற்றும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்கள் வழியாக கிடைக்கும். அதிக புதுப்பிப்பு வீதம் மற்றும் எச்டிஆர் ஆதரவுடன் ப்ரீமியம் வளைந்த கேமிங் மானிட்டருக்கான நீங்கள் காத்திருப்பவராக இருந்தால் இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இது குறிப்பாக கேமிங் பிரியர்களுக்கு சிறந்த ஆதரவாக இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Aoc C32G2e Curved Gaming Monitor Launched in India With 165 HZ Refresh Rate Display

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X