Home
News

DRDO-வின் புதிய Anti-Tank ஏவுகணை.. அட்டாக் பண்ற விதமே வேற!

நவீன கவசத்தால் பாதுகாக்கப்பட்ட போர் டாங்கிகளுக்கு எதிராக.. இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு திறன்களை (Defence Technology) அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கத்தின்கீழ்.. டிஆர்டிஓ (DRDO) ஆனது, ஒரு புதிய ஆயுத அமைப்பை (Weapon System) உருவாக்கி, அதை வெற்றிகரமாக சோதனை செய்தும் காட்டியுள்ளது.

அதென்ன ஆயுத அமைப்பு? எம்பிஏடிஜிஎம் (MPATGM) என்றால் என்ன? இந்தியாவின் இந்த புதிய வெப்பன் சிஸ்டமின் முக்கிய திறன்கள் (Major Capabilities) என்னென்ன? "காஷ்மீரில் கால் வைத்தால் காலி" என்று கூறும் அளவிற்கு இந்த எம்பிஏடிஜிஎம் ஆயுத அமைப்பில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ விவரங்கள்:

DRDO-வின் புதிய Anti-Tank ஏவுகணை.. அட்டாக் பண்ற விதமே வேற!

மேன்-போர்ட்டபிள் ஆன்ட்டி-டேங்க் கைடட் மிஸைல் (Man-Portable Anti-Tank Guided Missile) என்பது தான் சுருக்கமாக எம்பிஏடிஜிஎம் என்று அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (Defence Research and Development Organization) உருவாக்கப்பட்டுள்ள ஒரு ஆயுத அமைப்பாகும்.

நவீன கவசத்தால் பாதுகாக்கப்பட்ட பிரதான போர் டாங்கிகளை (Modern armor-protected Main Battle Tanks - MBTs) கொண்ட நாடுகளுக்கு.. இந்தியாவின் ஆன்ட்டி-டேங்க் கைடட் மிஸைல் ஆனது ஒரு எச்சரிக்கை ஆகும். ஏனென்றால் இந்த ஏவுகணையால் எம்பிடி டாங்கிகளை தோற்கடிக்க முடியும்.

DRDO-வின் புதிய Anti-Tank ஏவுகணை.. அட்டாக் பண்ற விதமே வேற!

மேலும் இந்த ஆன்ட்டி-டேங்க் கைடட் மிஸைலில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தாக்கும் திறன், கூடவே டாப் அட்டாக் (Top attack) திறன்களும் உள்ளன. எல்லாவற்றை விட முக்கியமாக, இந்த ஆயுத அமைப்பில் டூயல்-மோட் சீக்கர் செயல்பாடும் (Dual-mode seeker functionality) உள்ளது, இது டேங்க்குகளுக்கு இடையேயான போர் சூழ்நிலைகளில் அட்டகாசமான செயல்திறனை வெளிப்படுத்தும்.

ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் ஃபீல்ட் ஃபைரிங் ரேஞ்சில் (Pokhran Field Firing Range - PFFR) நடந்த சோதனையில், இந்த மிஸைல் எப்படி வேலை செய்யும் என்பது வெளிப்படுத்தப்பட்டது. இது எம்பிஏடிஜிஎம், மேன் போர்ட்டபிள் லாஞ்சர் (Man Portable Launcher), டார்கெட் அக்க்யூசேஷன் சிஸ்டம் (Target Acquisition System (- TAS) மற்றும் ஃபயர் கண்ட்ரோல் யூனிட் (Fire Control Unit - FCU) ஆகியவற்றை உள்ளடக்கியது.

DRDO-வின் புதிய Anti-Tank ஏவுகணை.. அட்டாக் பண்ற விதமே வேற!

இம்மாத தொடக்கத்தில் அக்னி ப்ரைம் பாலிஸ்டிக் ஏவுகணை (Agni Prime Ballistic Missile) சோதனையும் கூட வெற்றிகரமாக முடிந்தது. அக்னி ப்ரைம் என்பது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய வல்லமை கொண்ட இந்தியாவின் புதிய தலைமுறை ஏவுகணை ஆகும். இது ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் (Abdul Kalam Island) இருந்து ஏவப்பட்டு, வெற்றிகரமாக சோதனையும் செய்யப்பட்டது.

இந்த சோதனையின் போது, அக்னி ப்ரைம் பாலிஸ்டிக் ஏவுகணை ஆனது நம்பகமான செயல்திறனை (Reliable performance) உறுதிப்படுத்தும் அனைத்து வகையான சோதனை நோக்கங்களையும் (Trial objectives) பூர்த்தி செய்தது. இந்த தகவல் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்ட பல ரேஞ்ச் சென்சார்களால் (Range sensors) கைப்பற்றப்பட்ட தரவுகளின் வழியாக உறுதியும் செய்யப்பட்து.

DRDO-வின் புதிய Anti-Tank ஏவுகணை.. அட்டாக் பண்ற விதமே வேற!

அக்னி பிரைம், அணுசக்தி திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஏவுகணை ஆகும். இது 1,000-2,000 கிமீ வரை சென்று தாக்கக்கூடிய இரண்டு நிலைகளை கொண்ட கேனிஸ்டரைஸ்டு ஏவுகணை (Two-stage Canisterised Missile) ஆகும். கேனிஸ்டரைஸ்டு என்றால், உருளை வடிவத்திலான ஒரு பொருளுக்குள் இன்னொரு பொருளை வைத்திருக்கும் ஒரு கொள்கலன் போன்ற ஒரு ஏவுகணையாகும். இந்த வடிவமைப்பில் இருப்பதால் இதை சாலை மற்றும் ரயில் மூலம் கொண்டு செல்ல முடியும்.

எல்லாவற்றை விடவும் முக்கியமாக அக்னி ப்ரைம் ஏவுகணை ஆனது முன்னதாக உருவாக்கப்பட்ட அனைத்து அக்னி வகை ஏவுகணைகளையும் விட மிகவும் இலகுவானது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், இது அக்னி 3 ஏவுகணையை விட குறைந்தது 50% குறைவான எடையை கொண்டது மற்றும் புதிய வழிகாட்டுதல் மற்றும் உந்துவிசை அமைப்புகளையும் (New guidance and propulsion systems) கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Anti Tank Guided Missile DRDO New MPATGM Weapon System Add More Power To Indian Army Defence Tech
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X