அம்மாவிடம் திட்டு வாங்காமல் மொபைல் நோண்டுவது எப்படி..?!

Posted By:

எருமை மாடு, சனியனே அப்படி என்ன தான்டா அந்த போன்ல கிழிக்குற..? என்று திட்டாத அம்மாக்கள் மிக குறைவே.. அதுவும், சாப்பிடும் போது லேசாக போனை பார்த்து விட்டால் கூட போதும் நாக்கு முளைக்காத பத்திரகாளியாக கூட சில சமயம் மாறி விடுவார்கள்..!

அம்மாவிடம் திட்டு வாங்காமல் மொபைல் நோண்டுவது எப்படி..?!

சரி, மொபைலை பார்க்காமல் இருக்கலாம் என்றால் அதுவும் நம்மால் முடியவே முடியாது. சாப்பிட உட்காந்தால் போதும், உடனே மெஸேஜ் வரும். நாம என்ன தான் பண்றது, வேற வழியே இல்ல இதை தான் வாங்கி ஆகணும் - ராமென் பவுல்..!

அம்மா ஹேப்பி, மனைவியும் ஹேப்பி..!

உங்க மொபைலை, முக்கியமாக உங்கள் ஐபோனை இந்த பவுலில் அருமையாக பொருத்தி நிறுத்தி வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே சாப்பிடலாம். எந்த விதமான உணவு துகளும், பொருத்தி வைக்கப்பட்டுள்ள மொபைல் மேல், பட்டு விடாதா படி இந்த பவுல் உருவாக்கப்பட்டுள்ளதாம்..!

அம்மாவிடம் திட்டு வாங்காமல் மொபைல் நோண்டுவது எப்படி..?!

மொபைலை சொருகி வைக்கும் அந்த துளையில் இருந்து ஒலி நன்றாக கேட்கும் படியும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் நமக்கு பிடித்த வீடியோவை கூட பார்த்துக் கொண்டே சாப்பிடலாம்..!

அம்மாவிடம் திட்டு வாங்காமல் மொபைல் நோண்டுவது எப்படி..?!

ஒரு பக்கம் சாப்பாடு உள்ள போய்ட்டே இருப்பதால் அம்மாவிடம் திட்டு வாங்குவதும் குறையும் என்று நம்பலாம், மீறி திட்டினா.. வாங்கிக்க வேண்டியது தான்.. வேற வழி..?!

Read more about:
English summary
Never Eat Alone Again With the Anti-Loneliness Ramen Bowl.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot