Home
News

திக் திக் நிமிடங்கள்.. ஒடிஷா ரயில் விபத்தை தடுக்க வேண்டிய KAVACH தொழில்நுட்பம்.. ஏன் வேலை செய்யவில்லை?

இந்திய ரயில்வே (Indian Railways) துறைக்கு "இதுவொரு கருப்பு தினம்" என்று கூறுமளவிற்கு நேற்று (ஜூன் 2) மாலை ஒடிசாவில் மூன்று இரயில்கள் பயங்கரமான விபத்துக்கு உள்ளாகின. இந்த விபத்தில் 238 பேர் பலியாகி உள்ளதாகவும், 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய இரயில் விபத்தாக கருதப்படும் இந்த ஒடிஷா இரயில் விபத்தானது (Odisha Train Accident) எவ்வளவு கொடூரமாக இருந்தது என்கிற "திக் திக் நிமிடங்களை" விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த ஒருவர் விவரித்துள்ள நிலையில்.. இரயில் மோதலை தடுக்கும் மேம்ப்பட்ட தொழில்நுட்பமான 'கவாச்' (KAVACH Technology) ஏன் வேலை செய்யவில்லை என்கிற கேள்வி தற்போது மேலோங்கியுள்ளது.

ஒடிஷா ரயில் விபத்தை தடுக்க வேண்டிய KAVACH தொழில்நுட்பம்!

கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன? கவாச் என்பது ரயில் விபத்துகளை தடுக்கும் நோக்கத்தின் கீழ் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு மோதல்-எதிர்ப்பு தொழில்நுட்பம் (Anti-collision Technology) ஆகும். இது ஏன் ஒடிஷா இரயில் விபத்தை தடுக்கவில்லை என்கிற கேள்விக்கு ரயில்வே அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் (Railway Minister Ashwini Vaishnaw) விளக்கம் அளித்துள்ளார்.

"உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மோதல் எதிர்ப்பு தொழில்நுட்பமான கவாச் ஆனது ஏஐஎல்4 சன்றிதழை (SIL4 certified) பெற்றுள்ளது, அதாவது இந்த தொழில்நுட்பத்தில் 10,000 ஆண்டுகளில் ஒரே ஒரு பிழை மட்டுமே (Single error in 10,000 years) ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.

இதற்கிடையில் இந்திய ரயில்வே துரையின் செய்தித் தொடர்பாளர் ஆன அமிதாப் சர்மா (Indian Railways spokesperson Amitabh Sharma), இரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பாலசோரில் (Odisha Balasore) ஆன்ட்டி கொல்லிஷன் தொழில்நுட்பமான கவாச் கிடைக்கவில்லை (Not Available) என்று கூறியுள்ளார்.

தொழில்நுட்ப அடிப்படையில் கவாச் தொழில்நுட்பமானது ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு (Train Collision Avoidance System - TCAS) அல்லது தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு (Automatic Train Protection System - ATPS) என்று அழைக்கப்படுகிறது. ரயில் விபத்துக்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாகக் குறைக்கும் நோக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருந்தாலும் கூட கவாச் தொழில்நுட்பமானது ஒடிஷா இரயில் விபத்தை தடுக்க உதவவில்லை என்பதே கசப்பான உண்மை!

கவாச் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யும்? கவாச் தொழில்நுட்பமானது 2 இரயில்களின் மோதலை தவிர்க்க, ஒன்றை நோக்கி நகரும் இன்னொரு ரயில் என இரண்டிலும் பொருத்தப்பட்டுள்ள டிவைஸ்களின் நெட்வொர்க்கை (Network of devices mounted on two trains moving towards each other) பயன்படுத்துகிறது.

இந்த டிவைஸ்கள், ரேடியோ தொழில்நுட்பம் (Radio Technology) மற்றும் ஜிபிஎஸ் (GPS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (Global positioning systems) ஆகியவற்றின் உதவியுடன் செயல்படுகின்றன. இந்த அமைப்பானது மோதிவிடலாம் என்கிற அபயாத்தில் உள்ள இரண்டு இரயில்களின் போக்கை துல்லியமாக மதிப்பிட்டு, தானாகவே பிரேக்கிங் அமைப்பை துவக்கி இரயில் விபத்தை தடுக்கும்.

திக் திக் நிமிடங்கள்: ஒடிஷா இரயில் விபத்தில் சிக்கிய ஒருவர் "அது (காதுகளை) செவிடாக்கும் ஒரு சத்தம். என் கால்களுக்கு கீழே நிலம் நடுங்குவதை நான் உணர்ந்தேன். எங்கள் ரயில் பின்னோக்கி நகர்ந்து நின்றது. நான் வெளியே பார்த்தபோது மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் மிக அதிவேகமாக கடந்து சென்றது.."

"..எங்கள் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டதையும், அதில் மக்கள் சிக்கிக்கொண்டதையும் நான் பார்த்தேன். அதன் கீழ் இருட்டாக இருந்தது, அழுகை சத்தங்களையும் நான் கேட்டேன்" என்று கூறியுள்ளார் இன்னொருவர் "பல குடும்பங்கள் நசுக்கப்பட்டன, கைகால்கள் இல்லாத உடல்களையும், ரயில் தண்டவாளத்தில் இரத்தக்களரியையும் பார்த்தேன். அது என்னால் மறக்க முடியாத காட்சி" என்று கூறியுள்ளார்.

Photo Courtesy: Dhyeyaias.com

Best Mobiles in India

English summary
Anti Collision Technology Kavach Didnt Avoid Odisha Train Accident Not Available on Balasore Route
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X