சீன தயாரிப்பு இல்லா ஸ்மார்ட்போன்கள்: இந்தியாவில் சாத்தியமா?., வாடிக்கையாளர்கள் எண்ணம் என்ன?

|

சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் இந்த நேரத்தில் சீன தயாரிப்பு இல்லாத ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் சாத்தியமா, வாடிக்கையாளர்களின் மனநிலை எவ்வாறாக உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

சீன தயாரிப்பு இல்லாத ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் சாத்தியமா

சீன தயாரிப்பு இல்லாத ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் சாத்தியமா

இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையை ஆக்கிரமித்து வருவது பிற நாட்டு தயாரிப்பு மொபைல்கள் தான். சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் இந்த நேரத்தில் சீன தயாரிப்பு இல்லாத ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் சாத்தியமா என்பது குறித்து பார்க்கலாம்.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது.

சீன ஆப்களை விடுங்க மக்களே.! சீன ஆப்களுக்கு மாற்றாக இருக்கும் ஆப்களின் பட்டியல் இதோ.!சீன ஆப்களை விடுங்க மக்களே.! சீன ஆப்களுக்கு மாற்றாக இருக்கும் ஆப்களின் பட்டியல் இதோ.!

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற வார்த்தைகள் டிரெண்டாகி வருகின்றன.

சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும்

சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும்

சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் மேலோங்கி வருகிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்து வரும் பிரதான நிறுவனம் சியோமி, இந்திய சீன பிரச்சனை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் மறுபுறம் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் ஸ்டாக் தீர்ந்தது.

 பிற நாட்டு தயாரிப்புகளுக்கு சரியான நேரம்

பிற நாட்டு தயாரிப்புகளுக்கு சரியான நேரம்

சீன பொருட்களுக்கு எதிராக குரலோங்கி வரும் இந்த நேரத்தில் பிற நாட்டு தயாரிப்பு சாதனங்களான சாம்சங், நோக்கியா, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது பிராண்டுகளை முன்னிலைப்படுத்த சரியான நேரம் என வல்லுநர்கலால் தெரிவிக்கின்றனர்.

பின்பத்தை உடைத்த சீன நிறுவனங்கள்

பின்பத்தை உடைத்த சீன நிறுவனங்கள்

ஆரம்பக்கட்டத்தில் இவர் சைனா மொபைல் வைத்திருக்கிறார் என்று சொல்வதை கேட்டிருப்போம். அதாவது பிற நிறுவன மொபைல்கள் பிராண்டட் மொபைல்களாகவும் சைனா மொபைல் விலைக் குறைந்த மலிவு மொபைல்களாகவும் மக்கள் மனதில் பிரதிபலித்தது. ஆனால் படிப்படியாக சீன நிறுவனங்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து புதுமாடல்களை அறிமுகப்படுத்தி இப்போது சைனா மொபைல்கள் என்ற வார்த்தை மறைந்து அதுவும் பிராண்டட் என எண்ணம் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.

மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள்

மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள்

இந்த நேரத்தில் உற்று நோக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. சீன தயாரிப்பு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் செய்து வருகிறது. இதற்கு இணையான விலையில் தொடர்ந்து பிற உயர்ரக தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குமா என்ற கேள்வி உள்ளது என பொருளாதார வல்லுர்களால் தெரிவிக்கப்படுகிறது.

இப்படி செய்வது முறையாக இருக்கும்

இப்படி செய்வது முறையாக இருக்கும்

இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையை ஆக்கிரமித்துள்ள பெரும்பாலான நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களே., இதில் சீன நிறுவனங்கள், பிற நாட்டு நிறுவனங்கள் என்றே பிரிக்கமுடிகிறது. இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளை அதிகரித்து மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் மட்டுமே சீன நிறுவனங்கள் புறக்கணிப்பது முறையாக இருக்கும் எனவும் பலரும் தெரிவிக்கின்றனர்.

87% பேர் புறக்கணிக்க தயார்

87% பேர் புறக்கணிக்க தயார்

மேலும் லோக்கல் சர்க்கிள்ஸ் சீன தயாரிப்பு புறக்கணிக்க இந்தியர்கள் தயாரா என்ற கேள்வியை முன்னிருத்தி ஆய்வு நடத்தியது. இதில் இந்தியாவில் இருந்து 235 மாவட்ட மக்களிடம் இருந்து சுமார் 32000 பதில்கள் பெறப்பட்டதாக தெரிகிறது. இதில் அடுத்த ஆண்டு சீன தயாரிப்புகள் வாங்குவதை புறக்கணிப்பீர்களா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் பெரும்பாலானோர் அதாவது 87% பேர் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மைக்ரோமேக்ஸ், கார்பன், லாவா

மைக்ரோமேக்ஸ், கார்பன், லாவா

உலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தங்களது பிராண்டு மொபைல்களை அறிமுகப்படுத்தி முன்னிலை படுத்தவே பெரும்பாலான நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போன்களில் பிரதானமாக இருப்பது மைக்ரோமேக்ஸ், கார்பன், லாவா. இந்த சூழ்நிலையில் இந்த மூன்று நிறுவனங்களும் மீண்டும் புதுமாடல் ஸ்மார்ட்போன்களை களமிறக்க உள்ளன.

புதிய மாடல் அறிமுகப்படுத்த தீவிரம்

புதிய மாடல் அறிமுகப்படுத்த தீவிரம்

இது குறித்து மைக்ரோமேக்ஸ் கூறுகையில், இந்தியாவில் மூன்று புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தீவிரமாக உழைத்து வரவதாக தெரிவித்துள்ளது. அதேபோல் கார்பன் இதுகுறித்து கூறுகையில், இரண்டு புதுவகை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தும் என தெரிவித்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ரூ.10,000-க்கு கீழ் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. லாவா நிறுவனமும் 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

YouTube பற்றி நீங்கள் அறியாத 'பகிரங்க' உண்மைகள்! கூகிள் யாரிடமிருந்து யூடியூபை வாங்கியது தெரியுமா?YouTube பற்றி நீங்கள் அறியாத 'பகிரங்க' உண்மைகள்! கூகிள் யாரிடமிருந்து யூடியூபை வாங்கியது தெரியுமா?

வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெருமா

வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெருமா

சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் இந்த நேரத்தில் இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் தங்களது அறிமுகத்தை தொடங்கியுள்ளன. இருப்பினும் அது எந்தளவு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெருகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Anti-China Sentiments: No Chinese Mobile Brands in India: is it Possible

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X