Just In
- 6 hrs ago
ரூ .13,000 விலைக் குறைப்பைப் பெற்ற iQOO3 ஸ்மார்ட்போன்.. புது விலை இதுதான்..
- 6 hrs ago
ஜியோ பயனர்கள் குஷி: பெஸ்டான ஜியோ போன் 2021 ஆஃப்பர் விபரம் இதோ..
- 12 hrs ago
மார்ச் 4: 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 10.!
- 12 hrs ago
விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி: 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு!
Don't Miss
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Movies
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிர்ச்சியளிக்கும் வேகத்தில் உருகிவரும் அண்டார்டிகா பனிப்பாறை!
பூமியின் ஆழமான நிலப்பரப்பின் மேல் அமைந்திருக்கும் பனிக்கட்டியானது தற்போது தள்ளாடும் பரப்பில் இருக்கிறது. கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள டென்மன் பனிப்பாறையின் விரிவான வரைபடமானது, இதுவரை பார்த்திராத மிகவும் மோசமான ஒரு ஆபத்தான அடித்தளத்தை கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதன் வடிவம் இந்த பனிப்பாறையின் மையப்பகுதியை காலநிலை மாற்றத்தால் நம்பமுடியாத அளவிற்கு பாதிக்கக்கூடும்.

250 பில்லியன் டன்
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களில், இந்த டென்மேன் பனிப்பாறை ஏற்கனவே ஐந்து கிலோமீட்டர் (கிட்டத்தட்ட மூன்று மைல்) பின்வாங்கி 250 பில்லியன் டன் அளவிலான பனியை இழந்துள்ளது. இதைவிட மோசமான சூழ்நிலையில், சேதம் மிக அதிகமாக இருக்கலாம்.

3,500 மீட்டர் கீழே
அண்டார்டிகாவில் உள்ள மற்ற பனிப்பாறைகளைப் போலல்லாமல், டென்மேன் குறிப்பாக தடிமனாகவும், கடல் மட்டத்திலிருந்து 3,500 மீட்டர் கீழே ஒரு பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது. மேலும் என்னவென்றால், இது எதிர் திசையில் சாய்ந்து, கடலை நோக்கி இருப்பதிற்கு பதிலாக கடலில் இருந்து விலகி இருப்பதால், எல்லா வித்தியாசங்களையும் ஏற்படுத்தும்.
Xiaomi மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C அறிமுகம்! வாய்ஸ் கண்ட்ரோல் கூட இருக்கா?

அது எதிர்மறையானதாக இருந்து பனிப்பாறை இன்னும் நிலையானதாக இருக்க உதவக்கூடும் அல்லவா? உண்மையில் அப்படி இல்லை. இந்த வடிவம் அதிக சூடான கடல் நீரை கீழே அனுமதித்து பனிப்பாறையின் அஸ்திவாரத்தின் முக்கியமான பகுதிகளுக்குள் ஊடுருவ அனுமதிக்கிறது.

பனிப்பாறை கடலில் மிதக்கும் இடம் கிரவுண்டிங் லைன் என்று அழைக்கப்படுகிறது. இது அரோரா சப் கிளாசியல் பேசினுக்கு 160 கிலோமீட்டர் அல்லது 100 மைல் பின்வாங்கிச் சென்றால், நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடும்.
இந்த எல்லை இன்னும் பின்னால் நகரும்போது, தவிர்க்க முடியாத வண்ணம் தடிமனான மற்றும் அடர்த்தியான பனியை சந்திக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் உருகும் நீரின் அளவு அதிகரித்து கடலுக்குள் வெளியேற அனுமதிக்கும்.

"டென்மனின் மேற்குப் பக்கத்தின் அடியில் உள்ள நிலத்தின் வடிவம் காரணமாக, விரைவான மற்றும் மீளமுடியாத பின்வாங்கலுக்கான சாத்தியங்கள் உள்ளன "என்று நாசாவின் புவியியலாளர் வர்ஜீனியா பிரான்காடோ கூறுகிறார். இதன் பொருள் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் கடல் மட்டம் கணிசமாக அதிகரிக்கும்.
இந்த முழு பனிப்பாறையும் இடிந்து விழுந்தால், கடல் மட்டம் 1.5 மீட்டர் (5 அடி) உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் இது ஒப்பீட்டளவில் சிறிய அளவு இல்லை.

பொதுவாக மேற்கு அண்டார்டிகா உருகுதலால் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்பட்டாலும், கிழக்கு அண்டார்டிகா நாம் முன்பு நினைத்ததை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்ற கருத்தை இந்த ஆய்வு முடிவுகள் ஆதரிக்கின்றன.
1996 மற்றும் 2018 க்கு இடையில் இத்தாலிய விண்வெளி ஏஜென்சியின் செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி, டென்மேன் பனிப்பாறையின் தரைவழி வரிசையில் ஒரு தெளிவான சமச்சீரற்ற தன்மையை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

பனிப்பாறையின் கிழக்குப் பகுதியுடன் ஒப்பிடும்போது, மேற்குப் பகுதி மிகவும் குறுகலாகவும் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும் தோன்றுகிறது. இது விரைவான உருகலுக்கான சிக்கலைக் தெரிவிக்கக்கூடிய செங்குத்தான தொட்டி போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது.
இந்த பனிக்கட்டியின் ஓரங்களில் தீவிரமாக கடல் தொடர்ந்து ஆர்ப்பரித்து இருப்பதால், ஒரு வகையான சாய்வு போல இது செயல்படக்கூடும். கடல் உருகும் பனியை மேலும் மேலும் உட்பகுதிக்கு எடுத்துச் செல்கிறது. இது இன்றைய பனிக்கட்டி மாதிரியில் பெரும்பாலும் கருதப்படாத ஒரு விளைவு ஆகும்.

கடந்த ஆண்டின் இறுதியில், டென்மன் பனிப்பாறை உலகின் ஆழமான நிலப்பரப்பை உள்ளடக்கியது என்று ஆராய்ச்சி முதன்முறையாக வெளிப்படுத்தியது. இது கடலின் சராசரி ஆழத்தை விட ஆழமாகவும், டெட் சீ-யின் கரையை விட எட்டு மடங்கு ஆழமாகவும் உள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190