அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோட்டை போன்ற கட்டடம்! மனிதகுல வரலாற்றை மாற்றி எழுதுமா?

|

பனிபடர்ந்த வடதுருவப் பிரதேசமான அண்டார்டிக் பகுதி மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் இல்லை என்பது நாம் அறிந்த வரலாறு. இந்த வரலாற்றை மாற்றியமைக்கும் வகையில் ஒரு கண்டுபிடிப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. அண்டார்டிக் பனிப் படலத்திலிருந்து ஒரு பெரிய கோட்டை போன்ற கட்டட அமைப்பு வெளிப்பட்டிருக்கிறது. இது மோட்டி மற்றும் பெய்லி (Motte and bailey castle) கோட்டை அமைப்பைப் போன்றுள்ளது.

அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோட்டை போன்ற கட்டடம்!

மண் மற்றும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி அமைக்கப்படும் ஐரோப்பிய வகையிலான கோட்டை வடிவமைப்பிற்கு மோட்டி மற்றும் பெய்லி கோட்டை என்று பெயர். இத்தகைய வடிவமைப்பிலான கோட்டை ஒன்று பனிப்படலத்திற்குள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் புதைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தக் கோட்டை முட்டை போன்ற வளைந்த வடிவமைப்புடன் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அண்டார்டிகா

அண்டார்டிகா

இந்தக் கோட்டை வெளிப்பாடு, அண்டார்டிகா பகுதியில் பழமையான நாகரிகம் ஒன்று இருந்திருப்பதற்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டட அமைப்பு போலத் தோற்றம் அளிக்கும் இந்தக் கோட்டை பற்றிய அனுமானங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது மனித வரலாறு பற்றி ஆராயும் அறிஞர்களுக்குப் மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

செயற்கைக் கோள்

செயற்கைக் கோள்

மனிதர்கள் வாழவே முடியாத பகுதி எனக் கருதப்பட்ட அண்டார்டிகா பற்றிய முற்றிலும் மாறுபட்ட உண்மையை இந்தக் கோட்டை வெளிப்பாடு தொடர்பான கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

பனிப் படலத்தில், செயற்கைக் கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட படங்கள், மிகப் பெரிய கட்டடம் ஒன்று சிதைந்து போனதற்கான அடையாளங்களைத் தெளிவாக உணர்த்தும் வகையில் உள்ளன.

கடுமையான பனிப்பொழிவு

கடுமையான பனிப்பொழிவு

இந்தக் கட்டட அமைப்பு பனிக்குவியலில் கால மாற்றத்தின் காரணமாக இயற்கையாகவே தோன்றியிருக்க வாய்ப்பு உண்டா? என்றும் அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த காற்றின் காரணமாக பல ஆண்டுகளாகப் படியும் பனிக்கட்டிகளால் இயற்கையாக உருவாகும் சஸ்ட்ருகா (sastruga) என்னும் பனிப்படிவ அமைப்பாக இந்தக் கோட்டை இருக்கலாம் எனவும் தொடக்கத்தில் அறிஞர்கள் நினைத்தனர்.

பிரி ரெய்ஸ்

பிரி ரெய்ஸ்

ஆனால், சஸ்ட்ருகா (sastruga) பனிப் படிவுகளின் அமைப்பு காற்று வீசும் திசை மற்றும் வேகத்திற்கு ஏற்ப அமைந்திருக்கும். ஆனால் முட்டை போன்ற வளைவு கொண்ட கோட்டை வடிவத்தில் சஸ்ட்ருகா பனிப்படிவுகள் அமைவது மிக மிக அரிதான செயல்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த, பிரி ரெய்ஸ் (Piri Reis) என்று அழைக்கப்படுகின்ற அஹமது முஹித்தின் என்னும் கடற்படைத் தளபதி, 1513 ஆம் ஆண்டு வடிவமைத்த உலக வரைபடத்தில், அண்டார்டிகா பனிப் பிரதேசம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பனி படராத சமநிலப் பகுதியாக இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. அண்டார்டிகா பனிப் பிரதேசத்தில், தற்போது கண்டறியப்பட்டுள்ள கோட்டை வடிவக் கட்டட அமைப்பையும் பிரி ரெய்ஸின் நில வரைபடத்தையும் (map) ஒப்பிட்டுப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.

பிரமிடு

பிரமிடு

இது போன்ற கட்டட அமைப்புகள், அண்டார்டிகா பகுதியில் கண்டறியப்பட்டு அது தொடர்பாக விவாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்னால், பிரமிடு போன்ற முக்கோண வடிவத்துடன் கூடிய கட்டட அமைப்பு பனிப்படலத்திலிருந்து வெளிப்பட்டிருக்கின்றது. ஆனால் தற்போது வெளிப்பட்டிருப்பதைப் போல கட்டட அமைப்பு இதற்கு முன்னால் தோன்றியதில்லை.

தாமதமாக கண்டறியப்பட்ட அண்டார்டிகா 'விசித்திரம்' - விஞ்ஞானிகள் கவலை.!

தாமதமாக கண்டறியப்பட்ட அண்டார்டிகா 'விசித்திரம்' - விஞ்ஞானிகள் கவலை.!

கிழக்கு அண்டார்டிகாவின் பனிப்படலங்களில் ஆயிரக்கணக்கான அசலான நீல ஏரிகள் தோன்றியுள்ளன என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர், உண்மையில் இதுவொரு கவலை அளிக்கும் கெட்ட செய்தியாகும், பிரச்சினை என்னவென்றால் இந்த வகையான நீல ஏரிகளை இதற்கு முன்பு விஞ்ஞானிகள் கண்டறிந்ததே இல்லை..! கிரீன்லாந்தின் ஐஸ் தாள் ஆனது 2011 மற்றும் 2014 இடையே 1 டிரில்லியன் டன் என்ற ஒரு அபாரமான அளவில் விரைவாக சரிந்து வருகிறது, அதற்கு காரணமாக இந்த ஏரிகள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

8000 ஏரிகள் :

8000 ஏரிகள் :

செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வளிமண்டலவியல் தரவுகளை ஆய்வு செய்ததில் இருந்து 2000 முதல் 2013 வரை கிழக்கு அண்டார்டிகாவில், கிட்டத்தட்ட இதுபோன்ற 8000 ஏரிகள் உருவாகி உள்ளது என்பது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

காலநிலை மற்றும் கடலின் வெப்பநிலை :

காலநிலை மற்றும் கடலின் வெப்பநிலை :

இதில் என்ன விசித்திரம் என்றால் உண்மையில் ஆராய்ச்சியாளர்கள் உயரும் காலநிலை மற்றும் கடலின் வெப்பநிலையால் கிழக்கு அண்டார்டிகா மிகவும் பாதிக்கப்படாத ஒன்று என்பதால் தங்கள் கவனத்தை எல்லாம் அண்டார்டிகா தீபகற்பத்தின் மேல் குவித்து வைத்திருந்தனர்.

கேள்விக்கு பதில் :

அப்படியிருக்க ஏன் இந்த ஏரிகள் ஆயிரக்கணக்கான அளவில் திடீரென்று மூன்று ஆண்டுகளில் படிப்படியாக கிழக்கு அண்டார்டிகாவில் தோன்றியது என்ற கேள்விக்கு பதில் - காலநிலை மாற்றம்.

தொடர்பு :

தொடர்பு :

இந்த ஏரிகள் நேரடியாக அப்பகுதியின் காற்றின் வெப்பநிலையுடன் தொடர்பு கொள்கிறது

கவலை :

கவலை :

ஆகையால் ஏரிகள் அதிகபட்ச மொத்த பரப்பளவு, அத்துடன் ஏரிகளின் ஆழம் ஆகிய விடயங்கள் அந்த பகுதியின் காற்று வெப்பநிலையை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை கொண்டவைகள் என்பது தான் இப்போதைய விஞ்ஞானிகளின் கவலையாகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
ANTARCTICA CASTLE IS A DISCOVERY REWRITES HISTORY: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more