விரைவில் இருக்கு.,கிட்டத்தட்ட 40% ரெடி- இணையவழி குற்றங்களுக்கு எதிராக கரார் நடவடிக்கை: மத்தியஅமைச்சர் அமித் ஷா
கடந்த 7 ஆண்டுகளில் இணைய வழி குற்றங்களை தடுக்க வலுவான உள்கட்டமைப்பு உருவாக்கி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

7 ஆண்டுகளில் இணைய குற்றங்களை சமாளிக்க வலுவான உள்கட்டமைப்பு
நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் கடந்த 7 ஆண்டுகளில் இணைய குற்றங்களை சமாளிக்க வலுவான உள்கட்டமைப்பை உருவாக்கி உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சைபர் கிரைம்: அச்சுறுத்தல்கள், சவால்கள் மற்றும் பதில் குறித்த உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழு கூட்டத்திற்கு அமித் ஷா தலைமை தாங்கினார். அதில், நாட்டின் 16,347 காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் மற்றும் அமைப்புகள் (சிசிடிஎன்எஸ்) செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் 99 சதவீத காவல் நிலையங்களில், புதிதாக நிறுவப்பட்டகாவல் நிலையங்கள் உட்பட 100 சதவீத எஃப்ஐஆர்கள் நேரடியாக சிசிடிஎன்எல்-ல் பதிவு செய்யப்படுகின்றன என குறிப்பிட்டார்.

சைபர் குற்றங்களுக்கு எதிரான பகுப்பாய்வு
சைபர் குற்றங்களுக்கு எதிரான பகுப்பாய்வு கருவிகளை உருவாக்கும் பணியும் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறினார். அதே நேரத்தில் சைபர் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி
அதேபோல் சைபர் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார். தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் போர்டல் (என்சிஆர்பி) போன்ற இணைய குற்றங்களை சமாளிக்க உள்துறை அமைச்சகத்தின் இ-முயற்சிகள் தொடரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் புகார்தாரர்கள் இணையக் குற்றங்களை ஆன்லைனில் தெரிவிக்கலாம்.

தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு
அதேபோல் இதுவரை ஆறு லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன மற்றும் 12776 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு (என்சிடிஏயு) 142 சைபர் கிரைம் தடுப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது மற்றும் 266 மொபைல் பயன்பாடுகளை முடக்கியுள்ளது என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். அதேபோல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய ஏழு கூட்டு சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக் குழுக்கள் (ஜேசிசிடி) அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமித் ஷா, தேசிய சைபர் கிரைம் பயிற்சி மையம் (என்சிடிசி) ஆன்லைன் பயிற்சிக்காக 8075 காவலர்களை பதிவு செய்து 1877 சான்றிதழ்களை வழங்கியதாக குழுவிடம் தெரிவித்தார்.

ஆபத்தும் வளர்ந்துக் கொண்டே வருகிறது
ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றே கூறலாம். பல்வேறு சிறப்பம்சங்கள் ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதே அளவிலான ஆபத்தும் வளர்ந்துக் கொண்டே வருகிறது. முடிந்தளவு ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி
குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்
அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.


Click it and Unblock the Notifications