'சேஃப்' சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியது, அதுவும் விமானத்தில்..

By Meganathan
|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறிய காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன. சேஃப் என்ற முத்திரையுடன் சரி செய்யப்பட்ட கருவிகள் பயனர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

வெடித்தது

வெடித்தது

சாம்சங் நிறுவனம் சரி செய்து மீண்டும் விநியோகம் செய்த கேலக்ஸி நோட் 7 கருவி விமானத்தில் வெடித்தச்சிதறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புகைப்படம்: தி வெர்ஜ்

விமானம்

விமானம்

அப்படியாக சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியானது சவுத்வெஸ்ட் விமானம் 994 இல் வெடித்திருக்கின்றது. கருவியில் இருந்து புகை வெளியேறியதைப் பார்த்தவுடன், பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

செப்டம்பர் 21

செப்டம்பர் 21

விமானத்தில் வெடித்த கேலக்ஸி நோட்7 பயனர், தனது கருவியினை செப்டம்பர் 21 ஆம் தேதி வாங்கியதாகவும். இந்தக் கருவியில் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்யும் சேஃப் மார்க் அச்சிடப்பட்டுள்ளதாகவும், கருவியின் பேட்டரி இன்டிகேட்டரும் பச்சை நிறத்தில் தான் இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சார்ஜ்

சார்ஜ்

வெடிக்கும் முன் கருவியில் 80 சதவீதம் வரை சார்ஜ் இருந்ததாகவும் , விமானத்தில் கருவியை ஆஃப் செய்யக் கோரியதும் அவ்வாறே தான் செய்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புகை

புகை

கருவியைத் தனது பாக்கெட்டில் வைத்ததும் அதில் இருந்து சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் புகை வெளியேறியுள்ளது, உடனே கருவியை தரையில் போட்டிருக்கின்றார். பின் உள்ளே சென்ற பயணி ஒருவர் கருவியில் கீறல்கள் ஏற்பட்டிருந்தது என்றும் தரையில் இருந்த கார்பெட் ஓட்டை ஏற்பட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

சாம்சங்

சாம்சங்

சேஃப் சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியதற்கு சாம்சங் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் - 'குறிப்பிட்ட கருவியை இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை, கருவியின் ஆய்வு முடிந்ததும் கூடுதல் தகவல்கள் பகிர முடியும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பேட்டரி

பேட்டரி

கேலக்ஸி நோட் 7 பிழைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சாம்சங் தொடர்ந்து போராடி வரும் நிலையில், சாம்சங் பிரியர்கள் நிலை - 'காத்துக்கிட்டிருக்கோம்' என்றவாறே இருக்கின்றது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

திரும்பப் பெறப்பட்ட கருவிகள்

திரும்பப் பெறப்பட்ட கருவிகள்

முன்னதாக சாம்சங் நிறுவனம் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கருவிகளை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு மீண்டும் விநியோகம் செய்யப்பட்ட கருவியும் வெடித்திருப்பது பயனர்களுக்கு அச்சம் ஏற்படச் செய்வதாகவே இருக்கின்றது.

தடை

தடை

இந்தியாவில் கேலக்ஸி நோட் 7 கருவிகளை விமானங்களில் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை சில தினங்களுக்கு முன் விலக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Another ‘safe’ Samsung Galaxy Note 7 unit catches fire onboard an aircraft Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X