ஐஎஸ்ஐஎஸ் ஜாக்கிரதை, அனானமஸ் எச்சரிக்கை..!!
பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியதை தொடர்ந்து சமூக ஆர்வலர்களை கடுப்பேற்றியிருப்பதை மட்டும் தெளிவாக காண முடிகின்றது.
தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரனம் மற்றும் ஆறுதல்கள் ஒரு பக்கம் இருக்க, பதில் தாக்குதல் செய்வதில் தீவிரமாக பிரான்ஸ் அரசு ஈடுப்பட்டு வரும் நிலையில் தொழில்நுட்ப ரீதியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு சவால் விடுகின்றனர், அனானமஸ் ஹேக்கர்கள்...

ஹேக்கர்
2003 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சர்வதேச ஹேக்கர் பிரிவு தான் அனானமஸ்.

பதிலடி
பாரிஸ் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பிரபல ஹேக்கர் பிரிவான அனானமஸ் முடிவு செய்துள்ளது.

வீடியோ
அனானமஸ் ஹேக்கர்கள் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு நேரடி சவால் விடுவதை போல் அமைந்திருக்கின்றது.

போர்
இண்டர்நெட் சார்ந்த போர் ஒன்றிற்கு ஐஎஸ்ஐஎஸ் தயாராக இருக்க வேண்டும் என அனானமஸ் வெளியிட்டிருக்கும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ
'நீங்கள் எங்கிருந்தாலும், உங்களை கண்டுபிடிப்போம், கண்டறிந்தால் உங்களை விட மாட்டோம்' என அனானமஸ் வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பெரிய தாக்குதல்
'இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ள ஐஎஸ்ஐஎஸ் தயாராக இருக்க வேண்டும்' என்றும் அந்த வீடியோவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போர்
'சைபர் தாக்குதல்களுக்கு தயாராக இருந்திடுங்கள், போர் உறுதி செய்யப்பட்டு விட்டது' என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

பலம்
'உங்களை (ஐஎஸ்எஸ் தீவிரவாதிகள்) விட ப்ரென்ச் மக்கள் அதிக பலம் கொண்டவர்கள், நீங்கள் செய்ததை விட அதிக கொடூரமான தாக்குதல் ஒன்றை நடத்துவோம்' என்றும் அனானமஸ் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர்
இதே தகவலை அனானமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பு
'ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினை எதிர்ப்பதை நாங்கள் நிறுத்த மாட்டோம்' என்றும் அனானமஸ் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ
அனானமஸ் தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோவினை பாருங்கள்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications