ஐஎஸ்ஐஎஸ் மீது போர், இது தான் அனானமஸ் தந்திரங்கள்..!?

By Meganathan
|

பாரிஸ் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் இதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என்றும் அனானமஸ் எனும் ஹேக்கர் பிரிவினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இண்டர்நெட் மூலம் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த தொகுப்பு அமையும்.

சைபர் போர்

சைபர் போர்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்க்கும் நோக்கில் சைபர் போர் ஒன்றை அறிவித்த அனானமஸ் அதற்கான பணிகளில் மிகவும் தீவிரமாக களம் இறங்கிவிட்டனர் என்றே கூற வேண்டும்.

வெளியீடு

வெளியீடு

ஐஎஸ்ஐஎஸ் சார்ந்த தனிப்பட்ட தகவல்களை அனானமஸ் தொடர்ந்து வெளியிட்டு வருவதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

பட்டியல்

பட்டியல்

இது தொடர்பாக ஐஎஸ்ஐஎஸ் சார்ந்த சுமார் 5500 ட்விட்டர் கணக்குகளின் பட்டியலை அனானமஸ் தயார் செய்திருக்கின்றது.

உண்மை

உண்மை

முன்னதாக நடைபெற்ற தவறு சமீபத்திய தகவல்களின் நம்பக தன்மையை குறைத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்

தாக்குதல்

சைபர் போர் என்றால் என்ன இதன் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என்ற தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

தனிப்பட்ட தகவல்

தனிப்பட்ட தகவல்

ஐஎஸ்ஐஎஸ் சார்ந்த அக்கவுண்ட்களை ஹேக் செய்து அவர்களின் திட்டங்களை அறிந்து கொண்டு தீவிரவாத சம்பவங்களை குறைப்பதோடு, பல தகவல்களை பெற முடியும்.

டாக்சிங்

டாக்சிங்

தீவிரவாதிகளின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது தான் டாக்சிங் முறை ஆகும். பெரும்பாலும் இது போன்ற தகவல்கள் பேஸ்ட்பின் எனும் இணையதளம் மற்றும் 4சான் போன்றவைகளில் வெளியிடப்படும்.

டிடாஸ் அட்டாக்

டிடாஸ் அட்டாக்

குறிப்பிட்ட இணையதளத்தை செயல் இழக்க செய்வது தான் டிடாஸ் அட்டாக். வெவ்வேறு தளங்களில் இருந்து ஒரே ஒரு இணையதளத்திற்கு ஒரே நேரத்தில் நுழைய முயலும் போது குறிப்பிட்ட இணையதளம் முடங்கி விடும்.

கூகுள் பாம் அல்லது கூகுள் வாஷிங்

கூகுள் பாம் அல்லது கூகுள் வாஷிங்

குறிப்பிட்ட இணையதளத்தை யாரும் இயக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட இணையதளத்தினை வேறு ஒரு தளத்துடன் இணைக்கும் முறை தான் கூகுள் பாம். இதைப்போன்று செய்யும் போது குறிப்பிட்ட இணையதளத்தை யாரும் பயன்படுத்த இயலாது.

ஹேக் அக்கவுண்ட்

ஹேக் அக்கவுண்ட்

ஹேக்கிங் வழிமுறையின் முதற்கட்டம் தான் இது. இங்கு குறிப்பிட்ட இயக்கத்தின் சமூக வலைதளங்களை முடக்கி தீவிரவாதிகளை இயங்க விடமால் தடுக்க முடியும்.

ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ்

இது போன்ற சைபர் தாக்குதல்களால் ஐஎஸ்ஐஎஸ் தரப்பில் மிக பெரிய பாதிப்பு இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Anonymous Declares War on ISIS After Paris Attack Here's How They Did It . Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X