ஆப்பிள் வீடியோ ஒளிபரப்பு சேவை விரைவில் அறிமுகம்.!
ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றது. தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான வசதிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது ஆப்பிள் நிறுவனம். இந்நிலையில் வீடியே ஒளிபரப்பு சேவையும் அறிமு
ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றது. தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான வசதிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது ஆப்பிள் நிறுவனம்.

இந்நிலையில் வீடியே ஒளிபரப்பு சேவையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த சேவை வரும் 25ம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐப்பிள் நிறுவனம்:
ஐப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தனி மார்க்கெட் இருக்கின்றது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் தயாரிப்புகளிலும், வடிவத்திலும் தனி முத்திரை படைத்துள்ளது. எந்த நிலையிலும் வைரஸ் தாக்குதலுக்கு ஆகாத நிலையில் இருக்கின்றது.

வீடியோ சேவை:
ஆப்பிள் வீடியோ ஒளிபரப்பு சேவை குறித்த அறிவிப்பை வரும் 25-ம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் சேவை:
மார்ச் 25-ஆம் தேதி ஆப்பிள் தனது தயாரிப்புக்கள் தொடர்பான அறிவிப்புக்களை வெளியிடவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெறவுள்ளதாகக் கூறியுள்ளது.

ஆப்பிளின் அறிவிப்பு:
அப்போது, ஏர்பாட்ஸ் 2, ஏர் பவர் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஐபேட் உள்ளிட்டவை குறித்து அறிவிப்புக்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஒளிபரப்பு:
மேலும், கேப்டன் மார்வல் நடிகை Brie Larson உடன் ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்று மேற்கொண்டுள்ளதாகவும் லைப் அண்டர்கவர் : கமிங் ஆப் ஏஜ் இன் த சிஐஏ ((Life Undercover: Coming of Age in the CIA)) தொடரை ஆப்பிள் டிவியில் ஒளிபரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications