ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புக் பார்த்து எழுதலாம், இணையத்தையும் யூஸ் பண்ணலாம்: அண்ணா பல்கலை., அதிரடி அறிவிப்பு

|

செமஸ்டர் தேர்வில் புத்தங்கள் மற்றும் இணையத்தை அணுகி தேர்வு எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்த முழு அறிவிப்புக் குறித்தும் பார்க்கலாம்.

பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை

பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை

கொரோனா வைரஸ் பரவலையடுத்து பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்தனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீடியோ கால் மூலமாக வகுப்புகளை எடுத்து வந்தனர். கொரோனா பரவல் கொஞ்சம் கட்டுக்குள் வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மெதுவாக கட்டுப்பாடுகளுடன் திறக்கும் நிலைக்கு வந்தது.

தீவிரமடையும் கொரோனா பரவல்

இருப்பினும் கொரோனா பரவல் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக 2884 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 9330-க்கும் மேற்பட்டோர்களுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. அதேசமயத்தில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகின்றனர் என்பதும் ஆறுதலடையும் தகவலாக உள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அதேசூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகள் தேர்வுகளை, தேர்வு நாட்களையும், தேர்வு எழுதும் முறையையும் அறிவித்து வருகிறது. கடந்த முறை மே மாதம் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. ஆன்லைன் மூலமாக நடைபெற்ற இந்த தேர்வில் ஏராளமானோர் தேர்வு எழுதி தோல்வி அடைந்தனர். இதையடுத்து அண்ணா பல்கலைகழகம் தேர்வு எழுதும் முறை குறித்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் பொறியியல் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதத்தில் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வில் கேள்விகள் நேரடியாக கேட்கப்பட்டிருக்காது. அதாவது மாணவர்கள் கேள்விகளை புரிந்து கொண்டு பதிலளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்விகள் புரிந்துக் கொண்டு பதிலளிக்க வேண்டும்

கேள்விகள் புரிந்துக் கொண்டு பதிலளிக்க வேண்டும்

மாணவர்கள் கேள்விகளை சரியாக புரிந்துக் கொண்டு பதில் எழுத வேண்டும். விடை எழுதும்போது மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் புத்தகத்தை அணுகி விடை அளிக்கலாம் எனவும் அதேபோல் தேர்வு எழுதும் சமயத்தில் இணையதளத்தை பயன்படுத்தி விடை எழுதவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவுநேர ஊரடங்கு, வாரஇறுதி நாளில் முழு ஊரடங்கு

இரவுநேர ஊரடங்கு, வாரஇறுதி நாளில் முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது, இரவுநேர ஊரடங்கு, வாரஇறுதி நாளில் முழு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் மாணவர்களின் நலன்கருதி பல்வேறு தேர்வுகளை மத்திய மாநில அரசுகள் ஒத்தி வைத்தும், ரத்து செய்தும் அறிவித்தது. பல்வேறு தேர்வுகளும் ஆன்லைனில் நடக்க வேண்டும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Anna university Announced Students Can Use Books and internets During Online Semester ExamsAnna university Announced Students Can Use Books and internets During Online Semester Exams

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X