வரதட்சணை கொடுமையை மையமாக கொண்ட புதிய வீடியோ கேம்!

Posted By: Staff
வரதட்சணை கொடுமையை மையமாக கொண்ட புதிய வீடியோ கேம்!

விளையாட்டு என்ற விஷயத்தில் கூட நிறைய கருத்துக்களை சேர்க்க ஆரம்பித்துவிட்டன இன்றைய தொழில் நுட்ப உலகம். ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற கேம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பிரபல வீடியோ கேமை அடிப்படையாக கொண்டு புதிய ஆங்கிரி பிரைட் என்ற பெயரில் புதிய வீடியோ கேம் வெளியிடப்பட்டுள்ளது.

பெண் வீட்டில் வரதட்சணை கேட்கும் பழக்கம் இன்னும் ஆசிய நாடுகளில் இருந்து வருகிறது. இதற்கு எதிரான கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் வகையில் புதிய ஆங்கிரி பிரைட்ஸ் வீடியோ கேமை, ஷாதி டாட் காம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்த இணையதளம் திருமண வரன் பார்ப்பதற்காக செயல்பட்டு வரும் ஒன்று.  வரதட்சணை பிரச்சனை மக்களுக்கு மிகவும் பழகிய ஒன்றாகிவிட்டது. இதை மனதில் கொண்டு ஆங்கிரி பிரைட்ஸ் வீடியோ கேம் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஷாதி இணையதளத்தின் உயர் அதிகாரியான ராம் பாம்டி கூறியுள்ளார்.

ஆங்கிரி பிரைட்ஸ் கேமில் வரதட்சணை கேட்டு வரும் ஆணை, ஒரு பெண் கோபம் கொண்டு அடிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை வெறும் விளையாட்டு என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இன்று நிலவி வரும் ஒரு பெரிய பிரச்சனையை தோலுரித்து காட்டுவதாகவும் இந்த வீடியோ கேம் இருக்கிறது.

தற்சமயம் வெளி வந்த இந்த ஆங்கிரி பிரைட்ஸ் ஆப்ஸ் கேம், 2,70,000 மக்களால் விரும்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது போல் வரதட்சணை கேட்கும் ஆண்கள் மேல் இருக்கும் கோபத்தை, இந்த ஆங்கிரி பிரைட்ஸ் ஆப்ஸ் பகிரங்கப்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த விளையாட்டு பெண்களை மட்டும் கவர்ந்துள்ளது என்று அர்த்தம் அல்ல, இந்த விளையாட்டு ஆண்களையும் அதிகம் கவர்ந்துள்ளது என்பதுதான் இந்த வீடியோ கேமின் விசேஷம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot