Just In
- 1 hr ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- 2 hrs ago
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- 3 hrs ago
பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!
- 18 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
Don't Miss
- News
ஜெயலலிதா சொத்துக்கு வந்த புது "பங்குதாரர்!" சென்னை உயர்நீதிமன்றத்தில் "அண்ணன்" மைசூர் வாசுதேவன் மனு
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Movies
'மைக்கேல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
iPhone வச்சிக்கிட்டு ஓவர்-சீன் போடுறாங்களா? "இதை" சொல்லுங்க.. அடங்கிடுவாங்க!
வெளிப்படையாக பேச வேண்டும் என்றால்... நம் கையில் ஒரு ஐபோன் (iPhone) வாராத வரை மட்டுமே, நாம் ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களுக்கு "ஆதரவு" கொடுப்போம்; ஆண்ட்ராய்டு மொபைல்கள் தான் கெத்து என்று குரல் கொடுப்போம். அப்படித்தானே?
ஒருவேளை நீங்களும் ஒரு ஐபோனை வாங்கிவிட்டால், அப்படியே ஆஃப் ஆகி விடுவீர்கள்; இல்லையென்றால் ஒரு கையில் ஆண்ட்ராய்டு; மறுகையில் ஐபோன் என இரண்டிற்குமே பணிந்து பேசி ஒரு நடுவராக உருமாறி விடுவீர்கள்!

ஓவர்-சீன் உடம்புக்கும் ஆகாது; உடமைக்கும் ஆகாது!
எப்படி பார்த்தாலும், ஐபோன்கள் 'வொர்த்' ஆனவைகள் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் அவ்வளவு மட்டமானவைகள் அல்ல!
அப்போது இந்த "ஆப்பிள் vs ஆண்ட்ராய்டு" என்கிற பஞ்சாயத்துக்கு என்ன தான் காரணம்? யார் தான் காரணம்? என்று கேட்டால்.. வேறு யாரும் இல்லங்க - "நாங்க தான் கெத்து; நாங்க தான் பெஸ்ட்டு" என்று 'ஓவர் சீன்' போடும் பார்ட்டிகள் தான்; இவர்கள் செய்யும் அதகளம் இருக்கிறதே? ஆப்பிளும், சாம்சங்கும் கூட அப்படி அடித்துக் கொள்ளாது!

"அந்த வலி இருக்கே.. அந்த வலி!"
ஒரு ஐபோனை வாங்க வேண்டும் என்றால், உங்கள் பாக்கெட்டில் ரூ.40,000-க்கு மேல் என்கிற தொகை இருக்க வேண்டும். இப்படியாக ஒரு ஐபோனை வாங்குவது மட்டுமே கஷ்டமான காரியம் அல்ல; அதை பயன்படுத்துவதும் கூட கஷ்டம் தான்.
"அந்த வலி இருக்கே.. அந்த வலி!", ஒரு ஐபோன் யூசரை கேட்டு பாருங்கள், கதை கதையாக சொல்லுவார்கள்.
இந்த சமாச்சாரத்தின் கீழ் தான், iOS-இல் இருந்து Android-க்கு மாறுவதற்கான ஆதரவு அனைத்து Android 12 போன்களிலும் அணுக கிடைப்பதாக கூகுள் (Google) சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன் கீழ் ஒரு ஐபோனில் இருந்து ஒரு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கு தங்கு தடையின்றி உங்கள் டேட்டாக்களை 'டிரான்ஸ்பர்' செய்யலாம். அந்த கதை வேறு.. நாம் இங்கே பேசுவது அதைப்பற்றி அல்ல!

இனிமேலும் ஐபோன்களை வைத்து பந்தா காட்ட முடியாது!?
"போதும் டா சாமி! ஒரு ஐபோன் யூசராக நான் பட்ட கஷ்டங்கள் போதும், பேசாமல் ஆண்ட்ராய்டு-க்கு மாறி விடலாம்!" என்கிற முடிவுக்கே நீங்கள் வந்து விட்டீர்கள் என்றால், அல்லது "நான் ஏன் ஆண்ட்ராய்டுக்கு மாற வேண்டும்?" என்கிற கேள்விக்கான பதில்களை தேடுகிறீர்கள் என்றால்.. இதோ அதற்கான பதில்கள்!
கீழ்வரும் பதில்களை வைத்து, ஓவர்-சீன் போடும் சில ஐபோன் யூசர்களையும் துவம்சம் செய்யலாம் என்பது கூடுதல் தகவல்; எனவே ஒன்று விடாமல் அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ளவும், Future-ல தேவைப்படலாம்!

01. நிறைய ஆப்ஷன்ஸ், அதைவிட நிறைய அம்சங்கள்!
டிசைன், சைஸ், கலர், அம்சங்கள் மற்றும் விலை ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு டிவைஸ்கள், எண்ணில் அடங்காத விருப்பங்களை வழங்குகின்றன. ஆனால் ஐபோன்களை பொறுத்தவரை, கிட்டத்தட்ட அதே டிசைன், மிகவும் குறைவான கலர் ஆப்ஷன்ஸ், எப்போதுமே அதிக விலை நிர்ணயம்!
இது தவிர ஆண்ட்ராய்டு போன்கள் ஆனது, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஹெட்ஃபோன் ஜாக், ஸ்பிளிட்-ஸ்கிரீன் மல்டிடாஸ்கிங் போன்ற, ஐபோன்களில் இல்லாத பல அம்சங்களையும் வழங்குகின்றன.

கிட்டத்தட்ட எல்லாத்துக்குமே ஒரே சார்ஜர்!
சமீப காலமாக, கிட்டத்தட்ட எல்லா ஆண்ட்ராய்டு போன்களும் ஒரே சார்ஜிங் கேபிள் மற்றும் போர்ட்டை பயன்படுத்துகின்றன, அது யூஎஸ்பிசி டைப்-சி ஆகும்.
அது மட்டுமன்றி லேப்டாப் முதல் நாய்ஸ் ரிடெக்ஷன் ஹெட்செட், எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவ் வரை எல்லாமே USB Type-C ஐப் பயன்படுத்துகின்றன (சுவாரஸ்யமாக, ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபாட்கள் மற்றும் மேக்புக்ஸ் கூட யூஎஸ்பி டைப்-சி ஐப் பயன்படுத்துகின்றன)

மறுகையில் ஆப்பிள்... காசு கொடுத்தால் தருகிறேன் என்கிறது!
கையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்தால், அவசரத்திற்கு எந்தவொரு டைப்-சி சார்ஜரை கொண்டாவது கொஞ்சம் சார்ஜ் செய்து கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு டிவைஸிற்கும் வெவ்வேறு சார்ஜர்களை எடுத்துச் செல்லாமல், எல்லாவற்றையுமே யூஎஸ்பிசி டைப்-சி வழியாக சார்ஜ் செய்யும் ஆப்ஷன் இருக்கும்.
துரதிர்ஷ்டவசமாக, ஐபோன்கள் இன்னுமும் ஆப்பிளின் கஸ்டம் லைட்டினிங் கேபிளையே பயன்படுத்துகின்றன. இன்னும் மோசமான விடயம் என்னவென்றால், ஆப்பிள் இனிமேல் ஒரு சார்ஜிங் ப்ரிக்-ஐ பாக்ஸ் உடன் அனுப்பாது; எனவே ஒன்றை பெற வேண்டும் என்றால் நீங்கள் கூடுதலாக பணத்தை செலவு செய்ய வேண்டும்.

03. நிறைய.. நிறைய ஸ்டோரேஜ்!
ஸ்டோராஜ் விருப்பங்களைப் பொறுத்தவரை, பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுகள் உள்ளன. மறுகையில் உள்ள ஐபோன்களில் ஸ்டோரேஜ் எக்ஸ்டென்ஷன்ஸ் என்று எதுவும் கிடையாது.
அதிக ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்-ஐ வாங்க வேண்டும் என்றால், அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதையும் மீறிய ஸ்டோரேஜிற்கு, iCloud-க்கு மாதாந்திர சந்தாவை செலுத்த வேண்டும்; அல்லது ஐபோனில் ஸ்டோரேஜை உருவாக்க தேவை இல்லாத ஃபைல்களை - கைமுறையாக - டெலிட் செய்ய வேண்டியிருக்கும்!

04. அதிக சுதந்திரம், கண்ட்ரோல்ஸ் மற்றும் கஸ்டமைசேஷன்!
ஆண்ட்ராய்டு ஒரு ஓப்பன் சோர்ஸ் பிளாட்பார்ம் என்பதால், இது iOS-ஐ விட அதிகமான கஸ்டமைசேஷன் விருப்பங்களை வழங்க முடியும்; மற்றும் வழங்குகிறது. உங்கள் ஹோம் ஸ்க்ரீன் தொடங்கி உங்களுக்குப் பிடித்த பாடலை ரிங்டோனாக வைப்பது வரை.. எல்லாமே இங்கே ஈஸி தான்!
ஐஓஎஸ்-ஐ பொறுத்தவரை, சமீபத்திய ஆண்டுகளில் ஆப்பிள் பெரும் முன்னேற்றங்களை கண்டிருந்தாலும் கூட, அது இன்னுமும் ஆண்ட்ராய்டு போன்ற கஸ்டமைசேஷனை வழங்கவில்லை!
உங்களுக்கு பிடித்த ஒரு பாடலை ரிங்க்டோன் ஆக வைக்க முடியாத ஒரு (ஐ)போன் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470