ஆண்ட்ராய்டு போன் பயனரா நீங்கள்? உடனே 'இதை' உங்கள் போனிலிருந்து டெலீட் செய்யுங்கள்..

|

நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனரா? உங்கள் ஸ்மார்ட்போனில் இலவச VPN பயன்பாடுகளைப் பயன்படுத்துபவரா? அல்லது அங்கீகரிக்கப்படாத சில தவறான ஆப்ஸ்களை உங்கள் ஸ்மார்ட்போனில் உங்களுக்கே தெரியாமல் பயன்படுத்திக்கொண்டிருப்பவரா? அப்படியானால், இந்த பதிவை ஸ்கிப் செய்யாமல் முழுமையாகப் படியுங்கள். இதைக் குறிப்பிடப்பட்டுள்ள 8 மொபைல் ஆப்ஸ் இல் ஏதேனும் ஒரு ஆப்ஸ் உங்கள் போனில் இருந்தால் கூட உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அபேஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களே உஷார்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களே உஷார்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது, காரணம், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள சில ஆப்ஸ்கள் மூலம், உங்களுக்கே தெரியாமல் ஹேக்கர்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுரண்டல் செய்யலாம். சமீபத்திய அறிவிப்புப் படி கீழே குறிப்பிட்டுள்ள 8 ஆப்ஸ்களில் இரண்டு புதிய வகை வைரஸ்களின் தாக்குதல் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ்களின் உதவியுடன், ஹேக்கர்கள் புதிய டிஜிட்டல் மோசடி தாக்குதலை ஸ்மார்ட்போன் பயனர்கள் மீது துவங்கியுள்ளனர்.

உங்கள் போனை ஹேக் செய்து, பணத்தைத் திருடும் கும்பல்

உங்கள் போனை ஹேக் செய்து, பணத்தைத் திருடும் கும்பல்

இந்த மால்வேர் உடன் செயல்படும் ஆப்ஸ்களின் உதவியுடன் ஹேக்கர்கள் உங்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சில நொடிகளில் காலி செய்திட வாய்ப்புள்ளது. இந்த 8 ஆப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யும் போது, அது ​உங்களின் மொபைல் எண் அல்லது ஈமெயில் விபரங்களைச் சேகரிக்கிறது. இதன் உதவியுடன், உங்கள் வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஹேக்கர்கள் திருடுகிறார்கள். இத்துடன், உங்கள் வங்கி விபரங்களுடன் உங்கள் வங்கிக் கணக்கையும் ஹேக் செய்து, பணத்தைத் திருடுகிறார்கள்.

ஏது தண்ணிய காணமா?- செவ்வாய் கிரகத்தில் இருந்த அவ்வளவு நீரும் எங்கபோச்சு?- அதிர்ச்சி பதில்!ஏது தண்ணிய காணமா?- செவ்வாய் கிரகத்தில் இருந்த அவ்வளவு நீரும் எங்கபோச்சு?- அதிர்ச்சி பதில்!

புதிய வைரஸால் பாதிக்கப்பட்ட 8 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள்

புதிய வைரஸால் பாதிக்கப்பட்ட 8 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள்

 • Cake VPN (com.lazycoder.cakevpns)
 • Pacific VPN (com.protectvpn.freeapp)
 • eVPN (com.abcd.evpnfree)
 • BeatPlayer (com.crrl.beatplayers)
 • QR/Barcode Scanner MAX (com.bezrukd.qrcodebarcode)
 • Music Player (com.revosleap.samplemusicplayers)
 • tooltipnatorlibrary (com.mistergrizzlys.docscanpro)
 • QRecorder (com.record.callvoicerecorder)
 • வேறு ஒரு நபர் வேறு ஒரு இடத்திலிருந்து உங்கள் போனை அணுக முடியுமா?

  வேறு ஒரு நபர் வேறு ஒரு இடத்திலிருந்து உங்கள் போனை அணுக முடியுமா?

  இந்த 8 ஆப்ஸ்களில் ஏதேனும் ஒரு ஆப்ஸ் உங்கள் போனில் இருந்தால் கூட அவற்றை உடனே டெலீட் செய்யுங்கள். இந்த ஆப்ஸ்கள் மூலம் உங்கள் போனில் MRAT இன்ஸ்டால் செய்யப்படும், அது உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் ஸ்மார்ட்போனை வேறு நபர்கள் வேறு ஒரு இடத்திலிருந்து அணுக அனுமதிக்கும். இதனால், ஹேக்கர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் கூட உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தி அவர்களுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் சேகரித்து உங்களை ஏமாற்ற முடியும்.

  ஏர்டெல் பிராட்பேண்ட் யூஸ் பண்றீங்களா? அப்போ முதல்ல இத படிங்க! இந்த ' பெரிய ' சிக்கலுக்கு இது கூட காரணமா?ஏர்டெல் பிராட்பேண்ட் யூஸ் பண்றீங்களா? அப்போ முதல்ல இத படிங்க! இந்த ' பெரிய ' சிக்கலுக்கு இது கூட காரணமா?

  இலவச VPN ஆப்ஸ் மூலம் சிக்கல்

  இலவச VPN ஆப்ஸ் மூலம் சிக்கல்

  இந்த அபாயகரமான சிக்கலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உடனே உங்கள் போனில் இந்த ஆப்ஸ்கள் இருக்கிறதா என்று முழுமையாகச் சோதனை செய்து பாருங்கள். நம்பிக்கை இல்லாத நபர்களிடம் இருந்து ஷேர் செய்யப்படும் ஆப்ஸ்கள் மற்றும் இலவச VPN ஆப்ஸ்களை ஒரு போதும் உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யாதீர்கள்.

  உங்கள் தகவலை சுரண்ட அதிகம் வாய்ப்பு

  உங்கள் தகவலை சுரண்ட அதிகம் வாய்ப்பு

  இலவசம் என்று உங்களுக்குக் கிடைக்கும் ஆப்ஸ்கள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் தகவலை சுரண்ட அதிகம் வாய்ப்புள்ளது. இந்த தகவல் பற்றித் தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றித் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Android Smartphone Users Alert Delete This 8 Dangerous Apps Immediately : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X