ஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் ஆபத்து.! உடனே இந்த 4 ஆப்ஸை "டெலீட்" செய்யுங்க.!

|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (android smartphone) பயன்படுத்தும் பயனர்களின் கவனத்திற்கு, உடனே உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த ப்ளூடூத் ஆப்ஸ் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்பதை செக் செய்யுங்கள்.

1 மில்லியன் பயனர்களுக்கும் அதிகமான பயனர்களால் இந்த 4 ஆப்ஸ்களும் அதிகமாகக் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ஆபத்தான மால்வேர் (Malware) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Android ஸ்மார்ட்போன் பயனர்களே உஷார்.! புது மால்வேர் எச்சரிக்கை.!

Android ஸ்மார்ட்போன் பயனர்களே உஷார்.! புது மால்வேர் எச்சரிக்கை.!

உங்கள் பிரைவேட் தகவலைப் பாதுகாக்க நினைத்தால், உடனே உங்கள் போனை எடுத்து, இந்த 4 ஆப்ஸ்களில் ஏதேனும் ஒன்றாவது உங்களிடம் இருக்கிறதா என்று செக் செய்யுங்கள்.

அப்படி, ஏதேனும் ஒரு ஆப்ஸ் கூட உங்கள் போனில் இருந்தால், அவற்றை யோசிக்காமல் உடனே டெலீட் செய்யும் படி கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியலை இந்த பதிவுடன் இணைத்துள்ளோம். முழுமையான தகவலை புரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

ட்ரோஜான் குடும்பத்தை சேர்ந்த புது மால்வேர் பாதிப்பு.!

ட்ரோஜான் குடும்பத்தை சேர்ந்த புது மால்வேர் பாதிப்பு.!

கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) தற்போது பயனர்களின் தகவல்களைத் திருடக்கூடிய சில மால்வேர் கொண்ட ஆப்ஸை கண்டறிந்துள்ளதாக புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

மால்வேர் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்ஸ்களின் பெயர்களைக் கூகுள் இப்போது பட்டியலிட்டுள்ளது.

Malwarebytes இன் ஆராய்ச்சியாளர்கள், ட்ரோஜான் (Trojan) குடும்பத்தை சேர்ந்த மிகவும் ஆபத்தான புளூடூத் ஆப்ஸ் மால்வேர் பற்றிய தகவலை Google நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளது.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

ப்ளூடூத் ஆப்ஸ் வழியாக இப்படி ஒரு தாக்குதலா?

ப்ளூடூத் ஆப்ஸ் வழியாக இப்படி ஒரு தாக்குதலா?

இந்த புளூடூத் சென்ட்ரிக் ஆப்ஸின் பழைய பதிப்புகளிள் Android/Trojan.HiddenAds போன்ற மால்வேர் மாறுபாடுகள் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Malwarebytes வெளியிட்ட அறிகையில், "டெவலப்பர் மொபைல் ஆப்ஸ் குழுமத்தின் தீங்கிழைக்கும் பயன்பாடுகளின் குடும்பம், Google Play இல் Android/Trojan.HiddenAds.BTGTHB தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது." என்பதைக் குறிப்பிடுகிறது.

1 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்கள் பாதிப்பு.!

1 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்கள் பாதிப்பு.!

அதேபோல், "மொத்தத்தில், நான்கு பயன்பாடுகளில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுப் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவற்றில் ஒரு ஆப்ஸ் குறைந்தது ஒரு மில்லியன் பதிவிறக்கங்களைச் சேகரித்துள்ளன" என்று Malwarebytes தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது பெரியளவு பயனர்களைத் தாக்கியுள்ளது என்று கூகிள் நிறுவனத்திற்கு மால்வேர்பைட்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?

உடனே உங்கள் போனை செக் செய்யுங்கள்.! தாமதம் வேண்டாம் மக்களே.!

உடனே உங்கள் போனை செக் செய்யுங்கள்.! தாமதம் வேண்டாம் மக்களே.!

இதன் அடிப்படையில், கூகுள் நிறுவனம் இப்போது அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் உடனே ப்ளூடூத் தொடர்பான ஆப்ஸ்கள் எதுவும் அவர்களின் போன்களில் உள்ளனவா என்று செக் செய்ய வலியுறுத்தியுள்ளது.

இந்த பாதிக்கப்படக்கூடிய ஆப்ஸ்கள், பயனர்களின் ஃபோன்களில் ஆட்வேர் பிரச்சாரங்களை இயக்குகின்றன, அவை பயனர்களைத் தாக்குபவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வலைத்தளங்களுக்குத் திருப்பி விடுகின்றன.

இந்த மால்வேர் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

இந்த மால்வேர் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

இந்த டார்ஜான் குடும்பத்தைச் சேர்ந்த தீங்கிழைக்கும் பயன்பாட்டைப் பற்றிப் பேசுகையில், ஒரு பயனர் இந்த பயன்பாடுகளைப் பதிவிறக்கும் போது, ​​தீங்கிழைக்கும் மால்வேர் ஆப்ஸ் சிறிது நேரம் அமைதியாகக் காத்திருந்து, பின்னர் தானாகவே Chrome மற்றும் ஃபிஷிங் வலைத்தளங்களைத் திறக்கிறது என்று மால்வேர் பைட்ஸ் அறிக்கை குறிப்பிடுகிறது.

ஃபிஷிங் தளங்களில் இவை ஒன் டைம் கிளிக் மூலம் மோசக்காரர்களுக்குப் பணம் சம்பாதிக்க அனுமதிக்கின்றன.

BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு "பெரிய" டிவிஸ்ட்.! இந்த மேட்டரை உடனே தெரிஞ்சுக்கோங்க.!

இந்த மால்வேர் ஸ்மார்ட்போன் பயனர்களை பொய்யாக நம்ப வைத்து மோசடி செய்கிறதா?

இந்த மால்வேர் ஸ்மார்ட்போன் பயனர்களை பொய்யாக நம்ப வைத்து மோசடி செய்கிறதா?

இது பெரியளவு தீங்கு இல்லை என்று நினைக்கும் போது, மால்வேர் பைட்ஸ் மற்றொரு ஆபத்தான நடவடிக்கையை இந்த ஆப்ஸ்கள் செய்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.

பாதிக்கப்பட்ட போனின் பயனர்களை தவறாக வழிநடத்தும் ஆபத்தான ஃபிஷிங் வலைத்தளங்களுக்கு இந்த ஆப்ஸ் இழுத்து செல்கிறது.

இவற்றில் சில ஆபாசமான உள்ளடக்கங்கள் மற்றும் பயனர் சாதனம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்பது போன்ற விஷயங்களைக் காண்பித்து அவர்களை மோசடி செய்கிறது.

பாதிக்கப்பட்ட 4 ப்ளூடூத் ஆபிஸ்கள்.. இவற்றை கண்டால் உடனே டெலீட் செய்யுங்கள்

பாதிக்கப்பட்ட 4 ப்ளூடூத் ஆபிஸ்கள்.. இவற்றை கண்டால் உடனே டெலீட் செய்யுங்கள்

புளூடூத் இணைப்பிற்காக நீங்கள் வேறு ஆப்ஸ்களை யூஸ் செய்தால், உடனே இந்த மால்வேர் ஆப்ஸ்கள் உங்கள் போனில் இருக்கிறதா என்று செக் செய்யுங்கள்.


1. புளூடூத் ஆட்டோ கனெக்ட் (Bluetooth Auto Connect)
2. டிரைவர்: புளூடூத் வைஃபை, யூ.எஸ்.பி (Driver: Bluetooth Wi-Fi, USB)
3. புளூடூத் ஆப் செண்டர் (Bluetooth App Sender)
4. மொபைல் ட்ரான்ஸபர் : ஸ்மார்ட் சுவிட்ச் (Mobile transfer: smart switch)

சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?

உடனே டெலீட் செய்யும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது

உடனே டெலீட் செய்யும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது

இந்த 4 பாதிக்கப்பட்ட மால்வேர் ஆப்ஸ்கள் உங்கள் போனில் காணப்பட்டால், அவற்றை உடனே டெலீட் செய்து பாதுகாப்பாக இருக்கும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், Google அதன் Play Store இல் 28 மில்லியனுக்கும் அதிகமான ஆப்ஸ்களைக் கொண்டுள்ளது. அவை மால்வேர் மற்றும் பிற பாதிப்புகளுக்காக வழக்கமாக ஸ்கேன் செய்யப்படுகின்றன.

ஆனால், கூகுள் கண்களில் மால்வேர் ஆப்ஸ்கள் தொடர்ந்து மண்ணை தூவி விடுகின்றன. ஆகையால், எதை இன்ஸ்டால் செய்தாலும் பாதுகாப்புடன் செயல்படுங்கள்.

Best Mobiles in India

English summary
Android Smartphone Users Alert Delete These 4 Bluetooth Apps From Your Device Immediately

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X