10,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஆண்ட்ராய்டு போன் விரைவில் வெளியாகின்றது

By Meganathan
|

எதிர்கால ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி ஒரு புறம் நன்மையை விளைவிக்கும் என்றாலும் இன்றைய ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பேக்கப் அனைவரையும் கவலை பெற செய்கின்றது. எண்ணற்ற சிறப்பம்சங்கள் இருந்தாலும் பயன்படுத்த பேட்டரி இல்லை எனில் சிறப்பம்சங்களுக்கு பயனே இருக்காது.

10,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஆண்ட்ராய்டு போன் விரைவில் வெளியாகின்றது

ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பேக்கப் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சீன நிறுவனமான ஔக்கிடெல் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றது. அந்நிறுவனம் தயாரித்து வரும் கே10000 என்ற ஸ்மார்ட்போனில் 10,000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஔக்கிடெல் 10000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட கே10000 விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கருவியின் பேட்டரி சுமார் ஒரு வாரம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஆண்ட்ராய்டு போன் விரைவில் வெளியாகின்றது

சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது இந்த கருவி 5.5 இன்ச் டிஸ்ப்ளே 720பி ரெசல்யூஷன் குவாட்கோர் மீடியாடெக் எம்டி6735 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்கும் திறனும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரிகளுடன் ஒப்பிடும் போது 10000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வெளியாகும் முதல் கருவி இது தான் என்பதோடு தற்சமயம் சந்தையில் கிடைக்கும் கருவிகள் அதிகபட்சம் 6000 எம்ஏஎச் வரை வழங்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம்: நியோவின்

Best Mobiles in India

Read more about:
English summary
Oukitel is looking to change all that with its upcoming K10000 smartphone; its USP being its massive 10,000mAh battery.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X