10,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஆண்ட்ராய்டு போன்.!!
ஒக்கிடெல் எனும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களை உண்மையாக்கும் விதமாக இந்நிறுவனம் 10,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்திய மதிப்பில் இந்த கருவியின் விலை ரூ.16,000 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த இணைய வர்த்தக நிறுவனம் இந்த கருவியின் முன்பதிவுகளை துவங்கியிருக்கின்றது. அறிமுக சலுகையில் இந்த கருவியின் விலை ரூ.13,500க்கு விற்பனை செய்யப்படும் என்பதோடு ஜனவரி 21 ஆம் தேதி முதல் கே10000 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஒக்கிடெல் நிறுவனம் கே6000 எனும் ஸ்மார்ட்போனினை வெளியிட்டது. இந்த கருவியில் 6000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் கே10000 கருவியை சந்தையில் வெளியிடுவது குறித்து எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை.

10,000 எம்ஏஎச் பேட்டரியை தவிர்த்து இந்த கருவியை பவர் பேங்க் போன்றும் பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒக்கிடெல் கே10000 ஸ்மார்ட்போனினை வைத்து மூன்று ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளை சார்ஜ் செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை ஒக்கிடெல் கே10000 கருவியில் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஈ வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி6735 எஸ்ஓசி மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு எச்டிஆரி, ஃபேஸ் டிடெக்ஷன், பானரோமா உள்ளிட்ட பல ஃபில்டர் மற்றும் கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications