Home
News

கொடுத்து வச்ச Android யூசர்கள்: ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ்-ல் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? சூப்பர்..

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் I/O 2023 நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்று ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ். இந்த புதிய ஒஎஸ் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் சில அம்சங்கள் பற்றி தகவல்களும் வெளிவந்துள்ளன.

குறிப்பாக புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. பின் ஏப்ரல் மாதம் இந்த ஒஎஸ்-இன் முதல் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டது. தற்போது தகுதியுடைய ஸ்மார்ட்போன்களில் இதனைப் பயனர்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ்-ல் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? சூப்பர்..

இந்நிலையில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மூலம் போனின் பேட்டரி ஆரோக்கியத்தைப் பார்ப்பதற்கான விருப்பத்தைப் பெறலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதாவது Esper.io இன் மிஷால் ரஹ்மானின் தகவலின்படி, ஆண்ட்ராய்டு 14 புதிய பேட்டரி மேனேஜர் APIகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பேட்டரி சார்ஜிங் நிலை, தயாரிப்பு தேதி, முதல் பயன்பாட்டுத் தேதி, சார்ஜிங் பாலிசி,பேட்டரி ஹெல்த் போன்ற விவரங்களைத் தெரியப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்போது இந்த பேட்டரி மேனேஜர் API, ஆண்ட்ராய்டு 14 பீட்டா 2 மற்றும் பிக்சல் போன்களுக்கு மட்டுமே கிடைக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் (இயங்குதளம்) இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமானால், அனைத்து பயனர்களுக்கு இந்த புதிய அம்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ்-ல் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? சூப்பர்..

அதேபோல் ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது இதைக் கொண்டு ஹெட்போன்கள், டேப்லட்கள் மற்றும் பல்வேறு சாதனங்களைக் கண்டறிய வைக்க முடிவு செய்துள்ளது. இதைக் கொண்டு பயனர்கள் பல்வேறு சாதனங்களை டிராக் செய்வதோடு, அவற்றைப் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். இதுதவிர வேறு யாரும் டிராக் செய்தாலும், எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த அம்சம் அப்டேட் செய்யப்படுகிறது.

மேலும் புதிய ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் பயனர்கள் தங்களது லாக் ஸ்கிரீனை புதிய ஷாட்கட்கள் மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட கடிகாரங்கள் கொண்டு கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். பின்பு இதன் மூலம் பயனர்கள் தங்களது போனை சுவாரஸ்யமானதாக மாற்றலாம். அதேபோல் எமோஜி வால்பேப்பர் கொண்டு அதிகபட்சம் 14 வித்தியாசமான எமோஜி, ஏராளமான பேட்டன்கள் மற்றும் நிறங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தனித்துவம் மிக்க வால்பேப்பரை ஹோம் மற்றும் லாக் ஸ்கிரீனில் செட் செய்து கொள்ளலாம். இதில் பயன்படுத்தப்படும் எமோஜிக்களை தொடும் போது அவை பாவணைகளை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் சினிமேடிக் வால்பேப்பர் அம்சம் கொண்டு பயனர்கள் எந்தவித போட்டோக்களையும் 3டி படமாக மாற்றி, மோஷன் எஃபெக்ட்களை வழங்க முடியும். பின்பு இவற்றை பேக்கிரவுண்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ்-ல் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? சூப்பர்..

குறிப்பாக கூகுள் நிறுவனம் இந்த ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் பல்வேறு தனித்துவமான அம்சங்களை வழங்க இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனத்தின் பிக்சல் போனகளுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Android Phone Users Can Get Option To View Battery Health: Know How?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X