Just In
- 2 hrs ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 2 hrs ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 3 hrs ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 3 hrs ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
Don't Miss
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆன்ட்ராய்டு பி இயங்குதளம் உங்களுக்கு கொண்டு வரும் ஐந்து புதிய அம்சங்கள்.!
ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்துக்கான பப்ளிக் பீட்டா வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், புதிய இயங்குதளத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பார்க்க முடியும்.
கூகுள் I/O 2018 நிகழ்வில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய டூப்லெக்ஸ் தொழில்நுட்பம் மட்டுமின்றி ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தின் முக்கிய தகவல்களையும் கூகுள் அறிவித்தது. ஆன்ட்ராய்டு பி கூகுள் மொபைல் இயங்குதளத்தின் மிகப்பெரிய அப்டேட் ஆகும்.
ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்துக்கான பப்ளிக் பீட்டா வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், புதிய இயங்குதளத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பார்க்க முடியும். முதல் முறையாக கூகுள் தவிர்த்து மற்ற ஸ்மார்ட்போன்களுக்கும் பீட்டா திட்டம் வழங்கப்படுகிறது. இதனால் கூகுள் தவிர்த்த மற்ற பிரான்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு பி பீட்டா செயலியை பயன்படுத்தலாம்.
ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் பயன்படுத்த பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் தொடர்ச்சியான அப்டேட்களில் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஆன்ட்ராய்டு பி இயங்குதளம் முதலில் வழங்கப்பட்டு விடும். அந்த வகையில் புதிய இயங்குதளத்தில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சங்களில் சிலவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
நியூ நேவிகேஷன் (New navigation)
பெரும்பாலான ஆன்ட்ராய்டு சாதனங்களில் ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் மூன்று டிஜிட்டல் பட்டன்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் ஒற்றை பட்டன் மட்டும் இருக்கும். இதன் ஹோம் பட்டன் பகுதியில் ஜெஸ்ட்யூர்களஐ கொண்டு நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய செயலிகளிடையே ஸ்விட்ச் செய்யவும், ஆப் டிராயரை திறக்கவும் பயன்படுத்தலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் வாரம் முழுக்க குறைந்த அளவு பயன்படுத்தும் செயலியை தெரிந்து கொண்டு, இதற்கான திறனை தானாக குறைத்து, அடிக்கடி பயன்படுத்தும் செயலிக்கு அதனை வழங்கும்.
ஸ்மார்ட் செட்டிங்ஸ் (Smarter settings)
ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் உங்களது ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே பிரைட்னஸ் அளவுகளை அட்ஜஸ்ட் செய்வது குறித்து அதிகளவு புரிந்து கொள்ளும். இதனை நீங்கள் செயலிகளை பயன்படுத்துவதை வைத்தே தெரிந்து கொள்ளும். இந்த இயங்குதளம் பேட்டரி ஆயுளை நீட்டித்து, ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்க டியூன் செய்து கொள்ளும்.
உதாரணத்திற்கு நீங்கள் வாரம் முழுக்க குறைந்த அளவு பயன்படுத்தும் செயலியை தெரிந்து கொண்டு, இதற்கான திறனை தானாக குறைத்து, அடிக்கடி பயன்படுத்தும் செயலிக்கு அதனை வழங்கும்.
ஸ்மார்ட் ஆப் சஜெஷன்ஸ் (Smarter app suggestions)
ஆன்ட்ராய்டு சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தை நன்கு அறிந்து கொண்டு, நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஆக்ஷன்களை உங்களின் டிஸ்ப்ளேவில் ஷார்ட்கட் வடிவில் வைக்கும். இதனால் குறிப்பிட்ட சேவை அல்லது செயலியை மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.
உதாரணத்திற்கு நீங்கள் குறிப்பிட்ட எண்ணிற்கு அடிக்கடி அழைப்புகளை மேற்கொள்வீர்கள் எனில், அந்த கான்டாக்ட் ஷார்ட்கட் வடிவில் ஆப் டிராயரில் சேர்க்கப்படும்.
வெல்பீயிங் அம்சங்கள் (Wellbeing features)
வெல்பீயிங் திட்டம் மூலம் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. ஸ்மார்ட்போனில் ஒருவர் பயன்படுத்தும் நேரத்தை வெகுவாக குறைப்பதை கூகுள் ஊக்கப்படுத்துகிறது.
வெல்பீயிங் திட்டத்தின் ஒரு அங்கமாக ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் பிரத்யேக டேஷ்போர்டு வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் எந்தெந்த செயலிகளை எத்தனை நேரம் பயன்படுத்தி இருக்கிறீர்கள், ஸ்மார்ட்போனினை எத்தனை முறை அன்லாக் செய்துள்ளீர்கள், எத்தனை நோட்டிஃபிகேஷன்கள் உங்களுக்கு வந்தது உள்ளிட்ட தகவல்களை காண்பிக்கும்.
மேலும் ஆப் டைமர் எனும் அம்சம் நீங்கள் குறிப்பிட்ட செயலியில் செலவழிக்கும் நேரத்தை குறைக்கச் செய்கிறது. இதேபோன்று வின்ட்-டவுன் எனும் மோட் ஒவ்வொரு இரவும் நீங்கள் செட் செய்த நேரத்திற்கு சரியாக போனின் டிஸ்ப்ளேவினை கருப்பு வெள்ளை நிறத்திற்கு மாற்றிவிடும். இதன் மூலம் போனினை பயன்படுத்தும் எண்ணம் வராது.
டூ நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb) ன்ற அம்சம் ஷஷ் (Shush) என அழைக்கப்படுகிறது. இது செயல்படுத்தியதும் ஸ்மார்ட்போன் திரை கீழே படும் படி வைத்தால், தானாக டூ நாட் டிஸ்டர்ப் மோட் ஆக்டிவேட் ஆகிவிடும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470