மோட்டோ கருவிகளுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு நௌக்கட்!

By Meganathan
|

வழக்கம் போல நெக்சஸ் கருவிகளுக்கு புதிய வகை ஆண்ட்ராய்டு பதிப்பு கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வந்தது. அதன் படி நெக்சஸ் கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டது. அடுத்து ஆண்ட்ராய்டு நௌக்கட் பெற இருக்கும் கருவிகளில் மோட்டோரோலா இருக்கின்றது. டிராய்டு லைஃப் தகவல்களின் படி மோட்டோ இசட் மற்றும் மோட்டோ ஜி4 மற்றும் மோட்டோ ஜி4 பிளஸ் மாடல் கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் பதிப்பு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

மோட்டோ கருவிகளுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு நௌக்கட்!

மோட்டோரோலா தகவல்களின் படி பயனர்கள் ஆண்ட்ராய்டு நௌக்கட் பதிப்பினை மோட்டோ இசட் மாடல்கள் மற்றும் மோட்டோ ஜி4 கருவிகளுக்கு நான்காம் காலாண்டின் துவக்கத்தில் இருந்து எதிர்பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளதாக டிராய்டு லைஃப் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆண்ட்ராய்டு நௌக்கட் பதிப்பு வழங்கப்படு விடும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மோட்டோ கருவிகளுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு நௌக்கட்!

மோட்டோ இசட் மாடல் கருவிகள் இந்தியாவில் அக்டோப் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. மற்ற மோட்டோ கருவிகளான மோட்டோ எக்ஸ் மற்றும் பழைய மோட்டோ ஜி கருவிகளுக்கும் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றாலும் இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

மோட்டோ கருவிகளுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு நௌக்கட்!

முந்தைய தகவல்களின் படி சோனி நிறுவனத்தின் கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு நௌக்கட் பதிப்பு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. சோனி எக்ஸ்பீரியா இசட் மற்றும் எக்ஸ்பீரியா எக்ஸ் இசட் கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

பழைய ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட்களை வழங்குவதை விட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிய ஆணட்ராய்டு பதிப்பு கொண்ட கருவிகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கூகுள் நிறுவனம் தனது பிக்சல் மற்றும் பிக்சல் எகஸ்எல் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. இரண்டு கருவிகளும் கூகுள் நெக்சஸ் கருவிகளுக்கு மாற்றாகக் களம் இறக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. இரு கருவிகளிலும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Android Nougat coming to Moto G4, G4 Plus and Moto Z lineup Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X