கேலக்ஸி ஸ்மார்ட்போனில் ஜெல்லி பீன் அப்டேஷன் தாமதம்?

ஸ்மார்ட்போன் உலகை கலக்கிய ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எஸ்-3, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த ஸ்மார்ட்போன் புதிய வெர்ஷனான ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக நம் நாட்டில் இந்த ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் அப்டேஷன் வழங்கப்பட இருந்தது. ஆனால் இந்த அப்டேஷன் வசதி தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புதிய செய்தி வெளியாகி உள்ளது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டாலும், இதற்கு இன்னும் வரவேற்பு குறையவில்லை
என்று தான் சொல்ல வேண்டும்.
ஜெல்லி பீன் அப்டேஷன் நிறைய புதிய தொழில் நுட்ப வசதிகளையும் பெறலாம். இதன் ஜெஸ்ச்சர் மோடு ரொம்ப பிரசித்தம். இதில் நவீன தொழில் நுட்பமான ஸ்வைப் ஜெஸ்ச்சர் வசதியை பெறலாம்.
இதன் பிரவுசர் வசதியில் சிறப்பான வீடியோ சப்போர்ட் சவுதரியத்தினை பெறலாம். பர்சியன், ஹிந்தி, மலையாளம், கன்னடா என்று பல மொழிகளை இதில் சிறப்பாக பயன்படுத்த முடியும்.
சூப்பர் ஃபாஸ்ட் சிபியூ மற்றும் மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இதில் மேம்படுத்தப்பட்ட பிரவுசர் வசதியினை பெறலாம். நமது நாட்டின் கேல்கஸி எஸ்-3 வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேஷன் கிடைக்குமா என்பது பற்றிய தகவலை கூடிய விரைவில் பெறலாம்.


Click it and Unblock the Notifications