யாரை அதிகம் நம்பலாம்.? ஆண்ட்ராய்டு பயனர் (அ) ஆப்பிள் பயனர்.? அசிங்கப்படுத்திய ஆய்வு.!

எவர் சிறந்தவர்.? எவர் திறன் மிக்கவர்.? ஆண்ட்ராய்டு பயனர்களா.? அல்லது ஐபோன் பயனர்களா.? என்ற ஆய்வுகள் நிகழ்ந்தன.

|

இது இன்றைய நேற்றைய சண்டையில்லை; ஆரம்பித்த நாள் முதலே ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளத்திற்கும் இடையே நடக்கும் பல்லாண்டு கால யுத்தமாகும்.

யார் விசுவாசி? ஆண்ட்ராய்டு (அ) ஆப்பிள் பயனர்? அசிங்கப்படுத்திய ஆய்வு.!

ஆரம்பத்தில் இந்த இரண்டு ஓஎஸ்-களில் எது சிறந்தது.? எது திறன்மிக்கது.? எது பயனர்-நட்பானது.? போன்ற ஆய்வுகள் தான் நடத்தப்பட்டன. பின்னர் வியாபார நுட்பம் காரணமாக - எவர் சிறந்தவர்.? எவர் திறன் மிக்கவர்.? ஆண்ட்ராய்டு பயனர்களா.? அல்லது ஐபோன் பயனர்களா.? என்ற ஆய்வுகள் நிகழ்ந்தன.

எரியும் தீயில் எண்ணெய்.!

எரியும் தீயில் எண்ணெய்.!

அப்படியாக தொடங்கிய ஆய்வுகளானது, இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை போலொரு பிம்பத்தை ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்றும் ஐபோன் பயனர்களின் மத்தியில் ஏற்படுத்தியது என்றே கூறலாம். ஏற்கனவே எரியும் (ஆண்ட்ராய்டு vs ஆப்பிள்) தீயில் எண்ணெய் ஊற்றுவது போல மேலுமொரு ஆய்வுத்தகவல் வெளியாகியுள்ளது.

மிகவும் நம்பகமானவர்கள்.?

மிகவும் நம்பகமானவர்கள்.?

நுகர்வோர் நுண்ணறிவு ஆராய்ச்சி கூட்டாளர்கள் (CIRP) வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கையின்கீழ் வெளியாகியுள்ள சமீபத்திய ஆய்வின் முடிவொன்று, ஆப்பிள் கருவிகளை வாங்குபவர்களை விட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்கள் தான் மிகவும் நம்பகமானவர்களாக உள்ளன என்று கூறியுள்ளது.

ஏற்றத்தாழ்வுகள்.!

ஏற்றத்தாழ்வுகள்.!

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட இதே போன்றதொரு ஆய்வில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு பயனர்களுமே சரிக்கு சமமாக விசுவாசம் மிக்கவர்களாக, நேர்மையானவர்களாக இருந்துள்ளன. அதாவது இரு இயக்கமுறைமைகளுமே ஆய்வின் முடிவில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சமன் ஆனது.

ஆண்ட்ராய்டுவாசிகளின் நம்பகத்தன்மை.?

ஆண்ட்ராய்டுவாசிகளின் நம்பகத்தன்மை.?

ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டிற்க்கான ஆய்வில் ஆண்ட்ராய்டுவாசிகளின் நம்பகத்தன்மை விகிதமானது 91 சதவீதமாகவும், மறுகையில் உள்ள ஆப்பிளின்பயனர்களுக்கான நம்பகத்தன்மை விகிதமானது ஆனது 86 சதவீதமாகவும் இருந்துள்ளது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
ஒரு காலாண்டு அளவிலான  இடைவெளி.!

ஒரு காலாண்டு அளவிலான இடைவெளி.!

நேர்மை அல்லது விசுவாசம் சார்ந்த விகிதங்களில் கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து சரிக்கு சமமாக தாக்குப்பிடித்து ஆப்பிள் கடந்த ஆண்டு சரிந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்துகொண்ட இந்த ஆய்வானது, ஒரு காலாண்டு அளவிலான இடைவெளியை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Android Beats iPhone in Terms of Smartphone Loyalty: Survey. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X