ஐபோன்களில் இல்லாத சிறந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள்
ஐபோன்களை விட அதிக படியான சுதந்திரம் தான் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் மிகவும் சிறப்பான அம்சமாக இருக்கின்றது. ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களில் கவனிக்கப்பட வேண்டிய அம்சமே அவை பெரும்பாலும் ஐபோன்களில் கிடைக்காது என்பது தான்.
வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள் - அப்படி இதுல என்ன தான் இருக்கு?
ஸ்மார்ட்போன் பயன்பாடுகளை பொருத்த வரை ஒவ்வொரு அப்ளிகேஷன்களிலும் வித்தியாசமான ஒன்றாகவே இருக்கின்றது. ஒவ்வொருவர் பயன்பாட்டிற்கு ஏற்ப பல அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன.
இன்றைய ஸ்மார்ட்போன்களில் இல்லாத 'அந்த கால' சிறப்பம்சங்கள்
தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் சிறந்த அப்ளிகேஷன்களின் பட்டியலை பாருங்கள்..

ம்யூசெய்
இந்த செயலி உங்களது கருவியை அருங்காட்சியக புகைப்படங்களை கொண்டு அலங்கரிக்கும்.

ஆப்லாக் ஃபேஸ்வாய்ஸ் ரெகஃக்னீஷன்
இந்த செயலி உங்களது கருவியை அன்லாக் செய்ய உங்களது முகம் அல்லது குரலை பயன்படுத்தும்.

கூகுள் கீப்
உங்களது மனதில் நினைப்பதை பதிவு செய்து கொள்ள பயனுள்ள செயலி தான் கூகுள் கீப்.

விக்கிலீக்ஸ்
இந்த செயலி கசிந்திருக்கும் தகவல்கள் மற்றும் ஆவனங்களை படிக்க வழி செய்கின்றது.

லைட் ஃப்ளோ
ஸ்மார்ட்போனின் கஸ்டம் எல்ஈடிகளை ஹேக் செய்து குறுந்தகவல், மின்னஞ்சல், போன் கால் என ஒவ்வொன்றிற்கும் தனித்துவம் வாய்ந்த நிறங்களில் செட் செய்து கொள்ள முடியும்.

ஹோவர்சாட்
நீங்கள் எவ்வித செயலிகளை பயன்படுத்தினாலும் உங்களால் இந்த குறுந்தகவல் செயலியை பயன்படுத்த முடியும்.

கவர்
உங்களுக்கு பிடித்தமான செயலிகளை லாக் ஸ்கிரீனில் வைத்து கொள்ள இந்த செயலி உபயோகமாக இருக்கின்றது.

லக்ஸ்
போனின் ப்ரைட்னஸை குறைக்க இந்த செயலி உதவுவதோடு போனில் இருக்கும் செட்டிங்ஸை விட குறைவாக ப்ரைட்னஸை வைத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செரிப்ரஸ்
உங்களது கருவி தொலைந்து விட்டால் இந்த செயலி கொண்டு தொலைந்த போனினை இணையதளம் மூலம் இயக்க முடியும்.

லொகேள்
நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப போனினை கஸ்டமைஸ் செய்து கொள்ள இந்த செயலி உபயோகமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications