அசத்தும் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 : இது தான்யா நிஜமான அப்டேட்.!

By Prakash
|

கடந்த ஆகஸ்ட் மாதம் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய ஓஎஸ் மூலம் நீங்கள் ஒரு செயலியில் இருந்து இன்னொரு செயலியில் காப்பி செய்து பேஸ்ட் செய்வது எளிதாகிவிடுகிறது.

அசத்தும் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 : இது தான்யா நிஜமான அப்டேட்.!

அதேபோல் நீங்கள் காப்பி செய்த விவரங்கள் வேறு எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை சியர்ச் இஞ்சின் மூலமும் தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு. இதனால் அதிக சிரமங்கள் இல்லாமல் பல விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

ஸமார்ட்போன்களில் பயன்படும் ஆப் அப்டேட் செய்யும் போது மெமரி இல்லாமல் அடிக்கடி மெரியை கிளியர் செய்யும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் நிறுவனம் இந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அப்டேட் மூலம் புதிய வழிமுறையை உருவாக்கி தந்துள்ளது.

மெமரி:

மெமரி:

பொதுவாக 16ஜிபி அல்லது 32 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் அதிக ஆப் வசதியை பயன்படுத்தினால் மெமரி பிரச்சனையாக இருக்கும். அந்தவகையில் எக்ஸ்டிஏ டெவலப்பர்கள் இப்போது ஸ்மார்ட்போன் மெமரியை சீராக வைத்திருக்க தீர்வு காணப்பட்டுள்ளது.

ஓரியோ அப்டேட்:

ஓரியோ அப்டேட்:

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அப்டேட் மூலம் ஸ்மார்ட்போனில் மெமரியை ஆக்கிரமித்து கொள்ளும் கேச்சிகளை அழித்து தேவையான
மெமரியை பயன்படுத்த புதிய வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு பயன்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

  கூகுள் மேப்:

கூகுள் மேப்:

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ பொதுவாக டெக்ஸ்ட் மெசேஜில் வந்த முகவரியை நீங்கள் க்ளிக் செய்தால் உடனே அந்த முகவரி கூகுள் மேப்பில் ஓபன் ஆகும். நீங்கள் அந்த முகவரியை காப்பி செய்து அதன் பின்னர் கூகுள் மேப் சென்று பேஸ்ட் செய்து தேட வேண்டிய அவசியம் இருக்காது. ஆண்ட்ராய்டு 8.1 ஓ மேம்படுத்தல் அதன் உயர் சதானத்தில் தற்போது பயன்படுத்தப்படும்.

ஸ்ட்ரீமிங்:

ஸ்ட்ரீமிங்:

ஆண்ட்ராய்டு ஓரியோவின் மீடியா பிளேயர் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் ஸ்ட்ரீமிங் செய்யும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வைபை அவேர் அம்சம் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள்:

ஸ்மார்ட்போன்கள்:

இப்போது வரும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்த ஆண்ட்ராய்டு 8.0.1 ஓரியோ இயங்குதளம் அதிகம் கிடைக்கிறது. மேலும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஓஎஸ்.

Best Mobiles in India

English summary
Android 8.1 Oreo will save space by reducing size of inactive apps; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X